அண்மைய செய்திகள்

recent
-

ஆட்டிறைச்சி தரும் ஆரோக்கிய நன்மைகள் -


பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவுகளில் கோழிக்கறியை போன்று ஆட்டிறைச்சியும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
ஆட்டின் தலை, இதயம், நுரையீரல், மூளை என அனைத்தும் மனிதர்களுக்கு மருத்துவ பயன் தருகிறது.

இது , இதயம், மூளை, குடல், எலும்பு என தலை முதல் கால் வரை அனைத்து பாகங்களுக்கும் நன்மை விளைவிக்கிறது.
ஆட்டிறைச்சி சாப்பிடுவதனால் உங்களுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

  • இதயம் சார்ந்த வலிகளும் கோளாறுகளும் நீங்கும். குடலை வலிமையாக்க உதவும். தலை பகுதி எலும்பினை வலுப்படுத்தும்.
  • ஆட்டு கால்களை சூப் வைத்து குடித்தால், எலும்புக்களுக்கு பலமும், கால்களுக்கு நல்ல ஆற்றல் தரும்.
  • பார்வை கோளாறுகள் சரியாகும், தெளிவான பார்வை கிடைக்கும். கண்களுக்கு மிகுந்த வலிமையைக் கொடுக்கும்.
  • கண்ணுக்கு குளிர்ச்சி தருகிறது ஆட்டின் மூளை. தாது விருத்தியை உண்டாக்குகிறது மற்றும் நினைவாற்றல் அதிகரிக்கவும் பயன் தருகிறது. உங்கள் மூளை பகுதி நல்ல வலிமை பெற ஆட்டின் மூளை சாப்பிடலாம்.
  • கபத்தை நீக்கும். மார்புக்குப் வலிமையை தரும். மார்புப் பாகத்தில் புண் இருந்தால் குணப்படுத்தும்.
  • இதயத்திற்குப் நல்ல பலம் தரும் மற்றும் மன ஆற்றல் அதிகரிக்க வெகுவாக பயன் தருகிறது ஆட்டின் இதயம்.
  • உடலின் வெப்பத்தை குறைத்துக் குளிர்ச்சியை உண்டாக்கும். நுரையீரலுக்கு நல்ல வலிமையை தரும்.
  • ஆட்டின் கொழுப்பு இடுப்புப் பாகத்திற்கு நல்ல பலம் தரும்.
  • இடுப்புக்கும், சிறுநீரக சுரப்பிக்கும் நல்ல வலிமை தரும். இடுப்பு வலி மற்றும் கோளாறுகளுக்கு நல்ல தீர்வளிக்கும். தாது விருத்தியாகும். ஆண் குறிக்கு வலிமை தரும்.
  • உடல் சூட்டை தணிக்கும். தோலுக்குப் வலிமை தரும் மற்றும் சருமம் பளபளக்க உதவும்.
ஆட்டிறைச்சி தரும் ஆரோக்கிய நன்மைகள் - Reviewed by Author on January 09, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.