அண்மைய செய்திகள்

recent
-

மணல் அகழ்வால் மன்னார் தீவு பாதிப்படையும் அபாயம் -மன்னார் பிரதேச சபையில் தெரிவிப்பு

மன்னார் பிரதேச சபை எல்லை பகுதிக்குள் நாளாந்தம் மணல் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருவதால் நான்கு பக்கங்களாலும் கடலால் சூழப்பட்டுள்ள மன்னார்தீவு எதிர்காலத்தில் அழிவை நோக்கிச் செல்லும் என மன்னார் பிரதேச சபை மாதாந்தக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டபோது இவற்றை முற்றாகநிறுத்துவதற்கு வாக்கெடுப்பு நடாத்தியபோது தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவரைத் தவிர ஏனையோர் சாதகமாக வாக்களித்தனர்.

மன்னார் பிரதேச சபையின் ஒன்பதாவது மாதாந்தக் கூட்டம் அண்மையில்
 தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் 21 உறுப்பினர்களில் ஒருவரைத் தவிர ஏனையோர் கலந்து
கொண்டனர்.

இக் கூட்டத்தில் மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அனல்
மின்சாரத்துக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் குறிப்பாக நடுக்குடா கடலோரத்துக்கு அருகாமையிலிருந்த மணல் திடல்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

சுனாமி காலத்தில் இவ்வாறான மணல் திட்டிகளே எமது பகுதியை கடல்
வெள்ளத்திலிருந்து காப்பாற்றியது. அத்துடன் எமது பகுதிக்குள் மணல் அகழ்வு
பல இடங்களிலும் நடைபெறுவதால் நான்கு பக்கங்களும் கடலால்
சூழப்பட்டிருக்கும் மன்னார் தீவு வெகு விரைவில் கடலில் மூழ்கும் அபாயம்
இருப்பதாக கருத்துக்கள் வெளிப்பட்டன.

இதற்கு தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹீர் தெரிவிக்கையில் சபையிலுள்ள
அனைவரும் ஒன்றினைந்து மன்னார் பிரதேச சபை பகுதியில்  மணல் அகழ்வு செய்வதைதடைசெய்வோம் என தீர்மானித்து கையொப்பம் இட்டுத் தந்தால் நான் முற்றாக தடைசெய்வதற்கான ஆவண செய்வதாக தெரிவித்து ஒவ்வொரு உறுப்பினர்களிடமும் வாய் மூலம் சம்மதம் பெறப்பட்டது.

அப்பொழுது அமர்வில் கலந்து கொண்ட 20 உறுப்பினர்களில்  தமிழ் தேசிய
கூட்டமைப்பு உறுப்பினர் ஜே.கொன்சன் குலாஸ் தவிர ஏனையோர் தடைசெய்ய சம்மதம் தெரிவித்து வாக்களித்தளித்தனர்.

உறுப்பினர் ஜே.கொன்சன் குலாஸ் முதலில் தடைசெய்ய வாக்களிக்க தயக்கம் காட்டிக்கொண்டிருந்தபொழுதும் பின் கருத்து தெரிவிக்கையில் நடுக்குடாப்பகுதியில் அனல் மின்சார நடவடிக்கை எடுப்போரால் கடற்கரை மணல் திட்டுகளை அழிக்கும் நடவடிக்கையை முதலில் தடை செய்யுங்கள் என தெரிவித்தார்.

இதற்கு தவிசாளர் கருத்து தெரிவிக்கையில் இவ்விடயத்தில் அனைத்து
உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே எமது
பிரதேச பகுதிக்குள் மணல் அகழ்வு செய்யாதிருக்கும் நடவடிக்கையை
முன்னெடுப்பேன் என தெரிவித்தார்.





மணல் அகழ்வால் மன்னார் தீவு பாதிப்படையும் அபாயம் -மன்னார் பிரதேச சபையில் தெரிவிப்பு Reviewed by Author on December 17, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.