அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியாவில் தெரேசா மே ஆட்சி தப்பியது! நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி -


பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்ட நிலையில், குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு அந்நாட்டு நேரப்படி இன்று மாலை ஆறு மணிக்கு நடைபெற்றது.

Conservative கட்சியின் 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதைத் தொடர்ந்தே இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
பிரெக்ஸிற் திட்டத்தில் பிரித்தானியாவுக்கு சாதகமான அம்சங்கள் இல்லை என தெரிவித்து, அதிதீவிர பிரெக்ஸிற் ஆதரவு சார்பானவர்களே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரேசா மே 83 மேலதிக வாக்குகளால் நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் தெரேசா மே ஆட்சி தப்பியது!
பிரித்தானியாவில் Brexit விவகாரம் தொடர்பில் நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பை எதிர்கொண்ட பிரதமர் தெரேசா மே 200 வாக்குகளில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
இருப்பினும் 117 எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அவரது ஆட்சிக்கு எப்போது வேண்டுமானாலும் சிக்கல் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
தற்போதுள்ள சூழலில் Brexit விவகாரம் தொடர்பில் மே அரசு மேற்கொள்ளும் எந்த முடிவும் சிக்கலையே ஏற்படுத்தும் எனவும் அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே 2022 தேர்தலுக்கு முன்னர் தாம் பதவியை விட்டு விலகுவேன் என தெரேசா மே குறிப்பிட்டிருந்த நிலையில் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி அவருக்கு புது தெம்பை அளிக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
Brexit விவகாரம் நடைபெற்றுவரும் நிலையில் தலைவரை மாற்றுவது என்பது தவறானது என குறிப்பிட்டிருந்த மே, மனதளவில் அடுத்த தேர்தலில் கட்சியை வழி நடத்தவே விரும்புகிறேன் எனவும், ஆனால் அது நிறைவேறாது என்பதை ஏற்றுக் கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அடுத்த 2 ஆண்டுக்குள் தாம் பதவி விலக இருப்பதாக குறிப்பிட்டுள்ள மே, அது தேர்தலுக்கு முன்னர் நடைபெறும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும் தாம் எப்போது பதவி விலகுவேன் என்பதை மே இதுவரை தெளிவாக குறிப்பிடவில்லை.ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா உத்தியோகப்பூர்வமாக வெளியேறிய பின்னரே மே பதவி விலக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மே தோல்வியை சந்தித்தார் என்றால் கட்சி பொறுப்பில் இருந்தும், பின்னர் பிரதமர் பதவியில் இருந்து விலகியிருப்பார்.இதனிடையே தெரேசா மேயின் வெற்றிக்கு ஆஸ்திரிய ஜனாதிபதி Sebastian Kurz வரவேற்றுள்ளதுடன் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு - நம்பிக்கை வாக்கெடுப்பில் இன்று தப்புவாரா தெரசா மே?
ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன் தனிநாடாகவே பார்க்கப்படுகிறது.
ஆனால், ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளுடனான நிதி கொடுக்கல் - வாங்கல், எதிர்கால பரிவர்த்தனை, விசா மற்றும் குடியுரிமை தொடர்பாக இருதரப்பினரும் செய்துகொள்ள வேண்டிய எதிர்கால உடன்படிக்கையை பிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்து வந்தார்.
இந்த செயல்திட்ட வரைவு அறிக்கையை ஆளும் கன்சர்வேட்டின் கட்சியை சேர்ந்த முதன்மை மந்திரிகளும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கடுமையாக எதிர்த்து வந்தனர். இதுதொடர்பாக தனிப்பட்ட முறையிலும் பாராளுமன்றத்திலும் சூடான விவாதங்கள் நடந்து வந்தது.
இதற்கிடையில், சுமார் 500 பக்கங்களை கொண்ட ஒரு செயல்திட்ட அறிக்கையை ஐரோப்பிய யூனியன் தயாரித்துள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது தொடர்பாக தெரசா மே தயாரித்த செயல்திட்டத்தின் மீது அதிருப்தி அடைந்த சில மந்திரிகளும் சொந்தக் கட்சி எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு திட்டமிட்டு, இதற்காக ஆதரவு திரட்டி வந்தனர். எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி எம்.பி.க்களும் தெரசா மேவை வீழ்த்த தகுந்த தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் தெரசா மே சமர்ப்பித்த செயல்திட்ட அறிக்கைக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. எனினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக 4 மந்திரிகள் ராஜினாமா செய்தனர்.
ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளின் தலைவர்களும், ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜீன்-கிலாட் ஜங்கர் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் ஆகியோரும் 25-11-2018 அன்று புருசெல்ஸ் நகரில் தெரசா மே-வை சந்தித்தனர்.

