அண்மைய செய்திகள்

recent
-

சர்வதேச அழுத்தமின்றி தமிழர்களுக்கான தீர்வு சாத்தியமாகாது : சத்தியலிங்கம் -


இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு சர்வதேச பங்களிப்பின்றி சாத்தியமாகாதென வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகமான தாயகத்தில் இன்று நடைபெற்ற நகரக்கிளைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நகரக்கிளையின் தலைவர் சி.சிவசோதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கைத்தீவில் வாழுகின்ற தமிழ் மக்கள் முன்னே மூன்று தெரிவுகள்தான் இருந்தன. ஒன்று அகிம்சை ரீதியில் போராடி உரிமைகளை பெற்றுக்கொள்ளல், இரண்டாவது ஆயுத ரீதியில் போராடி உரிமைகளை பெற்றுக்கொள்ளல், மூன்றாவது அரசுடன் ஒப்பந்தமொன்றினை செய்து உரிமைகளை பெற்றுக்கொள்வது.

எனினும் துரதிஸ்ரவசமாக இவை மூன்றுமே இறுதியில் தோற்றுபோயின. 2009 யுத்தமுடிவுக்கு பின்னர் தமிழர் தரப்பு இறுதியான தெரிவாக அரசியல் யாப்பில் மாற்றமொன்றினை ஏற்படுத்தி சட்டரீதியாக தமிழ் மக்களுக்கான உரித்தினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் செயற்பட்டது.
இலங்கைத்தீவில் மாறி மாறி ஆட்சிசெய்த சிறிலங்கா சுதந்திரக்கட்சியாக இருக்கட்டும், ஐக்கிய தேசிய கட்சியாக இருக்கட்டும் இரண்டுமே தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமையை தருவதற்கு தயாரக இருந்திருக்கவில்லை.

சர்வதேச அழுந்தங்களின்போது அவ்வப்போது ஒருகட்சி உரிமைகளை தருவதற்கு முயன்றால் அதனை மற்றைய கட்சி தடுத்ததே வரலாறாகும்.
எனினும் இலங்கையின் வரலாற்றில் முதற்தடவையாக 2015ல் இரண்டு சிங்களப் பெரும்பான்மைக்கட்சிகள் இணைந்து உருவாக்கிய தேசிய அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்குமென மக்கள் நம்பினர். அதற்காக தமிழ்த் தேசிக்கூட்டமைப்பும் பொறுப்புடன் செயற்பட்டது.

அரசியல் யாப்பில் மாற்றமொன்றினை ஏற்படுத்தவதினூடாக நிரந்தரமான அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்ளும் முகமாக கூட்டமைப்பு விமர்சனங்களுக்கு மத்தியில் கடந்த நான்கு வருடங்கள் பல்வேறு விட்டுக்கொடுப்புடன் தேசிய அரசுடன் செயற்பட்டது. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திலும் கூட்டமைப்பு கணிசமான பங்களிப்பை செய்து வந்துள்ளது.
இந்த நிலையில் இம்மாதம் பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பின் நகல் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு முன்னோக்கி நகர்த்தப்படவிருந்த நிலையில் சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வலிந்து ஒரு அரசியல் ஸ்திரமற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளமை புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாங்களே தங்களால் உருவாக்கிய அரசியல் யாப்பை மீறும் கைங்கரியத்தில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் புதிய யாப்பு உருவாவது எட்டாக்கனியாகவே தென்படுகின்றது.
இந்த சனநாயக விரோத செயற்பாட்டை சனநாயகத்தை மதிக்கும் சர்வதேச நாடுகளும், உள்ளுரில் அனைத்து தரப்பினரும் எதிர்க்கின்றார்கள். இந்த செயற்பாட்டில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் இணைந்து தனது எதிர்ப்பை தீவிரமாககாட்டிவருகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகிந்தவை எதிர்க்கவும் இல்லை, ரணிலை ஆதரிக்கவும் இல்லை. எம்மைபொறுத்தவரை இருவருமே ஒன்றுதான். நாங்கள் எதிர்ப்தெல்லாம் அரசியல் அமைப்பைமீறிய சனநாயக் படுகொலையைதான்.

ஆனாலும் பலர் இலங்கையின் அரசியல்யாப்பை பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டுமென்கின்றார்கள். நாம் இப்போது நம்பியிருப்பது அரசியலமைப்பு மாற்றத்தினூடான தீர்வையே. அதுவே நீடித்து நிலைத்து நிற்கும் தீர்வாக அமையும். மாறாக ஒப்பந்தங்களினூடான தீர்வு எதுவும் நீடித்தி நிற்காது.
இதுவே எமது கடந்தகால அனுபவமாகும். இலங்கையில் ஒரு ஸ்திரமான ஆட்சியின்றி அது சாத்தியப்படாது.

இந்த நிலையில் சர்வதேச நாடுகளின் அனுசரணையுடனான அரசியல் தீர்வே தற்போது தமிழ் மக்களுக்கு தேவையாகவுள்ளது. அதையே சனாதிபதியின் அண்மைக்கால நடவடிக்கைகள் தமிழர் தரப்பிற்கு உணர்த்தியுள்ளன என்றார்.
சர்வதேச அழுத்தமின்றி தமிழர்களுக்கான தீர்வு சாத்தியமாகாது : சத்தியலிங்கம் - Reviewed by Author on November 25, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.