அண்மைய செய்திகள்

recent
-

வெளியில்…………………………….



            
வாழ்வில் நம்பிக்கை இல்லாமல் செய்தகாரியங்களினால் கைகட்டி கம்பிக்குபின்னால் நிற்கும் கூட்டம் அது எண்ணற்ற கனவுகளின் சிதைவிடம் இன்னொரு உலகத்திற்கான உணர்வுகளின் உறைவிடம் ஆம் அது ஒரு சிறைச்சாலை அங்கு இருப்பவர்கள் என்ன புனிதர்களா…என்று கேட்பது புரிகிறது கைதிகள் தான் குற்றவாளிகள் தான் ஆனாலும் சிறையில் இருப்பவர்களைவிட வெளியில் இருப்பவர்கள் சுற்றவாளிகள் நீதிவான்கள் என்று சொல்லிவிட முடியுமா….. உண்மை யாதெனில் அவரவர் சுயரூபம் தெரிந்ததாலும் தன்னையறியாமலும் செயற்பட்டதினால் கைதிகளாக சிறையில் வாடுகின்றார்கள் வாழ்க்கையை தொலைத்து…..

நம்மில் ஏராளமானோர் எண்ணற்ற போலி முகங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் நடித்துக்கொண்டிருக்கின்றோம் பணபலமும் ஆதிகார பலமும் உள்ளவர்களுக்கு காவலாக….. வேலியாக சட்டம் இருக்கும் போது சாட்சி சொல்ல கடவுள் வந்தாலும் அவனும் கைதிதான் சிறையில் தான்………
சுகி அழகானவள் அறிவானவள் என்று செல்வதை விட அன்பானவள் அரவணைப்பவள் பொதுநலமுள்ளவள் என்றால் நன்றாயிருக்கும் அதுவும் அவள் சிறந்த மனநலமருத்துவர் மட்டுமல்ல உளவியல் நிபுணரும் கூட அவள் தானகவே விரும்பி ஏற்றிருக்கும் பொறுப்பு….

அந்த சிறைச்சாலை அதிகாரி ஒவ்வொருவராக கொலை கொள்ளை கற்பழிப்பு ஆட்கடத்தல் லஞ்சம் ஊழல்  தடைசெய்யப்பட்ட போதை அறிமுகப்படத்தினார்………….. அங்கே ஒரு கூட்டம் ஆம் அந்தக்கூட்டம் தம்மினவிடுதலைக்காய் போராடிய முன்னாள் போராளிகள் தலைகுனிந்தவள் சிறிது மணித்துளிகள் கண்ணை மூடி திறந்தாள் கண்ணீர் துளிகள் சிந்தியது வந்து போயிருக்கும் அந்தக்கணங்கள்……..
இப்போது அதிகாரி கண்ணை மூடுகின்றார் சுகி அதிகாரியை பார்க்கிறாள் என்ன சேர்……மௌனம் கலைத்த அதிகாரி மேடம் இவர் இவர் நடுக்கத்துடன் 20கொலைக்கு மேல் செய்த கொலைக்குற்றவாளி மட்டுடல்ல தூக்குத்தண்டணைக்கைதி…

