அண்மைய செய்திகள்

recent
-

சுவிஸ் தம்பதியினருக்காக இலங்கையில் திருடப்பட்ட குழந்தை!


சட்டவிரோதமான தத்தெடுப்பு மூலம் சுவிஸர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட சாரா இன்செச்சன் என்ற இலங்கை பெண், தற்போது இலங்கையில் பிள்ளைகள் திருப்பட்ட தாய்மாருக்கு உதவி வருகிறார்.
சாரா, குழந்தை வர்த்தகம் சம்பந்தமான பின்னணிக்கு எதிராக போராடி வருகிறார். இந்த பெண் தன்னிடம் தனது சிறுவயது புகைப்படங்களை கொண்ட தொகுப்பு ஒன்றை வைத்துள்ளார்.

அதில் சிங்களத்தில் மொழிப்பெயர்க்கப்பட்ட குறிப்புகளையும் எழுதியுள்ளார். இந்த புகைப்பட்ட தொகுப்பை அவரது தாய் ராணி வழங்கியுள்ளார்.
சாராவை சுவிஸை சேர்ந்த தம்பதியினர் 80 ஆம் ஆண்டுகளில் தத்தெடுத்துள்ளனர். மிக நீண்ட தேடலுக்கு பின்னர் சாரா, ராணியை இலங்கையில் கண்டுபிடித்துள்ளார்.

அவர் வழங்கிய புகைப்பட தொகுப்புடன் 37 வயதான சாரா சுவிஸர்லாந்து திரும்பியுள்ளார். ராணி என்ற பெண் பிறப்புச் சான்றிதழில் தாய் என குறிப்பிடப்பட்டுள்ளார். எனினும் அவர் சாராவை பெற்ற தாயல்ல.
இது குறித்து பத்திரிகை ஒன்றிடம் சாரா நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.
இலங்கையில் எனது முதல் விஜயமாக இது அமைந்தது. எனது நண்பர் ஒருவர் என்னை அங்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். எம்முடன் மொழிப்பெயர்ப்புக்கும் ஒருவர் இணைந்துக்கொண்டார்.
நாங்கள் மூவரும் அனைத்து அலுவலகங்களிலும் தேடினோம். எனது பிறப்பு மற்றும் எனது உண்மையான தாயின் அடையாளங்கள் எங்கும் கிடைக்கவில்லை. மருத்துவமனையில் கூட எனது பெயரோ, பிறப்பு பதிவுகளோ இருக்கவில்லை.

நாங்கள் காணாமல் போன நபர் பற்றிய விளம்பரம் செய்தோம். வயதானவர்களிடம் விசாரித்தோம். எதுவும் கிடைக்கவில்லை.
எனது பிறப்புச் சான்றிதழில் ஒரு முகவரி இருந்தது. அது கொழும்பு நகருக்கு மத்தியில் உள்ள குடிசை பகுதி. எங்களுக்கு உதவ முன்வந்த ஒரு பெரிய குடும்பத்தை நாங்கள் சந்தித்தோம். எனினும் அங்கும் எனது தாயை கண்டுபிடிக்க முடியவில்லை.
எனக்கு மூன்று பிள்ளைகள் பிறந்த பின்னர் என் தாயாரை பார்க்க வேண்டும் என்று முதன் முதலாக உணர்ந்தேன். அதற்கு முன்னர் எனது உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டேன். என்னை தத்தெடுத்த பெற்றோரை நான் காயப்படுத்த விரும்பவில்லை.

நான் எப்படியான பின்னணியை எதிர்கொள்வேன் என்ற அச்சம் ஏற்பட்டது. ஒருவர் தனது சொந்த தாயை அறிய விரும்புவது ஒரு பெரிய வலி. என்னுடை சொந்த பாதுகாப்புக்காக நான் அறியாமலேயே தடைகளை ஏற்படுத்திக்கொண்டேன்.
எனது வளர்ப்பு தாய் என்னுடன் சம்பந்தப்பட்ட எனது ஆவணங்களை வழங்க தற்போதும் மறுத்து வருகிறார். எனது பிறப்புச் சான்றிதழ், நுழைவு அனுமதி, சமூக அறிக்கை ஆகியவற்றை எனது வளர்ப்பு தாயின் முன்னாள் கணவரிடம் இருந்து பெற்றேன்.

