அண்மைய செய்திகள்

recent
-

சாதனை படைத்த வங்கதேச வீரர்! அபார இரட்டை சதம் விளாசல் -


டெஸ்ட் வரலாற்றிலேயே 2 இரட்டை சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்ற உலக சாதனையை, வங்கதேச விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் படைத்துள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி விளையாடி வருகிறது. டாக்காவில் நடைபெறும் இப்போட்டியின் இரண்டாவது நாளான இன்று, வங்கதேச அணி 7 விக்கெட்டுக்கு 522 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

அந்த அணியின் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் அபாரமாக ஆடி இரட்டை சதம் விளாசினார். அவர் 421 பந்துகளில் 18 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 219 ஓட்டங்கள் எடுத்து நாட்-அவுட் ஆக இருந்தார்.

இது அவருக்கு இரண்டாவது இரட்டை சதமாகும். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2 முறை இரட்டை சதம் விளாசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார்.


AFP

சாதனை படைத்த வங்கதேச வீரர்! அபார இரட்டை சதம் விளாசல் - Reviewed by Author on November 13, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.