அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட கலைஞர்களுடன் சந்திப்புகலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர்-மன்னார் மாவட்ட கலைஞர்களுடன் சந்திப்பு- கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர்-படங்கள்


மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.C.A.மோகன்ராஸ் அவர்களின் தலைமையில் உதவி அரசாங்க அதிபர் S.குணபாலன் அவர்களும் மாவட்ட செயலக மண்டபத்தில் 06-12-2018 காலை 9- 30 மணியளவில் சந்திப்பு ஆரம்பமானது.
கொழும்பில் இருந்து வருகை தந்த கலாசார அலுவல்கள் திணைக்களம்
கலாச்சாரப்பணிப்பாளர் அனுஷா கோகுல பெர்னாந்து உதவிப்பணிப்பாளர் சுசிந்த நிலங்க விதான திணைக்கள அதிகாரிகள் மன்னார் மாவட்ட  மாந்தை மேற்கு பிரதேச  செயலாளர் திரு.S.கேதீஸ்வரன் அவர்களும் மன்னார் மாவட்ட  கலாச்சார உத்தியோகத்தர்கள் அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்ட அமைப்புக்களின் கலாமன்றங்களின்  பிரதிநிதிகள் கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் பிரதான விடையங்களாக கலாசார அலுவல்கள் திணைக்களம் செயல்படும் முறை அத்துடன்
2019ம் ஆண்டிற்கான கலாச்சார செயல்முறைகள் திட்டங்கள் தொடர்பாக விபரிக்கப்பட்டது.
  • கலைஞர்களுக்கான விருதுகள்  தொடர்பாகவும்
  •  கலைஞர்களுக்கான கொடுப்பனவுகள்(நூல்கள் கொள்வனவு உதவித்தொகை)
  • கலைஞர்களுக்கான -காப்புறுதிதிட்டம்கலைமன்றங்களுக்கான போட்டி விதிமுறைகள்
அத்தோடு நாட்டுக்கூத்து வடமோடி தென்மோடி பாங்குகள் தான் தேசிய ரீதியில் கலந்து கொள்ளும் மன்னார் கலைஞர்கள் அவர்களின் தனித்துவமான  பாங்காக மாதோட்ட பாங்கு உள்ளது அதனையும் போட்டி விதிமுறையில்  சேர்த்துக்கொள்ளலாம் என்று கலைஞ்ர்களின் வேண்டுகோளுக்கு தேசிய ரீதியில் நடைபெறுகின்ற போட்டிகளுக்கு பொதுவான விதிமுறைகள் தான் வரும் அத்தோடு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனியாக இருக்கின்ற பாங்குகளை விதிமுறையில் சேர்த்துக்கொள்ள முடியாது.
உதாரணமாக
மன்னாருக்கு மாதோட்ட பாங்கு போல அநுராதபுரத்திற்கு ரகுட்ட  எனும் ஒரு மரபு  உள்ளது  இதை எப்படி சேர்த்துக்கொள்ள முடியும்...வேறுமாவட்டங்களில் இப்படி இல்லையே....
ஒட்டுமொத்தமாக 25 மாவட்டங்களுக்கும் சேர்த்து செய்யப்படுகின்ற கலாச்சார நிகழ்வுகள் சரியான முறையில் கிராமம் நகரம் மாவட்டரீதியில் செயல்படும் இருப்பினும் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் மன்னார் மாவட்டம் நிகழ்வுகளில் கலந்து கொள்வது குறைவாக உள்ளது என்றபோது..
  • கலைகலாச்சார போட்டிகளுக்குரிய விதிகுறைகள் எமக்கு கிடைப்பதில்லை
  • போட்டி முடிவுகள் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை
  • போட்டிகளில் கலந்து கொள்ளுவதற்கான வசதி வாய்ப்புக்கள் இல்லை(தேசிய போட்டிகள் கொழும்பில் நடைபெறுகின்றது)
  • நடன ஆசிரியர்கள் பற்றாக்குறை
இனிவரும் காலங்களில் மேலே சொல்லப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படும்.
முதல் கட்டமாக அனைத்து கலைஞர்களுக்கும் கலைஞர் அடையாள அட்டை வழங்கப்படும்நடமாடும் சேவை மூலம்  அத்துடன் 2019ம் ஆண்டின் செயற்பாடுகள் அடங்கிய குறிப்பேடு கலைஞர்களுக்குவழங்கப்படும்.
மேலதிக தகவல்களை எமது கலாச்சார அதிகாரிகள் உத்தியோகர்த்திர்களிடம் பெற்றுக்கொள்ளாம்.
-வை.கஜேந்திரன்-











































மன்னார் மாவட்ட கலைஞர்களுடன் சந்திப்புகலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர்-மன்னார் மாவட்ட கலைஞர்களுடன் சந்திப்பு- கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர்-படங்கள் Reviewed by Author on December 07, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.