அண்மைய செய்திகள்

recent
-

விஸ்வாசம் திரை விமர்சனம்


தல அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது படம், வீரம் படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க கிராமத்து கதாபாத்திரத்தில் தல அஜித் என பல காரணங்களுக்காக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விஸ்வாசம் படம் இன்று திரைக்கு வந்துள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா? வாருங்கள் பார்ப்போம்.

கதை:
டாக்டராக இருக்கும் நயன்தாரா கொடுவிலார்பட்டி என்கிற கிராமத்திற்கு மெடிக்கல் கேம்ப் நடத்த வருகிறார். அஜித் எப்போதும் தன் கிராமத்து மக்களுக்காக வரிந்துகட்டி கொண்டு சண்டைக்கு செல்பவர்.

நயன்தாரா செல்லும் வழியிலேயே தூக்குதுரை (அஜித்) சிலரை போட்டு அடித்துக்கொண்டிருப்பதை பார்த்து போலீசில் புகார் கொடுக்கிறார். ஆனால் பின்னர் அவரே வழக்கை வாபஸ் வாங்க நேரிடுகிறது. இப்படி மோதலில் ஆரம்பித்து பின்னர் அது காதலில் முடிகிறது.

அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது. பின்னர் சில காரணங்களால் அஜித்தை விட்டு பிரிய முடிவெடுக்கிறார்.

குழந்தையுடன் மும்பை சென்ற நயன்தாராவை பார்க்க பலவருடங்கள் கழித்து செல்கிறார் அஜித். மீண்டும் தன் குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்தாரா என்பதை மிக எமோஷ்னலாக கூறியுள்ளது மீதி விஸ்வாசம்.

படத்தை பற்றிய அலசல்:
விவேகம் படம் பார்த்து விமர்சித்தவர்களை வாயடைக்க வைக்கும் அளவுக்கு ஒரு படத்தை கொடுத்துள்ளனர் அஜித் -சிவா கூட்டணி.

அஜித் தன் நடிப்பால் படத்தை தாங்கி நிற்கிறார். ஹீரோயினாக நயன்தாரா செம மெச்சுரான நடிப்பு. அவர் இடத்தில் வேறு ஒரு நடிகை இருந்திருந்தால் இவ்வளவு அழுத்தம் இருந்திருக்குமா என்றால் கேள்விக்குறிதான்.

அஜித் மகளாக நடிகை அனிகாவும் என்னை அறிந்தால் படத்தை விட ஒரு படி மேலே கவர்கிறார்.

காமெடிக்கு பெரிய ஸ்கோப் இல்லை என்றாலும் ரோபோ ஷங்கர், தம்பி ராமையா, விவேக் தங்கள் பங்களிப்பை சரியாகவே செய்துள்ளனர்.

பிளஸ்:
வழக்கமான கதை தான் என்றாலும், விஸ்வாசம் படத்தின் பெரிய பிளஸ் எமோஷன் தான். உங்கள் கண்களை ஈரமாக்கும் காட்சிகள் படத்தில் உள்ளது.

அஜித், நயன்தாரா நடிப்பு.

மைனஸ்:
இந்த பாடல் எதற்க்காக வைத்தார்கள் என கேட்கும் அளவுக்கு தேவையில்லாமல் சேர்க்கப்பட்ட சில பாடல்கள். இருப்பினும் அடிச்சி தூக்கு பாடலுக்கு மட்டும் மொத்த தியேட்டரும் எழுந்து ஆடியதை மறுக்கமுடியாது.

முதல் பாதியில் வரும் சில காட்சிகள் அழுத்தம் இல்லாமல் ட்ராமா போல இருந்ததும் ஒரு மைனஸ்.

மொத்தத்தில் விஸ்வாசம் படத்தால் சிவா இஸ் பேக். தல ரசிகர்களுக்கு தரமான பொங்கல் ட்ரீட்.

விஸ்வாசம் திரை விமர்சனம் Reviewed by Author on January 10, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.