Top Ad unit 728 × 90

அண்மைய செய்திகள்

recent
-

கல்..................... சிறுகதை..........


கல்......................
யுத்தம் என்பது பல நாடுகளில் பல வீடுகளில் பலவாறான பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றது. இவ்யுத்தமானது பலரின் கனவுகளை எண்ணங்களை கற்பனைகளை சு10னியமாக்கியுள்ளது. மன்னாரில் இருந்து இரண்டு முறை யுத்தத்தின் கொடுரத்தினால் உயிரைக்காத்துக்கொள்ள இடம் பெயர்ந்து இந்தியா போன குடும்பங்களில் இவனும் ஒருவன்….. இவன் சிறியவன் என்ன நடக்கின்றது என்பதையே பெரிதாய் உணராதவன் அப்போது அவனுக்கு வயது 12 தான் எல்லோரையும் போல இவனது குடும்பத்தில் தலைக்கு பத்தாயிரம் கொடுத்து…. இவனது குடும்பத்தில் இவனை விட்டு ஆறு உருப்படிகள் சிறியவன் என்பதால் இவனது தலைக்கு கணக்கு விலவில்லை…தனுஷ்கோடி நெருங்கும்போது தகப்பன் தவறி விடுகின்றார் கண்ணீர் கடலில் கலக்க கரையேறுகிறது கப்பல்….

வந்தவர்களை எல்லாம் வரவேற்று பெயர் விபரத்தினை பதிந்து குவித்து விட்டார்கள் முகாமில் குமுறல்கள் குடைச்சல்கள் தொடர்ந்தாலும் இவன் மனது இலங்கையிலேயே குடியிருந்தது…. தனது நண்பர்கள் படிப்பிலும் சுட்டி விளையாட்டிலும் சுட்டி இவனுக்கு பெயரும் குட்டி…சின்னவயதிலே எல்லாவற்றிலும் ஆர்வமாய் இருந்தாலும் கிறிக்கெட் என்றால் அவ்வளவு விருப்பம் எங்கு கிறிக்கெட்போட்டிகள் நடந்தாலும் அங்கே தங்கிருவான் சாப்பாடே தேவையில்லை இவ்வளவிற்கு இவன் விளையாடுவதில்லை பார்ப்பதற்கே இவ்வளவு ஆர்வம் அருகில் இருந்து ரசிக்கும் காதலன் காதலியைப்போல இவனது காதலி கிறிக்கெட்தான்…

ஆட்டம் படிப்பு என்று இருந்தவனை இந்தப்பாழாய்ப்போன யுத்தம் அவனை அடிமையாக்கி அதுவும் அவனை இன்னொரு நாட்டில் கொணர்ந்து விட்டுள்ளது…. நாடுகள் பிரச்சினை இல்லை…. நடப்புகள் தான் பிரச்சினை…. நாட்கள் வேகமாய் கடந்து சென்றது முகாமில் இருக்கும் பிள்ளைகள் படிப்பிற்கும் வளர்ந்தவர்கள் வேலைக்கும் வெளியில் போய்வரலாம் என நிர்வாகம் அனுமதியளித்தது அவன் அன்று தான் வெளியில் வந்தான் விடுதலையாகி வரும் சிறைக்கைதியைப்போல….
புதிதான பாடசாலை…. புதிதான நண்பர்கள்… புதுமையாக அவனுக்கு எல்லாமே புதுமுகங்கள் அறிமுகமாகினார்கள்…நம்மைப்போன்றவர்கள் தாம் நல்ல இடம் சந்தோஷமாய் இருக்கலாம் நன்றாய் படிக்கலாம்… வரும் வழியில் காதலியை காண்கிறான்….

