அண்மைய செய்திகள்

recent
-

மறுபிறப்பு..................சிறுகதை




நான் மெல்ல மெல்ல எனது உயிரை இழந்து கொண்டு இருக்கிறேன்… ஏன்…? எதற்காக…? என்ற கேள்வியை என்னால்  கேட்க முடியாது...! கேட்டாலும் பதில் கிடைக்கப்போவதில்லை.... இது எனது எத்தனையாவது இறப்பென்றும் எனக்கு தெரியாது. இறப்பதும் உயிர்ப்பதும் இறப்பதும் உயிர்ப்பதும் தான் இருந்தாலும் இறப்பிற்கும் பிறப்பிற்கும் இடையில் எனது இன்பமும் துன்பமும் சும்மா இருப்பதும் சுடர்விட்டு எரிவதும் தான்…

அடிக்கின்ற வேகமான காற்று ஆலய ஐன்னல் வழியே வந்து என்னை தாக்கிய வண்ணம் இருந்தது அணைந்து போவது போல் தோன்றினாலும் மீண்டும் சுடர்விடுவேன் அந்த மாது என்னையே உற்றுநோக்கி கொண்டிருந்தாள் ஏன் இவள் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாள் நானும் அவளை உற்றுப்பார்க்கிறேன். இரண்டு கைகளையும் உயர்த்தி வழிந்தோடுகின்ற கண்ணீரையும் துடைக்காமல் விம்மி விம்மி வெதும்பிக்கொண்டிருந்தாள்… கையில் இருக்கும் இரண்டு படமும் அவளது கணவனும் பிள்ளையுமாக இருக்கம் இளம் பெண் இவளின் இன்னிலைக்கு என்ன காரணம்…?

மீண்டும் ஐன்னல் வழி வேகமாக வந்த காற்று என்னை தாக்க தாங்கமுடியாமல் அனைந்து விட்டேன் மீண்டும் மீண்டும்…என்னை சுடர்விடவைத்தவள் அருகில் நின்று மீண்டும் சத்தமிட்டு கத்தத்தொடங்கினாள் ஏன் உனக்கு இரக்கமே இல்லையா… எனது கணவணையும்பறித்தாய் பூவிழந்தேன் பொட்டிழந்தேன் பொறுமையானேன் எனக்கு மட்டுமல்ல இந்தக்கொடிய யுத்தத்தினால் என்னைப்போன்ற எத்தனையோ…! பெண்கள் இளம் விதவைகளாக விதவைகளாக வெள்ளைச்சேலையோடும் பிள்ளைச்செல்வங்களை இழந்த தாய் தகப்பன் மாரும் தாய்தந்தையை இழந்த பிள்ளைகளும் உறவுகளை இழந்த உறவினர்களும் கைகளையும் கால்களையும் இழந்து ஊனமுற்றவர்களாக  உள்ளத்தாலும் உடலாலும் ஊனமுற்று வாழவலியில்லாமல் வறுமையில் சிக்கி சிறுமைப்பட்டு சீரழிக்கப்பட்டுக்கொண்டிருப்பதை… பார்த்திருக்கிறேன் பரிதவித்திருக்கிறேன் பல தடவை…

இருந்தாலும் எனக்கொரு மகன் இருக்கான் என வாழ்வை தொடர்ந்தேன் அவனையும் கொடிய டெங்கு நோயினால் பறித்துக்கொண்டாயே…!  எம்மைப்போன்றவர்களை எப்போதுமே நிம்மதியாக சந்தோஷமாக சொந்த நிலத்தில் வாழ விடப்போகிறாய்… உனக்கு இரக்கமே இல்லையா…கல்லா நீ… சிலையா…நீ என்றுமே எம்முயிர்தான் பலியா… சொல்லு சொல்லு பதிலை எனக்கு இறைவா உன்னையே தினம் தினம் மெழுவர்த்தி ஏற்றி மனமுருகி மன்றாடுகின்றேன் என்மன்றாட்டைக்கேள் எனக்க நல்வழி காட்டும் இறiவா… இறiவா… அவளின் அழுகுரல் என்காதுச்வை கிழித்தது… அவளது மூச்சு அனலாய் வீசியது என்னால் தாங்கமுடியவில்லை வெம்மையை அழுகுரலின் உண்மையை…

ஓ…! இதுதான் இவளின் கண்ணீர்க்காவியமா… இறைவனும் பாவம் தான் இவளைப்போல இவ்வுலகில் எவ்வளவு பேரின் வாழ்க்கைக்கு வழிகாட்ட வேண்டும் இவளுக்கும் வழி காட்டு இறiவா… என முணுமுணுக்க எனது சுடரில் இன்னொருத்தி என்னைப்போல் இன்னொருவனை பற்ற வைத்தாள். அவளது கண்களில் இருந்தும் கண்ணீர் ஊற்றெடுத்தது ஆஹா… இவளின் காவியத்தைக்கேட்க என்னால் முடியாதே…!

நான் எனது இறுதி நிமிடங்களை நெருங்கிக்கொண்டிருக்கிறேன். அப்போது தொலைவிலும் பலர் கைகளில் எனது சகோதரர்களை சகோதரிகளை கையில் ஏந்தியவாறு எனது அருகில் வருகின்றனர் என்ன இவர்கள் தங்களின் துன்பங்களையும் துயரங்களையும் வெளிப்படுத்தி புதுவாழ்வுக்கான வழியை தேடுகிறார்கள்.

இவர்கள் தங்களின் தேவைகளை வேண்டுதல்களை நிறைவேற்றிக்கொள்ள எங்களை ஒரு அடையாளமாக பாவிக்கின்றார்கள் ஒருவரில் ஒருவர் தங்கித்தானே இந்த வாழ்வே…தனியே எவனாலும் வாழ்ந்து விட முடியுமா…? அதற்காக… எம்மையே….அழுது கொண்டிருந்தவளின் முகத்தில் புன்னகை ஆம் அவளின் வேண்டுதல் கேட்கப்பட்டுவிட்டது.

அவள் அருகே வந்த இன்னொரு மாது அவளுக்கு சொன்னாள் போரினால் கணவனை இழந்தவர்களுக்கு இழப்பீட்டு நிதியும்  நிலையான சுயதொழிலும் நாளை காலை பத்து மணிக்கு அலுவலகத்திற்கு வந்து என்னை சந்தியுங்கள் என்று சொல்லி விட்டுச்சென்றாள்.

இழந்தவைகள் எப்போதும் இழந்தவைகள் தான்….. ஈடுசெய்ய முடியாது… இருந்தாலும் இதயத்திற்கு இது ஆறுதலான விடையம் தானே எனக்கும் இதைக்கேட்டு சந்தோஷம் தான் எனது பிறப்பின் பயனை அடைந்து விட்டேன். என நிமிர்கிறேன் எனது சமாதியின் மேல் எம்மினத்திலிருந்து இன்னொருவன் நிற்கிறான்….

இன்னொரு பெண்ணின் மனக்குமுறலை வெளிப்படுத்துவதற்கு என்னை இழந்தேன் இன்று எனக்கு நம்பிக்கையுண்டு நான் மீண்டும் மறுபிறப்பு பிறப்பேன் என்று………….

மறுபிறப்பு-சிறுகதை தொகுப்பிலிருந்து
கவிஞர்-வை-கஜேந்திரன்-



     
மறுபிறப்பு..................சிறுகதை Reviewed by Author on November 24, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.