அண்மைய செய்திகள்

recent
-

தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைப்பினர் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு-படங்கள்


மன்னார் மாவட்டத்தின் கல்விக்கான தனது சேவையினை 03வது வருடமாக தொடர்ந்துள்ள தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைப்பினர் புதிய வருடத்தில்  17-01-2019 மடுகல்விவலையத்திற்கு உட்பட்ட 02 பாடசாலைகளுக்கு  விஜத்தினை மேற்கொண்டுள்ளனர்.

பாடசாலைகளின் அதிபர்களின் வேண்கோளுக்கு இணங்க அவர்களின் தேவைகளை கண்டறிந்து அவர்களுக்கான கல்விச்செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தனர்.

மன்-ஸம்றிபாய் மு.வி சன்னார்
மன்.பெரியமடு ஆரம்பப்பாடசாலை-பெரியமடு

இந்த  02 பாடசாலைகளுக்கும் தேவைகள் அதிகமாக இருக்கின்றபோதும் எங்களால் முடிந்தளவிற்கு மாணவர்களின் கல்விச்செயற்பாட்டுக்கான கற்றல் உபகரணங்களையே வழங்க முடிந்தது. தொடர்ந்ததும் இவ்வாறான கல்விச்செயற்பாட்டுக்கு உறுதுணையாக இருப்போம் அமைப்பின் இயக்குநர் வை.கஜேந்திரன் தெரிவித்தார் .
பாடசாலை மாணவர்களுக்கான அன்பளிப்பு மற்றும் கற்றல் உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கியவர் திருவாளர் S.விமலேஸ்வரன் பொறியியலாளர் அவர்களுடன் தமிழமுது நண்பர்கள் வட்ட அமைப்பினரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர்.









தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைப்பினர் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு-படங்கள் Reviewed by Author on January 20, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.