அட அதுதான் அவனுடைய காதலியான கிறிக்கெட்தான்…. ஆனந்தம் அவனை ஆட்கொண்டது துள்ளிக்குதித்தான் அவ்விடத்திலேயே கால்பதித்தான் அங்கே அவனை விட கொஞ்சம் பெரியவர்கள் விளையாடிக்கொண்டு நிற்கின்றார்கள்…..
ஒரு பக்கம் 3தடிகளையும் மறுபக்கம் ஒரு பெரிய கல்லையும் விக்கட்டாகவும் உருண்டு போனால் நான்கும்…. உயர்ந்து போனால் ஆறும்…. ஆனால் அவுட்கள் பல விதமாய் இருந்தது ஆம் இவன் கால்பதித்து நிற்கும் இடம் அவர்களின் விக்கட்டான கல்லில் தான் அவனை அந்தக்கல்லில் நிற்கவும் விடமாட்டார்கள் விளையாட்டிலும் சேர்க்க மாட்டார்கள்….கலைத்தால் செல்வான் மீண்டும் வந்து அந்தக்கல்லில்தான்…பாடசாலை விட்டதும் அவனது இரண்டாம் பாடசாலை அந்த விளையாட்டு இடம் தான் அவர்கள் விளையாடி முடிந்து போகுமட்டும் அங்கேயே நிற்பான்…அந்தக்கல்லில் தான் அவனது பல பொழுதுகள் புலரும் விளையாட வருகிறார்களோ இல்லையோ….இவன் வந்து விடுவான் அந்தளவிற்கு அவனது ரசிப்புத்தன்மை அவர்கள் அடிக்கின்ற பந்தினை எடுத்துக்கொடுப்பான் அவர்கள் என்ன சொன்னாலும் செய்வான்…அந்தக்கல்லில் ஏறி நிற்பான் பல தடவைகள் இவனுக்கு எறிகள் விழும்…ஒவ்வொன்றும் உலக்கை கொண்டு அடிப்பது போல இருக்கும் அந்த அடியையும் தாங்கிக்கொள்வான்…அந்த முகாம் அதிகாரியிடமும் திட்டு வாங்குவான் தினமும் அம்மாவிடமும் திட்டுத்தான்….
பல முறை இவனில் பட்டதால்தான் அவுட்டாக வில்லையென சண்டையும் வந்து மண்டையும் உடையும்
அடேய்….! நீ…கீழே குறிபார்த்து எறிந்திருந்தால் அவுட்தான்டா நீ…கொஞ்சம் மேலே எறிந்ததால் தான்டா அவுட்டாக வில்லை….
ஏன் வீண் சண்டை இவன் இதில் நிற்பதால் தானே இவ்வளவு பிரச்சினை நீ இனி இதில் நிற்க வேண்டாம்….
ஓ…ஓ…ஓ…ஓ இனி இவன் இதில் நிற்க வேண்டாம் எல்லோரும் ஏகமனதாக எடுத்த முடிவால் இவன் பெரும் ஏமாற்றம் அடைந்தான் பெரும் தலையிடியை உண்டாக்கியது மனம் வெந்து நொந்தது இனி நான் அந்தப்பக்கம் போக முடியாது…குட்டி திட்டம் தீட்டினான்
மறுநாள் மாலை மௌனமாய் அந்தக்கல்லில் ஏறி நின்றான் டேய்…என்னடா…திரும்பவும் வந்திற்றாய் உனக்கு நாங்கள் சொல்வது விளங்கவில்லையா…இல்லையண்ணா நான் இந்தக்கல்லில் நின்று அவுட் சொல்கின்றேன் என்னில் பட்டாலும் அவுட்தான்…இல்லை என்று சொல்லிவிடாதீர்கள்……

நீ என்ன லூசாடா….. உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு……உண்மையில் நீ கிறிக்கெட் பைத்தியம் தான்டா நில்லு பிறகு அங்க நோகுது இங்க நோகுது என்று சொல்லக்கூடாது சரியாடா….ம்ம் சரிண்ணா….
கல்லின் மேல் கல்லானான் குட்டி பிறகென்ன ஒவ்வொரு அவுட்டும் இவனின் உடலைப்பதம் பார்க்கும் பந்துகள் நொந்துதான் போகும் உடல் வெந்துபோகும் தலை வெயிலில் கல்லில் கல்லாக…எல்லாமே பழகிப்போனது….

