அண்மைய செய்திகள்

recent
-

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கிளிநொச்சியில் போராட்டம்-படங்கள்


தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள உயர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, டிப்போ சந்திக்கருகில் இன்று காலை சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
மலையக தோட்டத் தொழிலாளர்கள் 1000 ரூபாய் சம்பளம் கேட்டு தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொண்டு வரும் நிலையில் அதற்கு ஆதரவு தெரிவித்து தோட்டத் தொழிலாளர்களுக்கு வலு சேர்க்கும் வகையில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உழைப்புக்கு நியாயமான ஊதியத்தை கொடு, உழைப்பாளிகளுக்கே இந்த உலகம் என்றால் உழைக்கும் தொழிலாளர்களுக்கு ஏன் இந்த அவலம்?, 1000 ரூபாய் கேட்பது குற்றமா?, 1000 ரூபாய் தொழிலாளர்களுக்கு வழங்குவது நட்டமா? என கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிகளவு பங்களிப்பு செய்கின்ற தோட்டத் தொழிலாளர்கள் உழைப்புக்கேற்ற ஊதியத்தையே கேட்கின்றனர்.
அதனை அவர்களுக்கு வழங்குவதனால் எவருக்கும் எந்த நட்டமும் ஏற்பட போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.




தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கிளிநொச்சியில் போராட்டம்-படங்கள் Reviewed by Author on January 23, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.