அண்மைய செய்திகள்

recent
-

இதுதான் வாழ்வு.............சிறுகதை ..........


இதுதான் வாழ்வு........

நான் புதிதாக பிறந்த விட்டேன் நேற்று நான் மொட்டாக இருந்தேன் இன்று பூவாக மலர்ந்திருக்கிறேன் சு10ரியக்கதிர்கள் என்னை தொடுகிறது தென்றல் காற்று என்னை வருடிச்செல்கிறது என் மேனியெங்கும் புத்துணர்ச்சி கூத்தாடுகின்றது ஆகா…ஆகா…அருமை அருமை இனிமையான உலகம் இன்று இனிமையான நாள் என்று தொலைக்காட்சியில் செல்லக்கேட்டு சிரித்தவாறே எனது இனிய நாளை இருட்டாக்குவதற்கென்றே வருகின்றார் தோட்டக்காரர்….. ஐயோ…! ஐயோ…! என்னை பறிக்காதீர்கள் என்னை விட்டு விடுங்கள் கத்தினேன் கதறினேன் பக்கத்தில் வந்தவர் சில வினாடிகள் நின்றார்.
 நான் கதறியது அவரின் காதில் விழுந்து விட்டதா….தப்பினேன் என நினைக்க மறுவினாடியே மறைந்தது எனது உலகம் மடக்கிப்பிடித்து பறித்து கூடையில் போட்டார் அந்த மொட்டை தாத்தா… கண்ணை மூடியவாறு கிடந்தேன்….
எனக்கு மேலே யாரோ யாரோ எல்லாம் மளமளவென வந்து விழுகின்றார்கள் யாரையா இது துன்பத்தில் இருக்கும் போது இப்படிப்பந்தாடுவது கோபத்துடன் கண்ணைத்திறந்து பார்க்கிறேன் என்னருகே என்னினத்தினைச்சேர்ந்தவர்கள் ஏராளம் பேர் என்ன பார்வை என்ற கேள்வியோடு… எழுவதற்கு முயற்சி செய்ய மேலும் எம்மினத்தாரில் பலர் வந்து விழுகின்றார்கள்… கூடையில் அப்பதான் வந்து விழுந்தவர் என்ன கவலை உமக்கு… முகம் வாடியுள்ளது ஒன்றும் இல்லை… இல்ல… சும்மா சொல்லும் இந்த அழகிய உலகை இரசித்து கொண்டு இருந்தேன் அதற்குள் அந்த மொட்ட தாத்தா என்ன இந்தக்கூடையில் போட்டு விட்டார் என்னப்பா இது இதற்கு ஏன் கவலைப்படுகிறாய்… இந்த மொட்ட தாத்தா உன்னை பறிக்கா விட்டாலும் நீ காலையில் பூத்து மாலையில் வாடித்தானே போவாய் அதற்குள் தானே எதையும் ரசிக்க முடியும் பிறகு மெல்ல மெல்ல இறந்து போவது தானே எம்வாழ்வு.!

கவலையை விடும் என்றதும் எனக்கு கவலை இல்லை எமது பயணம் எங்கு எதை நோக்கி நகரப்போகின்றது….
மங்கயைரின் கூந்தலிலா…
திருமணப்பந்தலிலா….
காதலர் கைகளிலா….
தெய்வங்களின் திருவடிகளிலா…
கடைத்தெருவிலா…..
மரண வீட்டிலா…..
எங்கு போய்ச்சேரப்போகிறோம் என்றுதான் கவலையாக உள்ளது. எங்கு சென்றாலும் இறப்புத்தானே என்றது இன்னொன்று…
எமது இறப்புக்கூட நாம் சேரும் இடத்தினைப்பொறுத்து சிறப்படையும் அல்லவா…
ஏக்கங்கள் எமக்குள் தொடர…தொலைபேசியில் முணுமுணுத்தார் தோட்டக்காரர் தனது கூலியாளை அழைத்து நம்மூர் கோயில் தலைவர் தவறிட்டாராம் அதனால பெரியமாலையும் மலர்வளையமும்  பூவும் வேண்டுமாம் சீக்கிரமாய் வாடா… சொன்னதும் சுறுண்டு பறந்து வந்து நின்றான். வந்து வேலையைப்பாருடா…

அப்போதுதான் துயில் களைந்து நீராடிவிட்டு வந்த மொட்டைத்தாத்தாவின் வட்டத்தாமரை போன்ற மனைவி திருவாய்மலர்ந்து என்னங்க எனக்கு கொஞ்சம் பூக்கள் வேண்டும் என்றாள். அந்தக்கூடையில் எடு கொஞ்சமாக…
அவளது பூப்போன்ற கையால் எங்களில் சிலரை மெல்ல வாரியனைத்தாள் தாயைப்போல… வசப்பட்டது வானம் என்று எம்பிக்குதித்தேன் என்ன பயன் தவறிவிட்டேன். மாலை கட்டும் பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டோம். நானும் சில நண்பர்களும் மாலையானோம் மற்றும் பல நண்பர்கள் மலர்வளையம் ஆனார்கள் ஏனைய எம்மினத்தார் இருகூடைகளிலும் இருந்தார்கள் என்ன நிகழப்போகின்றது என்பது தெரியாமல் நானும் தான்…

