அண்மைய செய்திகள்

recent
-

கலாபூஷணம் கிறிஸ்தோகு சந்தியோகு அவர்களின் அகத்தில் இருந்து......"கோடை இடி"


என்னத்த சொல்ல அருமையான அந்தக்காலம்...இப்ப ஒன்னுமே ஞாபகத்தில் இல்ல......

தங்களைப்பற்றி….
1927-07-04ம் திகதி பசுமையான வட்டக்கண்டல் பாலையடிப்புதுக்குளம் கிராமத்தில் கிறிஸ்தோகு புலவருக்கும் விக்ரோறியா(முத்துப்பிள்ளை) அவர்களின் மூத்த பிள்ளையாபிறந்தேன் எனது உறவுகளுடன் இறுதிக்காலத்தினை நினைவுகளுடன் வாழ்ந்து வருகின்றேன். கலைக்குடும்பம் நாங்கள்

தங்களின் கலையார்வம் பற்றி---
எனக்கு சிறுவயதில் இருந்தே கலையார்வம் அதிகம் தான் காரணம் எனது தந்தை புலவராவார் அவரிடம் இருந்து 18 வயதிலே வாத்தியங்கள் வாசிப்பதிலும் பாடல்கள் பாடுவதிலும் மிகுந்த ஆர்வமாக இருந்தேன். 1927-2018 70 வருடங்களாக இசைப்பயணம் இப்போது முதுமையின் கையில்......

மறக்கமுடியாத சம்பவம் ஒன்று---
எனது கலையார்வத்தின் மிகுதியால் இளமைக் காலத்தில் சினிமாப்படங்கள் ஊமையாக வந்துகொண்டு இருந்தது அத்தருணத்தில் தியாகராஜ பாகவதர் பேசும் படம் வெளிவந்தது .அவரைப்பார்ப்பதற்கும் கலையில் சேர்ந்து நடிப்பதற்கும் எனது தந்தைக்கு தெரியாமல் இந்தியா செல்வதற்காக தலைமன்னார் வரை சென்று கப்பலில் ஏறிய பொழுதுதான் எனது சிற்றப்பா பொன்னுத்தம்பி விதானையாராக இருந்தார் அவரிடம் சிக்கிக்கொண்டேன். அவர் என்னை மீண்டும் வீட்டில் கொணர்ந்து விட்டுவிட்டார்..அத்தோடு எனக்கு மிருதங்கமும் வீணையும் கொழும்பில் இருந்து வாங்கி கொணர்ந்து தந்தார்.
தங்களின் கலைப்பயணம் பற்றி---
ஆம் சிற்றப்பா வாங்கி தந்த மிருதங்கமும் வீணையும் கையுமாகதான் இருந்தேன். எனது தந்தையின் வழிகாட்டலில் என்னை நானே வளர்த்துக்கொண்டேன். அன்று தொடங்கியதுதான் இன்று வரைதான் தொடர்கின்றது இசைப்பயணம் தற்போது உடல்நிலை காரணமாக ஓய்ந்துபோயுள்ளேன்.இனி எல்லாம் அவன் செயல்.

தங்களது முதலாவது வாத்திய கலைஞனாக மேடையேற்றிய நாடகம் பற்றி---
ஆம் எனது வாத்தியக்கலைஞனாக முதலாவது நாடகம் என்றால் அது
கோது கப்பித்தான் நாடகம் அதன் பின்பு சவீன கன்னி நாடகம் 

 பல நாடகங்களும் நாட்டுக்கூத்துக்களும் பலமுறை மேடையேற்றப்பட்டவைகள்
  • இம்மானுவேல் நாடகம் 
  • எம்பரதோர் நாடகம் 
  • அந்தோனியார் நாடகம் 
  • சந்தோமையார் வாசகப்பா சந்தியோகுமையர் நாடகம் 
  • நொண்டி நாடகம்
  •  சத்தியவான் சாவித்திரி கோவலன் 
  • கண்ணகி வள்ளிதிருமணம் -அரிச்சந்திரா மயாண கண்டம் கர்ணன் 
  • போர் வீர அபிமன்யூ 
  • யார் குழந்தை போன்ற பல நாடகங்களுக்கு யாழ் நடிகமணி V.V.வைரமுத்துவுடன் இணைந்து பல நாடகங்களுக்கு இசைவழங்கி பெரும்புகழும் மரியாதையும் பெற்றேன்.
தங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் பற்றி---
அன்றிலிருந்து இன்றுவரை என்னை வழிநடத்தும் எல்லாம் வல்ல இறைவனுக்கும் எனது பெற்றோருக்கும் எனது மனைவி பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்  நண்பர்கள் என்னுடன் இசைப்பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் இந்நேரத்தில் மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும் நினைவிலும்......


