அண்மைய செய்திகள்

recent
-

சற்று முன்னர் கோர விபத்து - 6 பேர் பலி - மூவர் படுகாயம் -


வென்னப்புவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு-சிலாபம் வீதியில் வென்னப்புவ பகுதியில் லொரி ஒன்றுடன் சொகுசு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

காரில் சென்ற 6 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த கோர விபத்து அதிகாலை 3.15 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான மோட்டார் வாகனத்தில் 9 பேர் பயணித்துள்ளனர். அதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாலையில் மீன் ஏற்றிச் சென்ற லொறியின் பின்பக்கத்தில் மோட்டார் வாகனம் மோதுண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சற்று முன்னர் கோர விபத்து - 6 பேர் பலி - மூவர் படுகாயம் - Reviewed by Author on January 20, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.