அண்மைய செய்திகள்

recent
-

மரம்........


மரம்
ஆம்மா…அம்மா…இஞ்ச பாருங்களேன் ரக்ரர் எல்லாம் வருது சனங்கள் வந்து இறங்கினம் அந்தோனியார் கோவிலை சுற்றி துப்பரவு செய்யப்படுகின்றது அங்கு சிறிய கூடாரங்கள் அமைக்கப்படுகின்றது வந்த சனங்களை அந்த கூடாராங்களில் அமர்த்ப்படுகின்றார்கள் ....

ஒக்கம கட்டிய பைன்ட கைகளில் பைகளோடு இறங்குகின்றார்கள் கண்ணில் துக்கங்களோடு குடும்பங்களாக சென்றவர்கள்  தனியாக ஒரு குடும்பத்தில் தாயும் மகனும் மற்ற குடும்பத்தில் தகப்பனும் மகனும் அடுத்த குடும்பத்தில் இரு பிள்ளைகள்  சிலர் புதுக்குடும்பங்களாக பலர் தனியாக...... அநாதையாக...... இழந்தவைகள் உடமைகள் மட்டுமல்ல உறவுகளும் உயிர்களும் உணர்வுகளும் தான் எஞ்சியிருப்பதும் இழந்த உணர்வுகள் தான் கரைந்த கண்ணீர்க்கனவுகள் தான்..................

பெரும் இரைச்சலோடு வந்து நின்றது ராணுவத்தினரின் ரக்வண்டி அதில் இருந்து தளபதிகள் உட்பட பலர் இறங்கினர் ஏனோ பயம் ஏற்பட வில்லை காரணம் முகாமிற்குள்ளும் முள்வேலிக்குள்ளும்  இருந்து பட்ட அனுபவங்கள் பட்டை தீட்டிய பின்பு பயப்பட என்ன இருக்கின்றது பழகிப்போய்விட்டது.

இருப்பினும் முழக்கம் போகவில்லை கிராம அலுவலர் வந்து இறங்கினார் எல்லோரும் வரிசையில் வாருங்கள் என்று சொன்னதும் எல்லோரும் வரிசையில் ம்ம்ம்..... வாருங்கள் ஏதோ தரப்போகின்றார்கள் வாருங்கள் வரிசையில் நிற்போம் இதுவும் பழகிப்போன விடையம் தான்.
 முகாமிற்குள் சாப்பாடு முதல் குளிப்பது மலம் கழிப்பது உறவினர்களைப்பர்ப்பது எல்லாமே வரிசையில் நின்று தானே போக வேண்டும் அந்தப்பழக்கம் தான்….
முண்டியடித்துக்கொண்டு முன்னுக்கு வந்தாள் முனியம்மா முதலாவது ஆளாக வந்து நின்றாள் கிராம அலுவலர்  மூக்கில் கைவைத்தபடி பெயரை சொல்லுங்கள் முனியம்மா… எத்தனை பேர் குடும்பத்தில 6 பேர் இருந்தம் யுத்தத்தில்  குண்டு விழுந்ததில் நான்கு மாண்டு போனது தடுப்பு முகாமில் சந்தேகத்தில் போனது நான் மடடும் தான் மிச்சம்…அருகில் நின்ற பூமணி இதுவும் சாகப்போகுது  சரியம்மா…. மற்றாள் வாங்கோ சின்னப்பு ஜயா குடும்பத்தில் எத்தனை பேர்....? என்னப்பு.....? இவருக்கு காது கேட்காது இவரும் பேத்தியும் தான் இருக்கினம். மற்றாள் வாங்கோ… கையில் குழந்தையோடு என்ன பேர் ஐஸ்வரியா நானும் என்ர பிள்ளையும் தான் புருஷனை சுட்டுக்கொண்டுட்டாங்கள்......இப்படியாக பதிவுகளை மேற்கொண்ட கிராம அலுவலர் மேலே வானத்தினை பார்த்துக்கொண்டிருந்தார்  முனியம்மா யாரைப்பார்த்து கொண்டிருக்கிறீர்கள் அங்கு யாரும் இல்லை கடவுள்கள் இறந்து கனகாலம் ஆகிற்று நம்மட உறவுகளின்ர ஆத்மாதான் அலையுது…

மதியம் இரண்டரையை தாண்டியது வாருங்கள் ஐயா.... சாப்பிடுவம் காலையில் கொடுத்த வெள்ளை அரிசி சோறாக பருப்பு குழம்பாக நெத்தலிச்சொதியுடன் பரிமாறப்பட்டது மதியஉணவு சாப்பிட்டவர் சிறிது நேரம் கண்ணயர்ந்தார். காதினில் அழுகுரல் சத்தம் கண்விழித்துப்பார்க்கிறார் அருகினில் விதவைப்பெண்கள் தலைவிரிகோலமாய்….அங்கே பாருங்கோ நாளைக்கு தற்காலிக வீடு தருவார்கள் தகரக்கொட்டில் 6மாதம் கழித்து உங்கள் ஒவ்வொருவருக்கும் காணியளந்து வீடு கட்டித்தருவார்கள் கவலை வேண்டாம்….

