அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு மாகாணத்தில் போன்று மன்னார் மாவட்டம் கவனிக்கப்படுவதில்லை...பிரஜைகள் குழு


மன்னார் மாவட்டத்தின் பிரஜைகள் குழுவின் காலாண்டு பொதுக்கூட்டம் இதன் தலைவர் அருட்பணி அ.ஞாணப்பிரகாசம் அடிகளார் தலைமையில் சனிக்கிழமை 17.11.2018 மன்னா கலையருவி கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது.

இக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்படுகையில் அரசாங்கத்தின்
முக்கியஸ்தர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் வடக்கு மாகாணத்துக்கு அடிக்கடி வருகைத்தந்து அவர்களின் பிரச்சனைகளை நோக்குவதுபோன்று இவர்கள் மன்னார் மாவட்டத்துக்கு வருகை தந்து மன்னார் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை கண்டறிவதில் ஈடுபாடு அற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.

வட மாகாணத்தில் ஒரிரு மாவட்டங்களில் மக்கள் காணிகளை விடுவிப்பதுபோல் மன்னார் மாவட்டத்தில் இவ்வாறான அக்கறையின்மையே காணப்படுகிறது. இன்னும் மன்னார் முள்ளிக்குளம் மக்கள் தங்கள் கிராமத்துக்குச் சென்றும் இவர்களின்
கண் முன்னே பாதுகாப்பு படையினர் தங்கள் குடும்பங்களுடன் குடியிருக்க இவ் வீட்டுச் சொந்தக்காரர்கள் காட்டுக்குள் யானை, மழை. நுளம்பு வெள்ளம் போன்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த முள்ளிக்குளம் மக்களின் பிரச்சனைளை அரசாங்கமோ அல்லது இங்குள்ள அரசியல்வாதிகளோ விடுவிப்பதற்கு தங்கள் பங்களிப்பை எவ்வாறு
செயல்படுகின்றார்கள் என்பது புலணாகி வருகிறது.

அத்துடன் புதிய அரசு நியமிக்கப்பட்ட ஒரிரு தினங்களுக்குள் வன்னி
மாவட்டத்தில் பாதிப்பு அடைந்தவர்களுக்கு நஷ;டஈடு வழங்கப்பட்டன. இதை
நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் மன்னார் மாவட்ட மக்களுக்கு இவ்வாறான எந்த செயல்பாடும் நடக்கவில்லை
என்பது கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது. இங்குள்ள அரசியல் வாதிகளும் அக்கறையில்லாத ஒரு தன்மையையே இங்கு எண்பிக்கின்றது.

மன்னார் நகரில் நீண்ட வருடங்களுக்குப் பின் ஆதனவரி கட்டணம்
அன்மைகாலத்தில்  அதிகரிக்கப்பட்டது. இதற்கு மக்கள் எதிர்ப்பு
தெரிவிக்கவில்லை. மாறாக ஆதனவரி கட்டண அதிகரிப்பை நோக்கும்போது பலர் தங்கள் ஆதனங்களை விற்றே செலுத்த வேண்டிய நிலமையே இங்கு மன்னாரில் நிலவி வருகின்றது. ஆதனவரி மூலம் மன்னார் மக்களுக்கு பாரிய சுமையை உள்ளூராட்சி சபை ஏற்படுத்தியிருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது.

மன்னார் மாவட்டத்தை நோக்கும்போது படித்தப் பட்டதாரிகள் மற்றும் பலர்
இங்கு காணப்படுகின்றனர். ஆனால் இங்கு அரச நிறுவனமாக இருக்கலாம் அல்லது அரசு சார்பற்ற நிறுவனமாக இருக்கலாம் வெளி மாவட்டங்களைக் கொண்டே வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்றன.

ஆகவே இவ்வாறான குறைகளை தீர்த்து வைப்பதற்கு தனித்துவத்துடன் இயங்கும் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு சம்பந்தப்பட்டவர்களின் கவனங்களுக்கு எடுத்துச் சென்று தொடர்ந்து இவ் அமைப்பு தீவிரமாக செயல்பட வேண்டும். இதற்கு இவ் ஆளுனர் சபையுடன் சேர்ந்து தாங்களும் ஒத்துழைப்பு வழங்கதயார் என இவ் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.




வடக்கு மாகாணத்தில் போன்று மன்னார் மாவட்டம் கவனிக்கப்படுவதில்லை...பிரஜைகள் குழு Reviewed by Author on November 19, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.