அண்மைய செய்திகள்

recent
-

பிள்ளையான் மீதான வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு -

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலல் வைக்கப்பட்டுள்ள சந்திகாந்தன் மீதான வழக்கு இன்று காலை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இஸ்ஸடீன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ஆம் 22ஆம் திகதிகளுக்கு வழங்கினை ஒத்திவைத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிவநேசதுரை சந்திரகாந்தன்,முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப்புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு கட்சி ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் பெருமளவு குழுமியிருந்த போதிலும் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதியன்று மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் பிறப்பு நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்த போது தேவாலயத்திற்குள்ளேயே வைத்து அடையாளந் தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 
பிள்ளையான் மீதான வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு - Reviewed by Author on January 09, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.