அவர் சொன்னது போலவே தற்காலிக தகரக்கொட்டிலும் தந்து 6மாத இடைவெளியில் கல்வீட்டுக்கான காணியும் வழங்கப்பட்டு வீட்டுத்திட்ட வேலைகளும் ஆரம்பமானது பற்றையாய் கிடந்த காடுகள் துப்பரவானது அதுவும் பெரிய கனரக வாகனங்கள் மூலம் சுகந்திர மாக வாழ்ந்த காட்டு உயிரினங்கள் இடம்பெயர்ந்தன சில உயிரினங்கள் பாரிய வாகனத்தின் சில்லுக்குள் சிக்கி இறந்தன பல பறவைகள் தமது குஞ்சுகளை பறிகொடுத்து இருப்பிடத்தினை விட்டு பறந்தன……

சிறு சிறு காணிச்சண்டைகள் சச்சரவுகள் கடந்து வீட்டுத்திட்டம் நிறைவடைந்து குடியேறினர் பல நிறுவனங்கள் மூலமும் பலவகையான வாழ்வாதாரங்கள் வழங்கப்பட்டது அபிவிருத்தி வேலைகள் நடைபெற்றது மக்கள் கொஞ்சம் மீண்டுவருவதாக செய்தி பரவியது ஆம் யுத்தத்தின் பின் வீட்டுத்திட்டம் வழங்கலாயிற்று சரி இருண்டு கிடக்கும் மக்களுக்கு இலவசமின்சாரம் வழங்கி ஒளியூட்டுவோம் என்று அரசாங்கத்தினரால் மின்சாரம் வழங்கப்பட்டது.

மின்சாரப்பணிகள் ஆரம்பமாக பாதை விஸ்தரிப்புக்காக மரங்கள் அழிக்கப்பட்டன வீட்டுதட்திட்டத்திற்காக மரங்கள் அழிக்கப்பட்டன தற்போது மின்சாரம் வழங்குவதற்காக வீதியின் இரண்டு கரையிலும் பல கிளை பரப்பி இந்த கொடிய யுத்தங்களுக்கு சன்னம் செல்லடிக்கு தாக்கு பிடித்து நின்ற மரங்கள் யுத்த நேரத்தில் பலரின் வீடாகவும் இருந்த மரங்கள் பல வீரரின் உயிரை காப்பாற்றிய மரங்கள் இன்று வெட்டுவதற்காக அடையாளமிடப்பட்டு தமது இறுதி நாட்களை நெருங்கிக்கொண்டு இருந்தது .....

தடுப்பு முகாம்களில் விசாரனைக்காக பெயர்பட்டியலில் குறிப்பிடப்பட்ட நமது உறவுகள் போல….
அந்த நாளும் வந்தது வீதிகள் எங்கும் பெரிய மிசின்கள் மூலம் அடையாளமிடப்பட்ட மரங்கள் வெட்டப்படகின்றது.

அந்தோனியார் கோவிலுக்கு முன்னாள் நின்ட அந்த மரமும்…. ஆம்மா அம்மா இங்க பாருங்கோ நாங்கள் வசிக்கும் எங்கள் வீடாகிய மரத்தினை வெட்டுகின்றார்கள் தாய்க்குருவியிடம் சேய்க்குருவி கண்ணீரோடு கூறியது யுத்தத்தின் போது தான் உனது அப்பா இறந்து போனார் அத்தனை கொடிய யுத்தத்தில் இருந்து தப்பிவாழ்ந்தோம் இன்று யுத்தம் இல்லை ஆனாலும் நாம் வாழ்வு கேள்விக்குறியாகத்தான் உள்ளது கதைத்து கொண்டு இருக்கும் போதே மடார் என்றொரு பெரும் சத்தம் சரிந்தது....

 அந்த மரம் விழுந்த வேகத்தில் அந்தக்குருவியின் தாய்க்கு பலத்த காயம் ஏற்பட அதனது இரண்டு சகோதரிகளும் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது என்ர ஐயோ..... அம்மா இங்க பாரம்மா....... என்ர தம்பியும் தங்கையும் இறந்திற்றாங்க வாங்கம்மா போவம் தாய்க்குருவி என்னால முடியாதம்மா நீ போ.... நீ போ...... என்று சொல்லும் போதே அந்த இரும்புச்சக்கரம் தாய்க்குருவியையும் சகோதரககுருவியையும் நசுக்கியது அப்படியே மயங்கி விழுந்த அந்தக்குருவி…. ஆடல் பாடல் சத்தங்கள் சந்தோசமாய் காட்டினில் கொட்டில்களில் குப்பி விளக்கினில் வாழ்ந்ததுகளுக்கு கல்வீடு மின்சாரம் தொலைக்காட்சி சொகுசான வசதிகள் கண்ணை மறைத்து தான் இருந்தது கண்ணை மெல்ல சிறந்து பார்க்கிறேன்  என்முன்னே ஒரு சிறுவன்...... சிறகை விரிக்கிறேன் நான்.......! சிறையில்…..!


-வை- கஜேந்திரன் -
மறுபிறப்பு சிறுகதை தொகுப்பிலிருந்து.

மரம்........ Reviewed by Author on October 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.