அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சுற்றுலாத்துறையில் முதல் விருதுடன் -படங்கள்

SRI LANKA TOURISM AWARDS -2018 இலங்கையின் 2018ம் ஆண்டுக்கான சுற்றுலாத்துறையில் சாதனை புரிந்தோருக்கான தேசியவிருது வழங்கும் விழா கடந்த மார்கழிமாதம்  06ம் திகதி கொழும்பு SHANGRI LA கொட்டலில் சுற்றுலாத்துறை அமைச்சினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் சுற்றுலாத்துறையில்  சாதனை படைத்த பல்வேறுபட்ட தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் சிறப்பம்சமாக மன்னார் மாவட்டத்தில் WUSC-நிறுவனத்தால் நடைமுறைப்படத்தப்பட்ட MIC-TOURISM திட்டமானது சிறந்த  மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டத்திற்கான தேசியவிருதினை பெற்றுக்கொண்டது.

இந்த விருதினை பெறுவதற்காக சிறந்த முறையில் திட்டத்தனை நடைமுறைப்படுத்திய WUSC- நிறுவனத்தின் மன்னார் மாவட்ட சிரேஷ்ட நிகழ்ச்சிதிட்ட உத்தியோகத்தர் திரு.சண்முகரெட்ணம் செந்தூரன் அவர்கள் நேற்றைய தினம் 13- 12- 2018 மன்னார் மறைமாவட்ட ஆயர் லயனல் இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை  மன்னார்  மாவட்ட அரசாங்க அதிபர் C.A.மோகன்ராஸ் மற்றும் சுற்றுலாத்துறை பங்குதாரர்களான மன்னார் ஹொட்டல் உரிமையாளர் மன்னார்  வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகள் சகிதம் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டதுடன் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
 நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்துக்கள்.....வாழ்த்துக்கள்!

தொகுப்பு-வை-கஜேந்திரன்-



மன்னாரில் சுற்றுலாத்துறையில் முதல் விருதுடன் -படங்கள் Reviewed by Author on December 14, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.