தங்களிடம் மிருதங்கம் கற்றுக்கொண்டவர்கள் பற்றி…
அத்தோடு என்னால் முடிந்தவரை மாந்தைப்பிரதேசத்தில் உள்ள இளம்கலைஞர்களுக்கு மிருதங்கம் வாசிக்க கற்றுக்கொடுத்தேன் மேடையேற்றமும் செய்தேன். என்னால் எனது மகன்களான மடுத்தீன்(செல்வம்) அன்ரன்(சௌந்தரம்) செபஸ்தியாம்பிள்ளை(பூராசா)சவிரி(சிங்கம்)என்பவர்களும் பேரன்மார்களான அ.நகுலேஸ்வரன் அ.றெனோல் என்பவர்களும் பாடல் பாடவதிலும் வாத்தியங்கள் இசைப்பதிலும் சிறப்பாக செயற்பட்டு வருகின்றனர்.கலைக்குடும்பம் நாங்கள்

தாங்கள் பெற்ற விருதுகள் பட்டங்கள் பற்றி---

என்னை எனது மக்களும் கிராமமும் வடக்குமாகாணம் மற்றும் தேசியரீதியிலும் பொன்னாடை போர்த்தி பாராட்டி கௌரவித்துள்ளார்கள் அந்த வகையில் நினைவில் இருப்பவை....
  • 1964ம் ஆண்டு மன்னார் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ V.அழகக்கோன் என்பவரால் பொன்னாடை போர்த்தி "கோடை இடி" எனும் விருது வழங்கி கௌரவித்தார்.
  • 2017-12-12இலங்கை இந்து கலாச்சார அமைச்சினால் 33வது தடவையாக வழங்பட்ட அரச "கலாபூஷணம் விருது" வழங்கும் நிகழ்வில் கலாபூஷணம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
  • 2018-06-27மன்னார் மடுவலையக்கல்வி அலுவலகத்தினால் பூரணச்சந்திர கலைவிழாவில் "கூத்திசைத்திலகம்" எனும் விருது வழங்கி கௌரவித்தனர்.
  • 2018-09-30 வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் "முதலமைச்சர் விருது" வழங்கி கௌரவித்தனர்.
  • 2018-11-02 வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிதியனுசரணையில் மாந்தைமேற்கு கலாச்சார சபையும் இணைந்து நடாத்திய கலைவிழாவின் போது "கலைமதி விருது" வழங்கி கௌரவித்தனர்.
நியூமன்னார் இணையம் பற்றி.....
நான் இதுவரை பார்த்ததில்லை ஆனால் மன்னாரில் நடக்கின்ற விடையங்களை உடனுக்குடன் பார்க்கலாம் என்று எனது பேர்த்திகள் சொல்லக்கேட்டிருக்கிறேன் கடந்த மாதம்  எனது கலைச்சேவையினை பாராட்டி வடக்குமாகாண பண்பாட்டுத்திணைக்களத்தினால் முதலமைச்சர் விருது பெற்ற செய்தியை முதன் முதலாக நியூமன்னார் இணையத்தில் பார்த்ததாக எனது மகனும் நண்பர்களும் சொன்னபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் நீங்களே இன்று என்னை தேடி வந்து எனது பசுமை நினைவுகளை மீட்டுப்பார்க்கவைத்தமைக்கும் வெளியுலகிற்கு தெரியப்படுத்தும் செயலானது வித்துவம் கொண்ட ஒரு செயலாகும் எனது வித்துவான் திறமையை வெளியுலகிற்கு கொண்டுவருவது என்னைப்பொறுத்தமட்டில் விசேட செயலாகும்(கண்களில் இருந்து ஆனந்தக்கண்ணீர்.........மௌனம்......)தொடரட்டும் உங்கள் பணி இறைவன் துணையிருப்பார் மகிழ்ச்சியுடன் நன்றிகள் நியூமன்னார் இணையத்திற்கும் உங்களுக்கும்.....

சந்திப்பு -கலைச்செம்மல்-வை.கஜேந்திரன்-




















கலாபூஷணம் கிறிஸ்தோகு சந்தியோகு அவர்களின் அகத்தில் இருந்து......"கோடை இடி" Reviewed by Author on December 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.