தோட்டக்காரர் அந்த சிறிய கூடையை குளிர்சாதனப்பெட்டியில் போடு…மற்றக்கூடை மாலை மலர்வளையம் எல்லாவற்றையும்; கசங்காமல் பத்திரமாக எடுத்துச்சென்று கொடுத்தால்தான் முழுமையாக பணம் தருவார்கள் என்னடா… சொன்னது விளங்கிற்றாடா…என்று கத்தினார் தொண்டை கிழிய  சரிங்கையா அப்படியே செய்கிறேன்...

அவன் பத்திரமாக எங்களை துவிச்சக்கரவண்டியில் ஏற்றிக்கொண்டு அந்தப்பெரியவரின் வீட்டிற்கு கொண்டு சென்றான் அங்கு பெரும்திரளான சனக்கூட்டம் அலைமேதியது. பெரியவர் ஒருவர் எங்களை எடுத்து அவருக்கு மாலையாக அணிவத்தார் மலர்வளையத்தினை அவர் முன்னாள் அவரது நாமத்;தினை குறித்து வைத்தார்கள் பூக்கூடையும் அவர் அருகில் வைக்கப்பட்டது.
நான் இறந்த பெரியவரின் நெஞ்சுப்பகுதியில் இருக்கிறேன் அப்பாடா… என்ன இவர்கள் இவ்வாறு அழுது புலம்புகின்றார்கள் ஒருவர் இறந்ததிற்கு இவ்வளவு பேர் புலம்புகின்றார்களே இவர் நல்ல மனிதர் போல எவனொருவன் வாழும் போது பிறருக்காக வாழந்து மடிகிறானோ அவனுக்குத்தான் இவ்வாறான கூட்டம் கூடும்

அப்பாடா…. அப்ப நான் ஒரு நல்ல மனிதனின் மரணத்தில் தான் நானும் இறக்கப்போகின்றேன் எனது மனம் சந்தோஷப்பட திடிரென புலம்பல் சத்தம் அதிகமானது.  கடைசியாக பார்க்கிறவர்கள் பாருங்கள் உறவுக்காரர்களே என்று ஒரு பெரியவர் கூறினார் சரி தம்பி நேரமாச்சு பெட்டியை மூடுங்க பெட்டி மூடப்படுகின்றது...

மலர்வளையத்தினை சுமந்து கொண்டு சிலர் முன்னாளும் பலர் பின்னாளும் வர நடுவில் அப்பெரியவர் ஊர்வலமாக எடுத்துவரப்படுகிறார் அவரின் புகழ் பாமாலை கல்வெட்டினையொருவர் பாடுகிறார். வெடிச்சத்தங்கள் காதைப்பிளக்க பூக்கள் வீதியெங்கும் வீசப்படுகின்றது. இறுதிப்பாடலோடு ஊர்வலம் முடிவடைகின்றது. கிடங்கின் வைத்து இறுதிப்பிடி மண்போட்டு மூடுகின்றார்கள் மலர்வளையத்தினை அவரது கால்மாட்டில் வைக்கும் போது தவறிவிழுகிறேன் அவரின் தலைமாட்டிலே சந்தனக்குச்சியும் மெழுகுவர்த்தியும் கொழுத்தப்படுகின்றது வந்ந கூட்டம் மெல்ல மெல்ல குறைகின்றது தனல் போன்ற மண்ணில் கிடந்த என்னை சந்தனப்புகை உசுப்பியது அப்போதுதான் எனக்கு ஞாபகம் வருகின்றது

தோட்டக்காரரின் மனைவியின் கையில் அகப்பட்ட நண்பர்களும்  பெரியவரின் கழுத்தில் மாலையாக விழுந்த நண்பர்களும்  மலர்வளையத்தில் இருந்த நண்பர்களும் வீதியெங்கும் விழுந்த எம்மினத்தாரையும் நினைத்துப்பார்க்கிறேன்  ஒருநாள் வாழ்வில் அவரவர்க்கு ஏற்படும் துன்பங்களை எம்மினத்துக்காய் அழுவதற்கு கூட யாருமில்லையே….

மறுபிறப்பு சிறுகதை தொகுப்பில் இருந்து
கலைச்செம்மல்-வை.கஜேந்திரன்-


இதுதான் வாழ்வு.............சிறுகதை .......... Reviewed by Author on December 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.