அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் இளைஞர் யுவதிகளுக்கு.....உயர் தொழிற்துறை தொடர்பாடலுக்கான ஆங்கில மொழி



இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

உயர் தொழிற்துறை தொடர்பாடலுக்கான ஆங்கில மொழி உயர்தரச் சான்றிதழ் 2018 /2019 (மட்டம் -I /மட்டம்-II )  
 
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் மொழிக் கற்கைத் துறையினர் வழங்கும் மேற்படி கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இந்த நிகழ்ச்சித்திட்டமானது 02 மட்டங்களை அடிப்படையாகக் கொண்டது.

(அ) மட்டம் - I
இக்கற்கை நெறியானது அடிப்படை ஆங்கில மொழித் திறனை விருத்தி செய்ய விரும்புபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
(ஆ) மட்டம் - II
இக்கற்கை நெறியானது தொடர்பாடல் திறன்களை விருத்தி செய்வதில் விசேட கவனம் செலுத்துகின்றது. இதன் மூலம் மாணவர்கள் தமது வேலைத் தளத்தில் தொழிலாற்றுவதற்கான ஆங்கில மொழியில் வினைத்திறன்களைப் பெற்றுக் கொள்கின்றனர். இவ்விரு நிலைகளையும் பூர்த்தி செய்தவர்களுக்கே சான்றிதழ் வழங்கப்படும்.
இக்கற்கை நெறிகள் இலங்கைத் திறந்த பல்கலைக்கழக பிராந்திய மற்றும் கற்கை நிலையங்களில் நடைபெறும்.
அம்பலங்கொடை-அம்பலந்தோட்டை-அம்பாறை- அனுராதபுரம்-பதுளை-பண்டாரவளை- மட்டக்களப்பு- கொழும்பு-காலி- கம்பஹா(மிரிஸ்வத்த)- ஹட்டன்-யாழ்ப்பாணம்- களுத்துறை- கண்டி- கேகாலை-கிளிநொச்சி-குளியாப்பிட்டிய-குருணாகல்-மாத்தறை-மொனராகலை- மன்னார்-பொலன்னறுவை-புத்தளம்-இரத்தினபுரி- திருகோணமலை-வவுனியா
அனுமதித் தகைமைகள்.

(1) விண்ணப்பதாரிகள் 18 வயதினைப் பூர்த்திசெய்தவர்களாக அல்லது அதற்கு மேற்பட்ட வயதினையுடையவர்களாக இருத்தல் வேண்டும்.
(2) கல்விப் பொதுத் தராதர (சா/த) பரீட்சையில் ஏதாவது 6 பாடங்கள் பூர்த்தி செய்தவராக இருத்தல் வேண்டும்.
(3) இக்கற்கை நெறிகளுக்கான மட்டம் I  மட்டம்
II அனுமதியானது-2019.03.03 ஆம் திகதி நடைபெறும் ஆங்கிலத் தரப்படுத்தல் பரீட்சையின் பெறுபேறுகளைப் பொறுத்து அமையும்.

(4) அடிப்படை ஆங்கில கற்கை நெறியின் இறுதிப்பரீட்சையில் சித்தியடைந்தோர் மட்டம்
II கற்கை நெறிக்கு தம்மை பதிவு செய்து கொள்ள முடியும். இவர்கள் தரப்படுத்தல் பரீட்சைக்கு தோற்ற வேண்டியதில்லை. எனினும் விண்ணப்பப் படிவத்தினை மாத்திரம் பூர்த்தி செய்து விண்ணப்பப்படிவம் சமர்ப்பிக்கப்படவேண்டிய இறுதி திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவே அனுப்புதல் வேண்டும்.

• இந்நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்தவர்கள் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் ஆங்கிலமொழி மற்றும் இலக்கியத்திற்கான டிப்ளோமா பாடநெறிக்கு அவர்களது செயற்றிட்ட திறமையின் அடிப்படையில் உள்வாங்கப்படுவார்கள்.
www.ou.ac.lk என்ற இணைய தளத்தில் பிரவேசித்து குறிப்பிட்ட பாடநெறிகள் தொடர்பான விபரங்கள் அடங்கிய கைந்நூலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கும் மேலதிக விபரங்களை பெற்று கொள்வதற்கும் இலங்கை திறந்த பல்கலைக்கழக மன்னார் கற்கை நிலையத்தினை அணுகவும். 

மேலும் பின்வரும் இலங்கை திறந்த  பல்கலைக்கழக இணையத்தளத்திற்கு சென்றும் விண்ணப்பிக்க முடியும்.


விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலம்- - 20.01.2019 தொடக்கம் 19.02.2019 வரை 
விண்ணப்பபடிவ கட்டணம்     -  500/-

மேலதிக தொடர்புகளுக்கு
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
மன்னார் கற்கை நிலையம்                 

RDS கட்டிடம்,சிறிய குருமட வீதி சாவற்கட்டு மன்னார்
0232251999
0775625352




மன்னார் இளைஞர் யுவதிகளுக்கு.....உயர் தொழிற்துறை தொடர்பாடலுக்கான ஆங்கில மொழி Reviewed by Author on January 25, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.