Top Ad unit 728 × 90

அண்மைய செய்திகள்

recent
-

மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையின் வீதி ஓட்டப்போட்டி-படங்கள்


மன்னார்-புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையின் 2019 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியின் முதல் நிகழ்வான வீதி ஓட்டப்போட்டி(மரதன்) 11-01-2019 வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் புனித செபஸ்தியார் பேராலயத்திற் முன் ஆரம்பமானது.

பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி கில்டா சிங்கராயர்  குறித்த வீதி ஓட்டப்போட்டியினை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.


புனித செபஸ்தியார் பேராலயத்திற்  முன் ஆரம்பமான வீதி ஓட்டப்போட்டி பிரதான வீதியூடாக  மன்னார் வைத்தியசாலை எழுத்தூரினை சென்றடைந்து.

அதனைத்தொடர்ந்து தலை மன்னார் 2ம் கட்டை பகுதியால் திரும்பி மன்னார் நகரப்பகுதிக்கு பஸார் பகுதியை சென்றடைந்து  பொலிஸ் நிலைய  வீதியூடாக சென்று மீண்டும் பாடசாலையை சென்றடைந்தது.

இதன் போது வீதி ஓட்டப்போட்டியில்....
1ம் இடம் J.ஜெனிபர்-பியன் வெனு இல்லம்
2ம் இடம்  J.ஜெனி மோவிதா-ஜோசப் இல்லம்
3ம் இடம்  A.அனுசியா-பியன் வெனு இல்லம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இவர்களுடன் 108ற்கும் அதிகமான மாணவிகள்  கலந்து கொண்டனர்.













மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையின் வீதி ஓட்டப்போட்டி-படங்கள் Reviewed by Author on January 12, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.