அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பல அபிவிருத்தி திட்டங்கள்....இந்த நிலையில்தான்......இதனை யார் தடுப்பது......படங்கள்


 மன்னாரில் தற்போது பலவகையான  அபிவிருத்திகள் நடைபெறுகின்றது எங்கும் அபிவிருத்தி அத்தனையிலும் படுத்திருக்கின்றது இலஞ்சமும் மோசடியும் இவைகளை சுமந்துகொண்டு வருகின்ற அபிவிருத்திகள் போலியோ குழந்தைகள போலவே உள்ளது.....
இதனை யார் தடுப்பது
  • இது யார்  தவறு.....
  • இதற்கு யார் பொறுப்பு.....
மன்னாரில் பல அபிவிருத்தி திட்டங்கள்  நடைபெறுகின்றது
அத்தனையும் தரமானவையா...????? என்றால்.........?????

மன்னார் காட்டுபள்ளி ,கொம்பியூட்டர் சென்டர் வீதியில் உள்ள ஒரு உள்ளக வீதியின் நிர்மானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .
இந்த பணியினை எடுத்துள்ள ஒப்பந்ததாரர்கள் உரிய முறையில் பணிகளை முன்னெடுக்கப்படாமல் நடைபெற்றுவருவதை எம்மால் அதானிக்க முடிகிறது .அதே போல் மன்னாரில் உள்ள பொறியியளாலர்கள் குழுவால் குறித்த பணி ஒழுங்கான முறையில் நடைபெறவில்லை என்பதை சென்று பார்த்து  தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர் .

வீதியில் உள்ள தொலைபேசி இணைப்பு கம்பம் அப்படியே வைத்தும் மற்றும் இதனை உரிய லெவல்-LEVAL (மட்டம்),இல்லாமலும் ஏற்கனவே நீர் தேங்கியிருந்த பகுதுயில் களிமண் அகற்றப்படாமலும்,போதிய அளவில் நிர்மாண பொருட்கள் இல்லை ,
இதற்கான நிதி ஒதுக்கீடு அமைச்சர் ஒருவரால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது...
இந்த வீதி பணிகள் உரிய முறையில் மேற்பார்வை செய்யப்படவும்,தரமான சாலையை அமைப்பதை உறுதிப்படுத்துவதும் எமது நகர சபையினரின் மேலான கடமையாகும் .
உரியவர்கள் உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு செயல்படுத்துவீர்கள் என நம்புகிறோம் .

இனிவரும் காலங்களில் செய்யப்பட உள்ள பணிகளுக்கு மன்னார் பொறியியளாலர்கள் குழு  இலவசமாக சரியான ஒரு திட்டவரைவை தர தயாராக உள்ளனர்.  இவர்களுடன் கலந்தாலோசிப்பதன் மூலம் தரமான முறையில் அபிவிருத்தி திட்டங்களை தகுதியானவர்களுக்கு கொடுத்து. அபிவிருத்தியை மேற்கொள்வதன் மூலம் நீண்டகாலப்பாவனைக்கு  உகந்ததாக அமைய  அனைவரும் ஒன்றுபடவேண்டும்.

யாருடைய நிதி ஒதுக்கீடாக இருந்தாலும் அந்த நிதியானது சரியான முறையில் சரியான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதாக இருக்கவேண்டும் ஏனெனில்  மக்களின் வரிப்பணமே அதில் யார் கையாடல் செய்தாலும் அது தவறானது.
பிழைகள் முறைகேடுகள் நடக்கின்றபோது.  அதை பார்த்துக்கொண்டிராமல் அதனை  தடுத்து நிறுத்தி ஆக்கபூர்வமான அபிவிருத்திக்கு .......

அபிவிருத்திக்கு ஒன்றிணையலாம்...
மன்னார் பொறியியளாலர்கள் குழு  இலவசமாக சரியான ஒரு திட்டவரைவை ஆலோசனைகள் வழங்க தயாராக உள்ளனர்.










மன்னாரில் பல அபிவிருத்தி திட்டங்கள்....இந்த நிலையில்தான்......இதனை யார் தடுப்பது......படங்கள் Reviewed by Author on December 21, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.