20கொலைகள் செய்தவனா….படுபாவி மனிஷனா இவன்….
மேடம் அவர் ஒரு வைத்தியர் சத்திரசிகிச்சை நிபுணர்……
சத்திர சிகிச்சை நிபுணரா….. இப்படிச்செய்தான்…..
சும்மா…இல்ல மேடம் மூன்று முறை சிறந்த மருத்துவர் விருது பெற்றவர் அத்தோடு லண்டனில் மருத்துவத்துறைக்கான தங்கபதக்கமும் பெற்றவர்…
யாராய் இருந்தல் என்ன கொலைகாரனை தூக்கில் போடவேண்டியது தானே ஏன் இன்னும் இவனை உயிரோடு விட்டிருக்கி;ன்றார்கள் என்று பொங்கினாள் சுகி….
மேடம் இவர் கொலைக்குற்றவாளிதான் ஆனாலும்…ஆனாலும் என்ன சேர் இவர் இதுவரை பலரின் உயிரை காப்பற்றியவர் எண்ணற்ற சத்திரசிகிச்சையினை மேற்கொண்டு எந்த நபரும் நலமுடன் வாழ்கின்றார்கள் தனது தொழில் என்று செய்யாமல் சேவையாக செய்தவர் இவரது காலம் பொற்காலம் என்பார்கள் அப்படியான மருத்துவர் ஏன் இப்படி என்றுதான்…..செல்லிக்கொண்டிருக்கும் போதே நிமிர்ந்தான் அந்த கொலைகார மருத்துவன்…பயத்துடன் திரும்பிய அதிகாரி நான் வாறன் மேடம்….
சுகி அவனை  ஒரு கொடிய மிருகத்தைப்போல கண்ணில் நெருப்புக்குழம்போடு பார்க்கிறாள்…..
இருபதுபேரைக்கொலை செய்திருக்கின்றாயே அதிலும் பதினைந்து பெண்கள் நீயெல்லாம் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவன் தானே உனக்கு மனைவி பிள்ளைகள் சகோதரிகள் இல்லையா….நீ மனிதப்பிறவி தானா… சுகியின் கேள்விக்கனைகள் அவனை எதுவுமே செய்யவில்லை அசட்டுத்தனமாக பார்த்தவன்

நான் கொலை செய்தவர்கள் எல்லாம் உத்தமர்கள் இல்லை பிறர் வாழவி;ல் உலைவைத்தவர்கள்……..
அதுவும் பெண்கள் சீதையோ சவித்திரியோ  கண்ணகியோ இல்லை எல்லா பெண்களும் தப்பானவர்கள் இல்லை தப்பான பல பெண்கள் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றார்கள் அந்த கறுப்பாடுகளை பெண்ணினத்தின் மேன்மையை சீரழிக்கின்றவர்களைத்தான் கொலைசெய்தேன்.செய்வேன்….

காதல் என்ற போர்வையில் ஏமாற்றித்திரியும் பெண்களை….
பணத்திற்காக கணவனை கொலை செய்யும் பெண்களை….
பெற்ற பிள்ளைகளை குப்பதை;தொட்டிலில் வீசும் பெண்களை….
தப்பான முறையில் சுகத்திற்காய் பிள்ளை வயிற்றிலே கரைப்பவள்…
கணவன் இருக்க களவாக பிற ஆண்கள் தொடர்பு கொண்டிருந்தவள்…
கடவுள் என்று கைகூப்பி வேண்டும் நோயாளர்களிடம் தவறாக நடந்த மருத்துவனை
ஏமாற்றி நம்பிக்கை துரோகம் செய்தவனை…..
காமத்திற்கும் பணத்திற்கும் சொகுசு வாழ்வுக்கும் அலையும் ஆண்களையும் பெண்களையும் தான் கெட்டது அல்லாமல் பலரின் வாழ்வை சீரழித்து நாசமாக்கும் சிலரைத்தான் அதுவும் என்னிடம் சிக்கியவர்களைத்தான் கொலை செய்தேன் இன்னும் செய்வேன் செய்வேன் பற்களை நறுமியவனாக…. இந்த உலகில் ஏராளமான பச்சோந்திகள் வாழ்கின்றன…. 
மீண்டும் தொடர்ந்தான்….அவளைத்திருமணம் செய்ததில் இருந்து எந்தப்பெண்ணையும் ஏறெடுத்துப்பார்த்தில்லை என்விரல் கூட தப்பான எண்ணத்தோடு பட்டதில்லை…நான் மருத்துவராக இருந்த காலத்தில் எத்தனை பெண்களை சந்தித்திருக்கின்றேன்  பெண்நோயாளிகளுக்கு பெண்மருத்துவர்கள் வைத்தியம் பார்க்க வேண்டும் என்ற கொள்கையுடையவன் நான் ஏன் எனில் பெண்கள் இயல்பாகவே தனது பிரச்சினைகளை பகிர்ந்து கொள்ளமாட்hள் அப்படி பகிர்ந்து கொண்டால் அது நம்பிக்கைகுரியவர்களோடு மட்டும் தான் எல்லா விடையங்களையும் எல்லாரிடமும் சொல்லிவிடமுடியாது அப்படியிருக்க ஒரு ஆண்மருத்துவரிடம் எப்படி தனது முழுமையான பிரச்சினையை சொல்லுவாள் கூச்சம் வெட்கம் பயம் இன்னும் பலவிடையங்கள் அவளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பெண்மருத்துவர் என்றால் நண்பணிடம் பகிர்வது போல இருக்கும் எனது இக்கொள்கைக்கு எனது மேல்மருத்துவ அதிகாரி சொல்லுவார் வைத்தியர் என்று வரும் போது ஆண்பெண் என்று பேதம் இல்லை வைத்தியர் என்ற எண்ணம் உங்களுக்கும் நோயாளிகளுக்கும் இருக்க வேண்டும் ஏனெனில் உயிர் சம்மந்தப்பட்ட விடையம் ஒவ்வொரு மருத்துவரும் நோயாளிகளுக்கு கடவுள் போல தான் தோண்கின்றார்கள்......