பழையவட்டத்தொப்பியும் நீளமான வெள்ளை நிறவெனியனும்  போடுவான் நடுவர்கள் போலவே தன்னையும் எண்ணிக்கொள்வான் அவுட் கொடுப்பான் துல்லியமாக பார்த்துக்கொண்டே இருப்பான்…. சர்வதேச போட்டியாகவும் தான் சர்வதேச நடுவராகவும் நினைத்துக்கொண்டு இந்த சின்ன இரண்டு கண்களுக்குள்ளும் கிரிக்கெட்விளையாட்டினை விரித்து வைத்தான் அவர்கள் விளையாடுவதை ரசிப்பதோடு தனது நடுவர் பணியினையும் அதேவேளை தொலைக்காட்சியில் போகும் ஒவ்வொரு போட்டியினையும் இடைவிடாது பார்த்து பார்த்து நுணுக்கங்களை பார்த்து பார்த்து தயார்படுத்திக்கொண்டான்….
இவ்வளவு நாளாக பார்த்தும் பழகிய கிறிக்கட் நுணுக்கங்களுக்கு அன்று தான் நல்லதோர் சந்தர்ப்பம் கிடைத்தது. வுழமையாக விளையாடுபவர்களில் இரு அணிகளிலும் ஒருவர் வரவில்லை அவர்களுக்கு குழப்பம் யாரைச்சேர்ப்பது அழையா விருந்தாளியாக கல்லில் கல்லாய் இருக்கும் குட்டியைத்தான்…வேறுயாருமே அங்கு இல்லையே…

டேய் குட்டி வாறியா…விளையாட ….நானா… வாறன்… வாறன் இவன எடுக்கிறதும் சரி  இன்னைக்கு விளையாடாமப்போறதும் சரி…. டேய்…ம்ம்ம்
சும்மா விளையாடட்டும்….  டேய் இன்னைக்கு 1லிட்டர் சோடாக்குடா…. போட்டி ஒரு அணியினர் விளையாட குட்டி களத்தடுப்பில்  3 பிடியெடுப்புகள் பந்தும் வீசினான் தொடர்ச்சியாக 3 விக்கெட் ஓல்ரவுண்டராக அசத்தினான் குட்டி….டேய் என்னடா இவன் இப்படி விளையாடுறான.; குட்டியின் துடுப்பு மட்டையில் படும் பந்துகள் 6க்கும் 4க்கும் பறந்தன குட்டி தனியாக 111 றன் குட்டி அணிதான் 1லிட்டர் சோடாவினை வென்றது…..
அன்று முதல் அவன் பக்கம் தான் காற்று வீசத்தொடங்கியது பாடசாலை மட்டம் மாநிலம் என்று தனது திறமையை நிரூபித்தான் படிப்பிலும் அசத்தினான் இவனுக்கென்று ஒரு கூட்டம் இருந்தது எல்லோரினதும் செல்லப்பிள்ளையானான்….

இதுவரை பட்டதுன்பங்களை மெதுவாக மாற காலம் வேகமாக சுழன்றது பள்ளிப்படிப்பு முடிந்து தனியார் கல்லூரியில் கணனி ட்ரலி கற்பிக்கும் ஆசிரியர் ஆனான் வாழ்வு நல்ல நிலையில் போகுது எனும் நிலையில் தான் அந்த செய்தி காதில் விழுந்தது…
இலங்கையில் யுத்தம் முடிந்து விட்டதாம்….. சமாதான சு10ழல் நிலவுகின்றதாம்…. இலங்கை செல்ல விரும்புபவர்கள்  செல்லலாமாம்….
இச்செய்தி சிலருக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. ஆனால் பலருக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை காரணம் 20 வருடங்களுக்கு மேலாக இங்கு வாழ்ந்து விட்டோம் சொகுசு வாழ்க்கை இல்லாவிட்டாலும் உள்ளத்தில் சொல்ல முடியாத வலி வேதனைகள் இருந்தாலும் உணவு உடை உறையுளோடு உயிர்ப்பயமின்றி நிம்மதியாக வாழ்ந்தோம் இங்கு……

மீண்டும்…..மீண்டும்….மீண்டும்…. அந்த கொடிய நினைவுகள் அழியாத வடுக்கள்…. பலர் வேண்டாம்…வேண்டாம்…வேண்டவே…வேண்டாம்….இங்கேயே இருந்து விடுவோம்…சிலர் இல்லை….இல்லை எப்படி இருந்தாலும் சொந்த மண்ணைப்போல வருமா… கூழையோ கஞ்சியையோ…குடித்தாலும் சொந்த மண்ணில் இருந்து குடிக்க வேணும்…சொந்த மண்ணில் நிம்மதியாக வாழாட்டியும் நிம்மதியாகவாவது சாகவேணும் என்றாள் வானத்தினைப்பார்த்துக்கொண்டிருந்த பாட்டி….வாய்விட்டுச்சிரித்தார்........

