அண்மைய செய்திகள்

recent
-

27,000 துண்டுகளாக சொந்த உடலை வெட்ட அனுமதித்த பெண்மணி:


அமெரிக்காவின் டென்வர் நகரில் குடியிருந்த பெண்மணி ஒருவர் தமது உடலை மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காக ஒப்படைத்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
டென்வர் நகரத்தில் குடியிருந்த 87 வயதான சூ பாட்டர் என்பவரே தமது உடலை மொத்தமாக மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காக ஒப்படைத்தவர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு சூ பாட்டர் தமது 87-வது வயதில் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

நாஜி ஜேர்மனியில் பிறந்து வளர்ந்த சூ பாட்டர் பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் நியூயார்க் நகருக்கு குடிபெயர்ந்தார்.

பின்னர் 1956 ஆம் ஆண்டு ஹரி என்பவரை திருமணம் செய்துகொண்டு இரண்டு பிள்ளைகளுக்கு தாயானார்.
குடும்ப பிரச்னை காரணமாக தனித்து வாழத் தொடங்கிய சூ பாட்டர் கடந்த 2000-ஆம் ஆண்டு அதிமுக்கிய முடிவு ஒன்றை எடுத்து அதை முறைப்படி அறிவிக்கவும் செய்தார்.
அதில் தாம் உயிரோடு இருக்கும் காலகட்டம் முழுவதையும் ஆவணமாக பதிவு செய்யவும், தமது இறப்புக்கு பின்னர் தமது உடலை ஆய்வுக்கு பயன்படுத்தவும் கோரிக்கை வைத்தார்.
இதன்படி சூ பாட்டர் இறக்கும்வரை மொத்தம் 15 ஆண்டுகள் அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவுகளையும் ஆவணமாக பதிவு செய்யப்பட்டது.

அவருக்கு ஏபட்ட நோய்கள், உடல் காயங்கள்,வலிகள், உணர்வுகள் என அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டது.
அவர் உயிருடன் இருக்கும்போதே, மருத்துவ ஆய்வுக்காக உடலை வெட்டும் காட்சியையும் பார்க்க அனுமதிக்கப்பட்டது.
மேலும், மரணத்திற்கு பின்னர் எந்த அறையில் இவரது உடலை குறித்த மருத்துவமனை பாதுகாக்கும் என்பது தொடர்பிலும் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தற்போதுவரை சூ பாட்டரின் உடல் உறையவைக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காக அவரது உடலை 27,000 துண்டுகளாக வெட்டியுள்ளனர்.

27,000 துண்டுகளாக சொந்த உடலை வெட்ட அனுமதித்த பெண்மணி: Reviewed by Author on December 15, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.