 அப்படியிருந்தும் சில வைத்தியர்கள் தங்களது சேவையினை உதாசீனம் செய்து சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் தப்பாகவும் அதேவேளை கொலையும் செய்துள்ளார்கள் அவர்களில் சிலரையும் கொலைசெய்துள்ளேன்.  நம்பிக்கை தான் வாழ்க்கை அந்த நம்பிக்கைக்கே துரோகம் செய்தால் வாழ்க்கை அழிந்து விடும் அல்லவா பிறகேன் வாழ்வு அதுதான் சீரழிப்பவர்களை விட்டுவைக்காமல் போட்டுத்தள்ளிவிட்டேன்…..

பெண்மைகள் உண்மையாக இல்லை ஆனால் தாய்மை உண்மையானது தாயானவள் பிள்ளைகளைப்பெறும் அனுபவிக்கும் வலிக்கு நிகராய் உலகில் ஏதும் உண்டா….என்ற கேள்வியை அவன் கேட்க…
வியந்து போனாள் சுகி….தான் கேட்க இருந்த கேள்வியை இவனே கேட்கின்றான். சுகியின் மனதில் அவன் நல்லவன் தான் இவனை இவனது வாழ்வை மாற்றியதுதான் என்ன…சிந்திக்க
எனது முதலாவது கொலையாளியே எனது மனைவிதான் என்றான் அவன்…..
திடுக்கிட்டுப்போனாள் சுகி….இடி இறங்கியது உச்சியில்…..

எனது குடும்பம் மகிழ்ச்சியாகத்தான் போய்க்கொண்டிருந்தது இரண்டு அழகான குழந்தைகள் ஆண் ஒன்று பெண் ஒன்று அருமையான வாழ்க்கை இதற்கிடையில் தான் எனக்கு பதவிஉயர்வோடு இடமாற்றமும் பெற்று மாற்றலாகிவந்த பின்பு எனது மனைவியோடும் பிள்ளைகளோடும் செலவழிக்கும் நேரம் குறைவானது.