 தாத்தா தனது கிழிந்த வேடடியைப்பார்த்து…
சிலர் கிளம்பினர் அவ்வாறு கிளம்பியவர்களில் குட்டியின் குடும்பமும் சேர்ந்து கொண்டது சிலர் விரும்பியும் பலர் விரும்பாமலும் இன்னும் பலர் இரண்டும்கெட்டு இங்கேயே நிற்க புறப்பட்டது குட்டியின் குடும்பமும் ஒரு தொகை உதவுதொகைப்பணத்தினை பெற்றுக்கெதண்டு புறப்பட்டனர் தாய்நாட்டுக்கு….மனதில் அங்கும் நாம் அகதிகள் தான் இடங்கள் தான் மாறுகின்றதே தவிர எமது இன்னல்கள் மாறப்போவதில்லை……..
அறியாத வயதில் அழுது கொண்டுதான் போனான்…இந்தியாவுக்கு---அன்று  அறிந்தும்; தெரிந்த புரிந்த வயதிலும் அழுது கொண்டுதான் இலங்கைக்கு….இன்று மீண்டும் வந்தான் இலங்கைக்கு அவனது நினைவுகள் கனவுகள் எண்ணங்கள் ஆசைகளில் இருந்து மீண்டு வரவில்லை…வரவும் முடியவில்லை…………….
மீண்டும் புதியவர்கள்…எல்லேர்ரும் புதியவர்கள்…. வாழ்க்கைமுறை கதைகள் எல்லாமே அவனுக்கு புதியவையாக இருந்தது பார்த்தீர்களா சொந்த நாடே அந்நிய நாடு போல…அந்நியனைப்போல….உணர்வு உள்ளத்தில்………

 வந்தும் சும்மா இருக்கவி;ல்லை பொதுத்தொண்டு செய்யும் நிறுவனம் ஒன்றில்  மாதம் 15000 ரூபாவிற்கு தன்னை இணைத்துக்கொண்டான் மீண்டும் அவனுக்கு என்று நண்பர்கள் கூட்டம் அதிகமானது சமூகத்தில் பெரியவர்களோடு நல்ல தொடர்பாடல் உண்டானது…அவனது காதலியான கிறிக்கெட் அவனை சும்மா விடவில்லை உசுப்பினாள் உளுக்கினாள் நண்பர்களோடு சேர்ந்து விளையாடினான் கிறிக்கெட் விளையாடும் போது கிறிக்கெட்டின் சட்டங்கள் விளையாட்டு நுணுக்கங்கள் அத்தனையும் அத்துப்படி இதைக்கண்ட நண்பர்கள் வியந்து போனார்கள்!!!

அப்போது ஒரு நண்பன் விளையாட்டாக நீ பேசாம நடுவர் பயிற்சியும் பரீட்சையும் எழுதி நடுவராக வரலாமே….??? .சும்மா பறந்தவனுக்கு இரண்டு சிறகுகளை கொடுத்தது போல…அந்த நண்பனின் பேச்சு…..பயிற்சியைத்தொடர்ந்தான்  பரீட்சையிலும் சித்தியடைந்தான் இலங்கையின் எப்பாகத்திலும் நடுவராக கடமையாற்றும் அளவுக்கு திறமைச்சான்றிதழையும் தங்கப்பதக்கத்தினையும் வழங்க குட்டியை பெயர் சொல்லி அழைத்தபோது நிறைந்திருந்த சபையின் கரவொலிகள் காதில் முழங்கின….குட்டியின் கண்களில் இருந்து பெருக்கெடுத்த கண்ணீர் அந்தக்கல்லை…………..முழுமையாக………….

கலைச்செம்மல் வை.கஜேந்திரன்
"மறுபிறப்பு" 2017 சிறுகதைத்தொகுப்பில் இருந்து.கல்..................... சிறுகதை.......... Reviewed by Author on November 10, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.