அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மண்ணிற்கு முதல் முறையாக சுற்றுலாத்துறைக்கான விருது-படங்கள்



SRI LANKA TOURISM AWARDS -2018 இலங்கையின் 2018ம் ஆண்டுக்கான சுற்றுலாத்துறையில் சாதனை புரிந்தோருக்கான தேசியவிருது வழங்கும் விழா கடந்த மார்கழிமாதம்  06ம் திகதி கொழும்பு SHANGRI LA கொட்டலில் சுற்றுலாத்துறை அமைச்சினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் சுற்றுலாத்துறையில்  சாதனை படைத்த பல்வேறுபட்ட தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் சிறப்பம்சமாக மன்னார் மாவட்டத்தில் WUSC-நிறுவனத்தால் நடைமுறைப்படத்தப்பட்ட MIC-TOURISM திட்டமானது சிறந்த  மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டத்திற்கான தேசியவிருதினை தட்டிச்சென்றது.
இந்த விருதினை பெறுவதற்காக சிறந்த முறையில் திட்டத்தனை நடைமுறைப்படுத்திய றரளஉநிறுவனத்தின் மன்னார் மாவட்ட சிரேஷ்ட நிகழ்ச்சிதிட்ட உத்தியோகத்தர் திரு.சண்முகரெட்ணம் செந்தூரன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இந்த MIC-TOURISM திட்டமானது செந்தூரன் அவர்களால் 2016ம் ஆண்டு யூலை மாதம் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது கற்றுக்கொண்ட பாடத்தின் அடிப்படையில் மன்னார் மாவட்டத்திற்குரிய  சிறந்த சுற்றுலாத்துறை திட்டமாக அறிமுகப்படத்தப்பட்டது இந்த MIC-TOURISM திட்டம் மூலம் முதன் முறையாக மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறை பாடசாலை ஒன்றை நிறுவி அதன் மூலம் மன்னார் மாவட்ட இளைஞர் டிப்ளோமா கற்கை நெறியினை வழங்கப்பட்டு  மன்னாரிலும் வெளிமாவட்டத்திலும் நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டது.
மேலும் மன்னார் மாவட்ட சுற்றுலாத்துறையை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட வீடியோ ஆவணப்படம் மூலம் மன்னார் மாவட்ட சுற்றுலாத்துறையானது தேசியரீதியிலும் சர்வதேசரீதியிலும் பிரபல்யமானது.
SRI LANKA TOURISM AWARDS -2018 இந்த விருதானது முதன்முறையாக ஒரு சர்வதேச தொண்டு நிறுவனத்தின் தேவைக்காக இலங்கையில் வழங்கப்பட்ட தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு இவ்விருதானது வடமாகாணத்தின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சியில் மன்னார் மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்ற ஒரு அங்கீகாரமாகும்.

WUSC-இந்நிறுவனத்திற்கும் இதற்காக உழைத்த அனைவருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்…
மன்னார் மண்ணின் இராஐகிறீடத்தில் ஒரு இரத்தினக்கல் போன்றது எனலாம்.

தொகுப்பு-வை-கஜேந்திரன்- 


மன்னார் மண்ணிற்கு முதல் முறையாக சுற்றுலாத்துறைக்கான விருது-படங்கள் Reviewed by Author on December 13, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.