அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியை நேரடியாக பார்வையிட்ட காணாமல் போனோர் அலுவலக பிரதிநிதி


மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது 118 வது நாளாக இன்று(18) செவ்வாய் கிழமை சட்டவைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம் பெற்று வருகின்றது

தற்போது அகழ்வு பணிகள் மற்றும் அப்புறப்படுத்தல் பணிகள் உடன் புதைகுழியினை சற்று ஆலப்பட்டுத்தி அகழும் பணிகளும் இடம் பெற்று வருகின்றது இதுவரை மன்னார் மனித புதை குழியில் இருந்து 276 மேல்  முழு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவற்றில் 269 க்கு மேல் மனித எச்சங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு நீதி மன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது

குறிப்பாக இன்றைய தினம் மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியினை நேரடியாக பார்வையிடுவதற்காகவும் தகவல்களை பெறுவதற்காகவும் காணமல் போனோர் அலுவலக பிரதிநிதி மிராக் ரஹீம் நேரடி வியஜம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்

இன்றைய தினம் இதுவரை மீட்கப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த மனித எச்சங்களில்  பரிசோதனைகாக அனுப்பட தகுதியான மனித எச்சங்களை தெரிவு செய்யும் பணியும் இடம் பெற இருப்பது குறிப்பிடதக்கது.







மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியை நேரடியாக பார்வையிட்ட காணாமல் போனோர் அலுவலக பிரதிநிதி Reviewed by Author on December 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.