அண்மைய செய்திகள்

recent
-

பிரான்சில் பெற்றோர் பிள்ளைகளை அடிக்க முடியாது: வருகிறது புதிய சட்டம் -


பிரான்ஸ் அரசியல்வாதிகள், பெற்றோர் பிள்ளைகளை அடிப்பதை தடை செய்யும் சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளதையடுத்து, பிரான்சில் இனி பிள்ளைகளை பெற்றோர் அடிக்க முடியாது.

பெற்றோர் தங்கள் அதிகாரத்தை மீறிச் செல்ல இயலாததை உறுதி செய்யும் நோக்கில் பிரான்ஸ் நாடாளுமன்றம் நேற்று வாக்களித்துள்ளது.
பெற்றோர் பிள்ளைகளை ஒழுங்குபடுத்தும்போது உடல் ரீதியான, வார்த்தை ரீதியான மற்றும் மனோ ரீதியான வன்முறைகளின்றி தங்கள் கடமையை செய்யவேண்டும் என்பதை இந்த சட்டம் வலியுறுத்துகிறது.

பிரான்சில் 85 சதவிகிதம்பேர், தங்கள் பிள்ளைகளை ஒழுங்கு படுத்துவதற்காகத்தான் அவர்களை அடிப்பதாக தெரிவித்துள்ளதையும் மீறி, நாடாளுமன்றம் இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
நேற்று காலையில் 51 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், ஒருவர் எதிர்த்தும் வாக்களித்த நிலையில், அது செனேட்டுக்கு அனுப்பப்பட உள்ளது.
இந்த கருத்தை முன் வைத்தவர் Maud Petit என்னும் நாடாளுமன்ற உறுப்பினராவார்.

பள்ளிகளில் பிள்ளைகளை அடிப்பதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளதேயொழிய பெற்றோருக்கு இல்லை.
மற்ற ஐரோப்பிய நாடுகளைப்போல பிரான்சும் பிள்ளைகளை அடிப்பதை தடை செய்ய வேண்டும் என்று Council of Europe மற்றும் குழந்தைகள் உரிமைக்கான ஐக்கிய நாடுகள் கமிட்டி இரண்டுமே பிரான்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தன.
அதேபோல் தடையை ஆதரிப்போர், பிள்ளைகளை அடிப்பது உடல் ரீதியாகவும் மனோ ரீதியாகவும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள்.
இந்த சட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், பிரான்ஸ் குழந்தைகளை அடிப்பதை தடை செய்யும் 55ஆவது நாடாக ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்சில் பெற்றோர் பிள்ளைகளை அடிக்க முடியாது: வருகிறது புதிய சட்டம் - Reviewed by Author on December 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.