பின்னர், பிரிட்டன் அரசின் சார்பில் தெரசா மே முன்வைத்த உடன்படிக்கைக்கு ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளதாக ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்தார்.
இதற்கிடையில், பிரிட்டன் நாட்டின் ஆளும்கட்சியில் இடம்பெற்றுள்ள தெரசா மேவின் எதிர்ப்பாளர்கள் பாராளுமன்றத்தில் இந்த ஒப்பந்தத்தை தோற்கடிப்பதற்கு மறைமுகமாக முயற்சித்து வருகிறார்கள்.
மேலும், பிரதமர் தெரசா மேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைக்கவும் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்கள் ரகசியமாக கையெழுத்து வேட்டை நடத்தி வருகின்றனர்.
650 இருக்கைகளை கொண்ட பிரிட்டன் பாராளுமன்றத்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 315 உறுப்பினர்களும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு 257 உறுப்பினர்கள் உள்ளனர். ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த 15 சதவீதம் (48) எம்.பி.க்கள் கையொப்பமிட்ட கடிதம் 1922 உயர்மட்டக்குழு உறுப்பினர்களை கொண்ட ஆளும்கட்சி குழு தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டால் பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடியும்.
ஆளும்கட்சியை சேர்ந்த 315 எம்.பி.க்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் (210 உறுப்பினர்கள்) தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தால் தெரசா மே பதவியில் இருந்து விலக நேரிடும்.

வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தால் அடுத்த 12 மாதங்களுக்கு பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை யாரும் கொண்டுவர முடியாது.
இந்நிலையில், தெரசா மேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர 48 எம்.பி.க்களின் கையொப்பமிட்ட கடிதம் 18 உறுப்பினர்களை கொண்ட கன்சர்வேட்டிவ் கட்சியின் செயற்குழு தலைவர் கிரஹம் பிராடிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பிரிட்டன் ஊடகங்கள் நம்பகமாக தெரிவிக்கின்றன.
இதுதொடர்பான தகவலை கிரஹம் பிராடி இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில் பிரதமர் தெரசா மேவுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு, இதில் வாக்கெடுப்பு நடத்தப்படுவது உறுதி என ஆளும்கட்சியில் உள்ள அவரது அதிருப்தி எம்.பி.க்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வாக்கெடுப்பில் தெரசா மே தோல்வி அடைந்தால் கட்சியின் தலைவர் பதவியிலும் அவர் நீடிக்க மாட்டார். மறுமுறை தலைவர் பதவிக்கு போட்டியிடவும் முடியாது. அப்படி ஒருவேளை தெரசா மே பதவி விலகினாலும் புதிய பிரதமர் பதவி ஏற்கும்வரை 6 வார காலம்வரை அவர் காபந்து பிரதமராக நீடிக்க வாய்ப்புள்ளது.

சமீபத்தில் பதவி விலகிய பிரெக்சிட் துறை மந்திரி டேவிட் டேவிஸ் லண்டன் நகர முன்னாள் மேயர் போரிஸ் ஜான்சன், சர்வதேச வர்த்தகத்துறை மந்திரி பென்னி மோர்டுவான்ட், பாகிஸ்தான் வம்சாவளியினரும் உள்துறை மந்திரியுமான சாஜித் ஜாவித், பிரெக்சிட் முன்னாள் செயலாளர் டோமினிக் ராப், உணவு மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரி மைக்கேல் கோவே மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெரெமி ஹன்ட் உள்ளிட்டோர் தெரசா மேவின் இடத்தை நிரப்புவதற்கும் ஆளும்கட்சிக்கும் ஆட்சிக்கும் தலைமையேற்பதற்காகவும் காத்திருப்போர் பட்டியலில் தயார் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில், வாக்கெடுப்பு நடந்தால் தெரசா மே பதவி விலக நேரிடுமா? அல்லது தீர்மானம் தோல்வி அடையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிரித்தானியாவில் தெரேசா மே ஆட்சி தப்பியது! நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி - Reviewed by Author on December 13, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.