அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில்....தொழிலுரிமைத்துவமும் சிறிய வியாபார முகாமைத்துவமும் உயர்தர சான்றிதழ் கற்கை நெறி



இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மன்னார் கற்கை நிலையம்
   
தொழிலுரிமைத்துவமும்  சிறிய வியாபார முகாமைத்துவமும் உயர்தர   சான்றிதழ் கற்கை நெறி-(ESBM)    கல்வியாண்டு 2019 – 2020  (1 வருடம்)

      அனுமதிக்கான  தகைமைகள் 

விண்ணப்பதாரி 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல்  வேண்டும்.

1.க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில்  இரண்டு தடவைகளுக்கு மேற்படாத அமர்வில் கணிதம் மற்றும் முதல் மொழியில் இரு திறமை சித்திகள் உட்பட 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். 
அல்லது
2.முப்பது (30) கணிப்பு விகிதத்தை கொண்ட SLQF மட்டம் 01 இற்கான  சமூக விஞ்ஞானங்கள்  சான்றிதழ்  கற்கை நெறியினை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

அல்லது 
3.முப்பது (30) கணிப்பு விகிதத்தை கொண்ட SLQF மட்டம் 01 இற்கான  சான்றிதழ்  கற்கை நெறியினை அல்லது இலங்கை திறந்த  பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் சான்றிதழ் கற்கை நெறிக்கு   மேற்பட்ட  கற்கை நெறியினை   பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

அல்லது 
4.அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றில் NVQF மட்டம் 3 அல்லது அதற்கு மேற்பட்ட  மட்டத்தில்  சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

அல்லது 
5.பல்கலைக்கழக அவையினால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய வேறு ஏதேனும் தகைமைகளை கொண்டிருத்தல் வேண்டும்.

குறிப்பு :- இக் கற்கை நெறியினை வெற்றிகரமாக  நிறைவு செய்பவர்கள்  அனுமதி பரீட்சைக்கு தோற்றாது  நேரடியாக முகாமைத்துவ  கற்கை   பட்டமாணி  நிகழ்ச்சித்திட்டத்துக்குள்  சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்)


இக் கற்கை நெறிக்கான விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கும் மேலதிக விபரங்களை பெற்று கொள்வதற்கும் இலங்கை திறந்த பல்கலைக்கழக மன்னார் கற்கை நிலையத்தினை அணுகவும். மேலும் பின்வரும் இலங்கை திறந்த  பல்கலைக்கழக இணையத்தளத்திற்கு சென்றும் விண்ணப்பிக்க முடியும்.https://payment.ou.ac.lk/
விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலம்:- 02.12.2018 தொடக்கம் 02.01.2019 வரை  விண்ணப்பபடிவ கட்டணம்-250/=

மேலதிக தொடர்புகளுக்கு
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

மன்னார் கற்கை நிலையம்                 
RDS கட்டிடம்,சிறிய குருமட வீதி,சாவற்கட்டு-மன்னார்
0232251999/0775625352


மன்னாரில்....தொழிலுரிமைத்துவமும் சிறிய வியாபார முகாமைத்துவமும் உயர்தர சான்றிதழ் கற்கை நெறி Reviewed by Author on December 10, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.