அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்திலே முதல் தடவையாக 500000 ரூபா பணப்பரிசு பெற்ற நாவலாசிரியர்-சீ.பத்திநாதன் பர்ணாந்து


மன்னார் மாவட்டத்திலே  முதல் தடவையாக 500000 ரூபா பணப்பரிசு பெற்ற நாவலாசிரியர் சீமான் பத்திநாதன் பர்ணாந்து
வருடாவருடம் FAIRWAY- பெயார்வே  தேசிய இலக்கிய  விருது-2018-12-03 இம்முறையும் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில்  வழங்கப்படுகின்ற தேசிய விருதான
மன்னார் மாவட்டத்தின் வங்காலை கிராமத்தின்
நாடக நடிகர் நாவலாசிரியர் கவிஞர் விளையாட்டு என பன்முகப்படைப்பாளியும் முதலமைச்சர் விருதுபெற்றவரும் 40வருட கலைச்சேவையாளரும் பதிவாளருமான சீமான் பத்திநாதன் பர்ணாந்து

இவரது   படைப்புக்கள்
“பாடம்” கவிதைதொகுப்பு-2016
“கூத்துப்படிச்சகதை”-நாவல் 2016
“தோற்றுப்போனவர்கள்” நாவல் 2017

“1964-டிசம்பர்-22” நாவல்-2018

இவரது   மேடையேற்றப்பட்ட நாடகங்கள் ------
  • காலதேவன் கட்டளை-வரலாற்று நாடகம் ஜோண்டீ சில்வா கொழும்பு-1977
  • வேட்டை-வரலாற்று நாடகம் லும்பினி மண்டபம்-கொழும்பு-1978
  • மரணத்தின் பாதை சமய நாடகம் தேசிய வானொலி வன்னி சேவை-1993
  • பொக்கிஷம் வரலாற்று நாடகம் தேசிய பேரவைக்கு தெரிவு செய்யப்பட்டது.
  • செஞ்சோற்றுக்கடன் நாட்டுக்கூத்து திருகோணமலை-1998
  • முப்பதுவெள்ளிகள்-சமயநாடகம் வங்காலை-1982
  • வெடிகுண்டு சமூகநாடகம் தேசிய இளைஞர்சேவைகள் மன்றவிழா-1983
  • சவுலும் பவுலும் நாட்டுக்கூத்து 1976-1977
  • மனக்கோலம் சமூகநாடகம் வங்காலை 1978-1979
  • தரித்திரக்குழந்தை சமூகநாடகம் வங்காலை 1978
  • மறைந்த விண்மீன் நாட்டுக்கூத்து வங்காலை-1998
  • “விடுதலை” சமய நாடகம் வங்காலை 1980
  • “குருதியில் நனைந்த கோயில்” சமயநாடகம் வங்காலை-1976
  • “மண்ணின் மைந்தர்கள்”சமூகநாடகம் மேடையேற்றப்படவில்லை
மன்னார் மாவட்டத்தின் எழுத்து துறையில் பலர் சாதனைகள் புரிந்து கொண்டு இருக்கின்ற வேளையில் அதே வேளையில் நாவலுக்கு தனியாக பெயர் பதித்த தேசிய கலைஞர் திரு S.A. உதயன் அவர்களும் தற்போது  மன்னாருக்கு பெருமை சேர்ர்த்துள்ள  நாவலாசிரியர் சீமான் பத்திநாதன் பர்ணாந்து அதுவும் இரண்டாவது “தோற்றுப்போனவர்கள்”  2017 நாவலுக்காக 500000 ரூபா(இலட்சம் ரூபா பணப்பரிசினை) விருதினையும்
பெற்றுக்கொண்டார்.

முதல் தடவையாக விருதும் அதிக தொகை பணப்பரிசும் பெற்றுக்கொண்ட போது ....
மகிழ்ச்சி மட்டற்ற மகிழ்ச்சி  அதுவும் எனது இரண்டாவது நாவலுக்கு கிடைத்துள்ளது. மொத்தமாக 120 நாவல்கள் கடைசிதேர்வுக்கு தமிழ் பகுதியில் 05 நாவல்களில்  முதல் நாவலாக தேர்வாகியுள்ளது.
நிகழ்வுக்கு அழைத்திருந்தார்கள் மேடையில் ஏறுமட்டும்  எனக்கு தான் முதல் பரிசு என்பது தெரியாது. மாபெரும் மேடை சிறந்த கல்விமான்கள்  கண்கவரும் வரவேற்பு நிகழ்வுகள் உபசரிப்புக்கள் மத்தியில் எனது பெயரை அழைத்தபோது  அந்த மகிழ்ச்சியை சொல்லிவிட முடியாது......
எனது நாவலை “தோற்றுப்போனவர்கள்” தேர்வு செய்த பெயார்வே நிறுவனத்திற்கும் அதன் அதிகாரிகள் ந்டுவர்களுக்கும்  ஏற்பாட்டாளர்களுக்கும்  எனது குடும்பத்திற்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கும்
விசேட விதமாக மன்னார் கலைஞர்களின் அடையாளமாக திழும் நியூமன்னார் இணையத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பாராட்டுக்கள்

 மன்னாருக்கு பெருமை சேர்த்துள்ள நாவலாசிரியர்-சீ.பத்திநாதன் பர்ணாந்து அவர்களுக்கு நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்.

கலைச்செம்மல் -வை.கஜேந்திரன்-




மன்னார் மாவட்டத்திலே முதல் தடவையாக 500000 ரூபா பணப்பரிசு பெற்ற நாவலாசிரியர்-சீ.பத்திநாதன் பர்ணாந்து Reviewed by Author on December 08, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.