ஒரு ஆணும், பெண்ணும் இலங்கையில் இருந்து குழந்தை ஒன்றை தத்தெடுக்க தீர்மானித்துள்ளதாக அந்த ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நான் பிறந்த இடமும் மருத்துவமனையும் அதில் குறிப்பிட்டிருந்தது.
இதனை படித்த பின்னர் என்னால் உறங்க முடியவில்லை. ஒரு திரை விழுந்து விட்டது போல் உணர்ந்தேன். தாயிடம் இருந்து பிரிந்த வலியை உணர்ந்தேன்.
தாயை கண்டுபிடிப்பது முற்றிலும் அவசியமானது என தோன்றியது.Canton Nidwalden அரச நிறுவனங்களின் எனது ஆவணங்களை பெற முயற்சித்தேன்.
தனிப்பட்ட இரகசியங்கள் காரணமாக அவர்கள் அவற்றை என்னிடம் கொடுக்கவில்லை. எனது வளர்ப்பு தாயின் முதல் கணவர் மீண்டும் எனக்கு உதவினார். எனினும் அப்போது எனக்கு அதனை பெற முடியவில்லை.
எனக்கு தெளிவான விளக்கங்கள் கிடைக்கவில்லை. எனது வளர்ப்பு பெற்றோர் அன்று நடைமுறையில் இருந்த சட்டத்தின் கீழ் இளமையாக இருந்தனர் எனினும் திருமணம் செய்துகொள்ளவில்லை.
சட்டங்களை மீறியே நான் சுவிஸர்லாந்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளேன். அப்போது நான் பிறந்து மூன்று வாரங்கள்.

ஒரு தாய் குழந்தையை பாதுகாக்க வேண்டுமாயின் குழந்தை பிறந்து ஆறு வாரங்களாவது கடந்திருக்க வேண்டும். சுவிஸர்லாந்தில் நடந்துள்ள இந்த விதி மீறல்கள் குறித்து நான் கேட்டிருக்கின்றேன். நான் தொடர்ந்தும் அவதானித்து வருகிறேன்.
இலங்கையில் உள்ள எனது நண்பர் எனது தாயாரை போல் சாயலை கொண்ட பெண்ணை அடையாளம் கண்டுள்ளார். எனினும் பிறந்த திகதி வேறு தினமாக இருக்கின்றது.
எனது கணவர் என்னை அந்த பெண்ணின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு இளம் மற்றும் முதியவர்கள் என 10 பேர் இருந்தனர். நாங்கள் யாரை தேடுகிறோம் என்ற கவனமாக தெளிவுப்படுத்தினோம்.
எனது கணவர் எனது பிறப்புச் சான்றிதழை வெளியில் எடுத்து காண்பித்தார். அங்கிருந்த பெண் மற்றும் அவரது மகளின் முகத்தில் பிரகாசம் ஏற்பட்டது. அவர்களிடம் இருந்து ஆவணங்களுடன் எனது ஆவணம் ஒத்திருந்தது. அவர் ஆச்சரியமடைந்தார்.

எனக்கு கீழே மூடப்பட்டிருந்த திரை திறக்கப்பட்டதாக நான் உணர்ந்தேன். அந்த பெண் எனது தாய் என கண்டுபிடித்தாக நினைத்தேன். எனது தத்தெடுப்பு ஒரு ஊழல் என்பதை நான் உணர்ந்தேன்.
நான் அழ ஆரம்பித்தேன். அந்த வீடு அமைதியாக இருந்தது. எனது தாய் என்னை கட்டியணைத்து என் கண்ணீரை துடைத்தார். அவரது அன்பான பிரதிபலிப்பு எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
எனினும் அந்த தாயும் எனது தாயல்ல. நடிக்கும் தாய் மரபணு பரிசோதனைகளில் அவர்கள் எனது உறவுகள் அல்ல என்பது உறுதியானது. இந்த நிலையில் சட்டவிரோதமான தத்தெடுப்புகளை எதிராக போராடி வருகிறேன்.
தொடர்ந்தும் அவ்வாறான செயல் நடப்பதை தடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் சாரா இன்செச்சன் தெரிவித்துள்ளார்.

சுவிஸ் தம்பதியினருக்காக இலங்கையில் திருடப்பட்ட குழந்தை! Reviewed by Author on October 08, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.