அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்திற்குரிய கால் நடைகளையும் பராமரிப்பாளர்களையும் செட்டிகுளம் பிரதேச எல்லையை விட்டு வெளியேறுமாறு அறிவித்தல்-தி.பரஞ்சோதி -



கட்டுக்கரைக் குளத்தினை அண்டிய பகுதியில் மேற்கொள்ளப்படும் சட்ட விரோத பயிர்ச் செய்கையின் காரணமாகவே கால்நடைகளை  பராமரிப்பிற்கு வெளியிடங்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் தி.பரஞ்சோதி தெரிவித்தார்.

-இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

மன்னார் மாவட்டத்திற்குரிய கால் நடைகளையும் பராமரிப்பாளர்களையும் செட்டிகுளம் பிரதேச எல்லையை விட்டு வெளியேறுமாறு செட்டிகுளம் பிரதேச சபை அறிவித்தல் விடுத்துள்ளது.

-இதனால் நானாட்டான் மற்றும் முசலி பிரதேச கால் நடை உரிமையாளர்கள் கால் நடைகளை பராமரிப்பதற்கு உரிய இடங்கள் இன்றி சிரமங்களை எதிர் நோக்குகின்றார்கள்.

பெரும்போக நெற்செய்கை ஆரம்பிக்க முன் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நெற்செய்கை காலங்களில் கால் நடைகளை பராமரிப்பது தொடர்பான கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் உள்ள தேத்தாவாடி , கட்டுக்கரை ,  செட்டிகுளம் பிரதேசத்தில் உள்ள ஆலங்குளம் போன்ற இடங்கள் தெரிவு செய்யப்பட்டது.

இதில் கட்டுக்கரை பகுதிக்குள் சட்ட விரோதமாக பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படுவதால் அவ்விடங்களில் கால் நடைகளை மேய்ச்சலுக்காகவும், பாராமரிப்பிற்காகவும் விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 இதன் காரணமாக செட்டிகுளம் பிரதேசம் ஆலங்கும் பகுதிக்கு கால் நடைகளை கொண்டு  செல்லும் நிலை ஏற்பட்டது.

ஆனால் கட்டுக்கரை குளத்தின் ஒரு பகுதி 1970களின் பின்னர் கால்நடை பராமரிப்பிற்காக ஒதுக்கப்பட்ட ஆதாரங்களும் உண்டு. கட்டுக்கரைக்குளத்தில் சட்டவிரோத பயிர்ச் செயகை நிறுத்தப்படுமாயின் வெளியிடங்களுக்கு கால்நடைகளை கொண்டு செல்லும் தேவை இருக்காது.

செட்டிகுளம் பிரதேச சபை திடீரென இந்த முடிவை எடுத்தமையால் எம்மால் ஒன்றும் செய்யமுடியாமல் உள்ளது.

இவ்விடையம் சம்பந்தமாக நானாட்டான் மற்றும் முசலி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்க சமாசத்தினருடன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து இந்த பிரச்சினைக்கான தீர்வை பெற உள்ளதாக நானாட்டான் பிரதேச சபை தலைவர் தி.பரஞ்சோதி மேலும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்திற்குரிய கால் நடைகளையும் பராமரிப்பாளர்களையும் செட்டிகுளம் பிரதேச எல்லையை விட்டு வெளியேறுமாறு அறிவித்தல்-தி.பரஞ்சோதி - Reviewed by Author on December 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.