மாதங்களுக்கு ஒரு தடைவ சென்று வந்தேன் பின்பு
இரண்டு மாதங்களுக்கும் ஒரு தடவை விடுமுறையில் சென்று வந்தேன் வைத்தியசாலையில் நேரத்தினை அதிகமாக செலவு செய்தேன் எனது மனைவி பிள்ளைகள் தனிமையில் வாழத்தொடங்கி;னாள். நான் எனது பணிகளை சரியாக செய்தேன் அதனால் பல நோயாளிகளின் விருப்பத்திற்குரிய வைத்தியராக இருந்ததினால் எனது நேரம் முழுமையாகக வைத்திய சேவையிலேயே இருந்தது தூங்கும் அந்த ஐந்து மணித்தியாலங்களைத்தவிர…..

இப்படியாக பொதுச்சேவையில் நான் இருக்க என்னை வெறுக்கத்தொடங்கியது எனது குடும்பம் மாதம் மாதம் பணம் அனுப்பினேனே தவிர அவர்களோடு மனம்விட்டுப்பேசவோ அவர்களின் சுகதுக்கங்களில் மகிழ்ச்சியில் கலந்துகொள்ளவே முடியவில்லை…..
அவள் தனது தனிமையினையும் ஆசையினையும் சுகத்தினையும் போக்கிக்கொள்ள இன்னொரு ஆடவனை நாடினாள் அயலார் உற்றார் சொல்லும் போதெல்லாம் நான் நம்பவில்லை ஏன் எனது தாய் சொல்லும் போது கூட நான் நம்பவில்லை அந்தளவிற்கு அவள் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தேன்….

அவளோ என்னிடம் நம்பிக்கைக்குரியவளாக இல்லை நான் அந்தக்கொடுமையை என் கண்களிணாலேயே………..அதன்விளைவுதான் என்னை இந்நிலைக்கு ஆளாக்கியது… சிறந்த மருத்துவர் என்று விருதினைப்பெற்றேன் நோயாளிகளுக்கு நம்பிக்கைக்குரிய மருத்துவராக இருந்தேனே தவிர அவளுக்கு ஒரு நல்ல கணவனாக இருக்க தவறியது எனது குற்றமா….??? எல்லா விடையத்திலும் ஒருவனால் குற்றமற்றவனாக இருக்க முடியுமா….அவள் மீது குற்றம் செல்ல வில்லை ஆனாள் அவள் எனது நம்பிக்கையை முற்றாக அழித்துவிட்டாள் தாங்கிக்கொள்ள முடியாமல் தான் அவளையும் அவனையும் எரித்து கொன்றேன்.

நான் தான் கொன்றேன் என்ற சந்தேகம் யாருக்கும் வரவில்லை எனது பதவி எனக்கு வேலியாய் இருந்தது.அந்த பதவிவேலிக்குள் இருந்து கொண்டு தான் என்னைப்போல பலரின் வாழ்க்கையில் விளையாடும் பெண்களையும் ஆண்களையும் பலிவாங்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். என்னிடம் இதுவரை சிக்கிய 20பேரையும் எமனிடம் அனுப்பி வைத்தேன்.

என்னை பொறுத்தவரை நான் செய்தது தவறு அல்ல ஆனால் யார் செய்தாலும் கொலை கொலைதான் யாரைக்கொலைசெய்கின்றோம் என்று நோக்கினாள் உண்மை தெரியும் எனக்கு தூக்கு நிச்சயிக்கப்பட்டுவிட்டது. ஆனால் தூக்கிலிப்படவேண்டியவர்கள் சுகமாக வாழ்கின்றார்கள் வெளியில் அவர்களுக்குத்தான் தேவை உங்களது ஆலோசனை ஆனால் அவர்களுக்கு ஆலோசனை சொல்லப்போனால் எனக்கு முன்பு உங்களுக்குத்தான் தூக்கு…..
சுகி எதுவுமே பேசாமல் எழுந்து நடக்கிறாள் இந்த பரந்த உலகில வெளியில்; யார் தான்…….

கலைச்செம்மல்-வை-கஜேந்திரன்-     
மறுபிறப்பு சிறுகதை தொகுப்பில் இருந்து.

வெளியில்……………………………. Reviewed by Author on October 07, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.