அண்மைய செய்திகள்

recent
-

இந்தோனேஷியாவை புரட்டி போட்ட சுனாமி! பலி எண்ணிக்கை 429 ஆக உயர்வு -


இந்தோனேஷியாவின் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா பகுதிகளை தாக்கிய சுனாமி பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 429 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு ஜாவா தீவில் உள்ள அனாக் கிரகடாவ் என்ற எரிமலை, கடந்த 22ஆம் திகதி இரவு வெடித்து சிதறியது. இதனால் கரும்புகையும், நெருப்புக் குழம்பும் வெளியேறியதைத் தொடர்ந்து, சுந்தா ஜலசந்தி பகுதியில் சிறிது நேரத்தில் ராட்சத சுனாமி அலைகள் எழுந்தன.
இந்த சுனாமியினால் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா பகுதிகள் தாக்கப்பட்டன. இதனால் நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் தரைமட்டமானதுடன் முதற்கட்டமாக 43 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் தண்ணீர் வடியத் தொடங்கியதும் மீட்பு பணி தொடங்கியது.


AP

அப்போது ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டன. படுகாயமடைந்த பலர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், பலர் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்ததால் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது.
இந்நிலையில் இந்த கோர தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 429 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுமார் 1500 பேர் காயமடைந்துள்ளதாகவும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், காணாமல்போனதாக கருதப்படும் 128 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


AP
AP

இந்தோனேஷியாவை புரட்டி போட்ட சுனாமி! பலி எண்ணிக்கை 429 ஆக உயர்வு - Reviewed by Author on December 26, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.