அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகர சபையின் வருமானம் ஒரு கோடியே 60 இலட்சத்தி 36863 ரூபாய்.....

மன்னாரில் பண்டிகைக்கால வியபாரங்களை மேற்கொள்ள  ஒவ்வெரு வருடமும் நத்தார்,புதுவருட பண்டிகைக்கால வியாபாரங்களை மன்னார் நகர சபைக்குற்பட்ட பகுதிகளில்  உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட வர்த்தகர்களுக்கு கேள்வி கோரலின் அடிப்படையில் இடம் வழங்கப்படுவது வழமை.

அந்த வகையில்  நத்தார்,புதுவருட பண்டிகைகளுக்காக மன்னார் நகரசபைக்குற்பட்ட பகுதிகளில் சுமார் 308 இற்கும் அதிகமான தற்காலிக வியாபார நிலையங்கள் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை அமைக்க இடம் வழங்கப்பட்டது.
பண்டிகைக்கால வியாபார நிலையங்கள் 308 உள்ளடங்களாக பெறப்பட்ட வருமானம் சுமார்  ஒரு கோடியே  அறுபது இலட்சத்தி 36,863 ரூபாய் பெறப்பட்டுள்ளது.
  • 2017 கடந்த காலத்தில் பெறப்பட்ட ஒரு கோடியே  1 இலட்சம் இம்முறை  59 இலட்சத்தி 36863 ரூபாய் அதிகமாக பெறப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபையின் முதல்வர் ஞா.அன்ரனி டேவிட்சன் அவர்களிடம் பெறப்பட்ட வருமானத்தில் இருந்து மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் என்ன.........

2019 ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டின் படி  பண்டிகைக்கால வியாபார நிலையத்தின்பெறப்படுகின்ற வருமானத்தில் இருந்து சுமார் 7.5 மில்லியன் ரூபாய் அதாவது 75இலட்சம் ரூபாவினை எடுப்பதாக சபை தீர்மானித்தது.

அதற்கமைய பெறப்பட்டுள்ள வருமானத்தில் இத்தொகையினை கழித்து மீதியுள்ள 85 இலட்சத்தி 36863 ரூபாய் நிதியினை மன்னார் நகரசபைக்குட்பட்ட கிராமங்களின் அவசியமானதும் தேவைகள் அதிகமுள்ளதுமான பகுதிகளில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ள நகர சபையும் உறுப்பினர்களும் அலுவலகர்களும் தயாராகவுள்ளோம்.
 அபிவிருத்திகள் தொடரும்..............

-வை.கஜேந்திரன்-


மன்னார் நகர சபையின் வருமானம் ஒரு கோடியே 60 இலட்சத்தி 36863 ரூபாய்..... Reviewed by Author on January 11, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.