அண்மைய செய்திகள்

recent
-

தெரசா மேவுக்கு வந்த மற்றொரு சோதனை! பிரித்தானியாவின் வேண்டுகோளை நிராகரித்த ஐரோப்பிய ஒன்றியம்


பிரெக்சிட் ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யுமாறு பிரித்தானியா விடுத்த வேண்டுகோளை, ஐரோப்பிய ஒன்றியம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
பிரித்தானிய பிரதமர் தெரசா மே, பிரெக்சிட் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து, பிரெக்சிட் தொடர்பான விவாதம் பெல்ஜியத்தின் தலைநகர் புருஸ்செல்ஸில் நடைபெற்றது.

இதில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானிய தலைவர்கள் ஒன்று கூடி பிரெக்சிட் தொடர்பாக விவாதித்தனர். அப்போது தெரசா மே, பிரித்தானிய அமைச்சர்களின் எதிர்ப்பினை சுட்டிக்காட்டி ஒப்பந்தத்தில் சில திருத்தங்களை செய்யுமாறு வலியுறுத்தினார்.

மேலும் விவாதத்தின்போது அவர் கூறுகையில், ‘பிரித்தானிய அமைச்சர்களின் கவலைகளை தீர்க்க வேண்டியது நமது கடமை என்று கருதுகிறேன். பிரெக்சிட் ஒப்பந்தத்தில் திருத்தம் செய்ய ஐரோப்பிய ஒன்றியமோ அல்லது பிரித்தானிய அரசோ விரும்பவில்லை.
எனினும், இருதரப்பையும் சேர்ந்த அனைவரும் திருப்தி கொள்ளும் வகையிலான ஒப்பந்தத்தை உருவாக்குவதே சிறப்பான தீர்வாக இருக்கும்’ என தெரிவித்தார். ஆனால், பிரித்தானியாவின் இந்த வேண்டுகோளை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்க மறுத்துவிட்டது.

அப்போது பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரோன், ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய முடியாது என்றும், பல மாதங்கள் நீடித்த விவாதத்திற்கு பின் இறுதியான ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நிராகரிப்பு, பிரித்தானிய பிரதமர் தெரசா மேவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களே எதிர்ப்பதால் மேவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

பிரித்தானிய அமைச்சர்களை சமாதானப்படுத்த வேண்டிய பொறுப்பு தெரசா மேவுக்கு உண்டு என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் கருத்தாகும்.

தெரசா மேவுக்கு வந்த மற்றொரு சோதனை! பிரித்தானியாவின் வேண்டுகோளை நிராகரித்த ஐரோப்பிய ஒன்றியம் Reviewed by Author on December 15, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.