அண்மைய செய்திகள்

recent
-

70 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு வரும் கிறிஸ்துமஸ் வால் நட்சத்திரம்! நாசா வெளியிட்ட மகிழ்ச்சி தகவல் -


கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் வால் நட்சத்திரத்தை கிறிஸ்துமஸ் வால் நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
இது கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற 16ம் தேதி பூமிக்கு மிக அருகில் பயணிக்கும் என்று நாசா விண்வெளி மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த கிறிஸ்துமஸ் வால் நட்சத்திரம் 46பி விர்டனேன் (46P/Wirtanen) என்று அழைக்கப்படுகிறது.
மேலும் இந்த வால் நட்சத்திரத்தம் பூமிக்கு மிக அருகில் பயணிக்கும் எனவும் வருகின்ற 16ம் தேதி மக்கள் நேரடியாக இரவு 10 மணிக்கு மேல் எப்போது வேண்டுமென்றாலும் காணலாம் என்று நாசா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை இந்த வால் நட்சத்திரத்துடன் சேர்த்து ஜெமினிட்ஸ் வால் நட்சத்திர மழையையும் வானில் பார்க்கலாம். அன்று இரவு முதல் நாளை காலை வரை மட்டும் இந்த நட்சத்திர மழையை காண முடியும் என கூறப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்தில் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் 3200 பாயேதான் என்ற பெரிய விண்கல் பூமிக்குள் நுழையும் போது மணிக்கு கிட்டத்தட்ட 100 விண் கற்கள் என்று வால் நட்சத்திர மழையாய் பூமிக்குள் நுழையும் எனவும் இந்த விண் கற்களை டெலஸ்கோப் அல்லது பைனாகுலர் மூலம் மக்கள் தெளிவாக காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
70 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு வரும் கிறிஸ்துமஸ் வால் நட்சத்திரம்! நாசா வெளியிட்ட மகிழ்ச்சி தகவல் - Reviewed by Author on December 15, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.