அண்மைய செய்திகள்

recent
-

சனிபகவான் மட்டும் ஏன் நம் ராசியில் அதிகநாள் தங்கி வாட்டி எடுக்கிறார் என்ற உண்மை கதை தெரியுமா?


சனிபகவான் மட்டும் எதற்கான மெதுவாக இடம்பெயர்கிறார். அதற்கான காரணம் மற்றும் உண்மை என்னவாக இருக்கும் என்பது பற்றி இங்கே ஆராய்ந்து பார்க்கலாம். ",

சனிபகவானாகிய சனி கிரகம் மட்டும் ஏன் மெதுவாக சுற்றுகிறது, சனி கிரகம் பற்றி பழங்கதைகள், சனி பகவான் பற்றிய உண்மைகள்",

  "articleBody":"சனிக்கிரகம் என்பது நீதியின் இறைவனாக கருதப்படுகிறது. வேதாந்த ஜோதிடத்தின் படி இந்த கிரகத்தின் அதிபதியாக சனி பகவான் விளங்குகிறார். இந்த கிரக நிலைகள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி செய்கின்றனர். ஆனால் இந்த இடப்பெயர்ச்சியின் வேகம் சனி கிரகத்தை பொருத்த வரை அதன் வேகம் மெதுவாக இருக்கும். அதாவது சனி பகவான் மட்டும் ஒரு ராசியில் 21/2 வருடங்கள் தங்கி விடுகிறார். அதோடு மட்டுமல்லாது வக்கிர சனி, ஜென்ம சனி,அஷ்டமத்து சனி என்று ஏழரை ஏழரை வருடங்களாக நம்மை வாட்டி வதைக்கிறார்.ஏன் சனிக்கிரகம் மட்டும் மெதுவாக இடம் பெயர்கிறது.

 இதற்கு பின்னால் இருக்கும் ஆச்சரியமூட்டும் தகவல் என்ன என்பதை நாம் அறிந்து கொள்வோம். சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி(சந்தியா) ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவர் ஒரு நாள் சிவனை நோக்கி தவம் புரிய விரும்பினார். ஆனால் சூரிய பகவானை தனியாக விட்டுச் செல்ல அவருக்கு மனம் இல்லாததால் தன்னுடைய நிழலைக் கொண்டு சாயா தேவியை அவ் உருவாக்கி செல்கிறார். சூரிய பகவானும் சாயா தேவியை தன்னுடைய மனைவியாக நினைத்து கொண்டு அவரோடு வாழ்கிறார். அப்போது இருவருக்கும் சனி பகவான் என்ற ஆண் குழந்தை பிறக்கிறது.

தாயின் நிழலைப் போலவே சனி பகவானும் கருப்பாக பிறக்கிறார். இதனால் சூரிய பகவானுக்கு சனி பகவானை பிடிப்பதில்லை.
சாயா தேவி (சுவர்ணா) சூரிய பகவானின் 5 புதல்வர்களையும், 3 மகள்களையும் நன்றாக பார்த்து வருகிறார். ஆரம்பத்தில் சுவர்ணா சனி பகவானை நன்றாகவே பார்த்து கொள்கிறார். ஆனால் இருப்பினும் சனி பகவானுக்கு அது ஏமாற்றமாகவே இருக்கிறது. ஒரு நாள் சுவர்ணா மற்ற குழந்தைகளுக்கு உணவளிக்கும் போது சனி பகவானும் கேட்கிறார். ஆனால் உணவு மறுக்கப்பட்ட காரணத்தால் கோபத்தில் சனி பகவான் தன் தாயை கால்களால் மிதித்து விடுகிறார். இதனால் தாயை மிதித்த பாவத்தால் சனி பகவானின் கால் முடமாக போய் விடுகிறது.  இதனால் சனி பகவான் தன் தந்தை சூரிய பகவானின் உதவியை நாடுகிறார்.

அப்பொழுது தான் சுவர்ணா அவரின் உண்மையான தாய் இல்லை என்பது தெரிய வருகிறது. சுவர்ணா தான் சந்தியாவின் நிழல் என்பது புலப்படுகிறது. சனி பகவானின் கால் முடமான காரணத்தால் தான் அவரால் வெகுவாக இடப்பெயர்ச்சி செய்ய இயலாது. எனவே தான் மற்ற கிரகங்களை காட்டிலும் சனிக்கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மெதுவாக இடப்பெயர்ச்சி அடைகிறது. சனி பகவான் மெதுவாக இடப்பெயர்ச்சி அடைவது குறித்து மற்றொரு கதையும் கூறப்படுகிறது. அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

இராவணனின் மகன் மேகநாதன் (இந்திரஜித்) பிறப்பதற்கு முன்பு எல்லா கிரகங்களும் தன் மகன் பிறப்பிற்கு சாதமாக இருக்க வேண்டும் என எண்ணினான். அப்பொழுது தான் தன் மகன் நீண்ட ஆயுளுடன் வாழ முடியும் என்று ஆசைப்பட்டான். ஒன்பது கிரகங்களில் எட்டு கிரகங்கள் இதற்கு ஒப்புக் கொண்டது. ஆனால் சனி பகவான் மட்டும் இதற்கு ஒப்புக் கொள்ள மறுத்தார்.

    இதனால் கோபமடைந்த இராவணன் தன் மகன் மேகநாதனின் நீண்ட ஆயுளுக்காக சனி பகவானின் ஒரு காலை வெட்டி முடமாக்கினான் என்றும் கூறப்படுகிறது. இதனால் தான் சனிக்கிரகம் மெதுவாக இடம் பெயர்கிறது."


சனிபகவான் மட்டும் ஏன் நம் ராசியில் அதிகநாள் தங்கி வாட்டி எடுக்கிறார் என்ற உண்மை கதை தெரியுமா? Reviewed by Author on November 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.