அண்மைய செய்திகள்

recent
-

189 பேருடன் கடலில் விழுந்த விமானத்தை தேட எத்தனை கோடி செலவு? -


இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான விமானத்தை தேடுவதற்கு ஆகும் சுமார் பதினெட்டரைக் கோடி ரூபாயை(38 billion rupiah) யார் செலவிடுவது என முடிவு செய்வதில் இழுபறி நீடிக்கிறது.
இந்தோனேசியாவின் ஜகர்டாவில் இருந்து பங்கல் பினாங்குக்கு 189 பயணிகளுடன் லயன் ஏர் JT 610 விமானம் கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் திகதி புறப்பட்டது.

புறப்பட்ட 13வது நிமிடத்தில் விமானமானது கடலில் விழுந்தது.
இதில் கிடைத்த மனித உடல் பாகங்களை வைத்து 129 பேரின் அடையாளங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டது. இதோடு தேடுதலை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.

ஆனால் உயிரிழந்தவர்களின் உறவினர்களின் போராட்டத்தால் மீண்டும் தேடுதல் பணி நடக்கவுள்ளது.
ஏற்கனவே குறித்த விமானத்தில் தகவல் பதிவுக் கருவி ஒன்று கிடைத்தது. விமானத்தின் இரண்டாவது கருப்புப் பெட்டி கிடைக்காமல் உள்ளது. மோசமான வானிலை தேடுதலுக்கு உதவும் பிரத்யேகக் கப்பலை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விமான தேடுதல் பணிக்கு சுமார் சுமார் பதினெட்டரைக் கோடி செலவாகும் என தெரியவந்துள்ளது.
இந்த பணத்தை யார் செலவிடுவது என முடிவு செய்வதில் இந்தோனேசிய போக்குவரத்து பாதுகாப்புக் குழுவுக்கும், லயன் ஏர் விமான நிறுவனத்துக்கும் இடையே இழுபறி நீடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

189 பேருடன் கடலில் விழுந்த விமானத்தை தேட எத்தனை கோடி செலவு? - Reviewed by Author on December 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.