அண்மைய செய்திகள்

recent
-

சுவாமி சா.ஞானபிரகாசரின் வாழ்க்கை வரலாறு! -


நல்லூர் சுவாமி சா.ஞானபிரகாசர் ஆகஸ்ட் 30 1875 முதல் ஜனவரி 22 1947 வரை வாழ்ந்த ஒர் பண்மொழி புலவர் ஆவார்.
இவர் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்த மன்னர்களுள் ஒருவரான ஆறாவது பாரராஜசேகரின் வழிதோன்றலான ராசலிங்கம் சாமிநாதபிள்ளை தங்கமுத்து இணையரின் மகனாக 30ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் 1875ஆம் ஆண்டு பிறந்தார்.
தமிழின் தொண்மையை உலகிற்கு எடுத்து இயம்பியவர்களுள் இவரும் ஒருவர் இலத்தின் கிறேக்க முதலான 18 மொழிகளில் எழுதவும் பேசவும் வல்வராய் இருந்துள்ளார்.

அது மட்டும் இன்றி பல நூல்களை படைத்த ஆசிரியராகவும் திகழ்ந்துள்ளார். இவரின் படைப்புகளில் சொற்பிறப்பு, ஒப்பியல், தமிழ் அகராதி என்ற பெயரில் இவர் வெளியிட்ட தமிழ் ஒப்பியல் அகராதி சிறந்த நூலாகும்.
இவரது இயற்பெயர் வைத்தியலிங்கம் என்பதாகும். இவரின் ஐந்து வயதில் தனது தந்தையை இழந்துள்ளார். இளம் விதவையான தங்கமுத்து அம்மையார் உறவினர்களின் விருப்பத்துடன் கத்தோலிக்கரான தம்பிமுத்து பிள்ளையை மறுமணம் புரிந்தார்.

இதன் பின்னரே வைத்தியலிங்கம் என்ற பெயரை மாற்றி சா.ஞானபிரகாசம் என பெயர் சூட்டப்பட்டது. இதனை தொடர்ந்து தாயும் மகனும் ஞானஸ்நானம் பெற்று கத்தோலிக்க மதத்தை தழுவினர்.
அச்சுவேலியில் அமைந்துள்ள அமெரிக்க மிஷன் ஆங்கில பாடசாலை ஒன்றில் தொடக்க கல்வியை கற்ற அவர் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் தனது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
1893ஆம் ஆண்டு தொடர் வண்டி துறையில் எழுதுவினர் தேர்வில் முதலாவதாக தேரி கடிமுகவையியலும் பின்னர் கொழும்பிலும் ஆண்டுகள் பணியாற்றினார்.

பின்னர் 1895ஆம் ஆண்டு இறைபணிக்கென தம்மை அர்பணித்து யாழ். குருமடத்தில் சேர்ந்து கொண்டார். 1ஆம் திகதி டிசெம்பர் மாதம் 1901ஆம் ஆண்டு குருவானவராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் கற்ற தமிழும் ஆங்கிலமும் எழுதினராக கடமையாற்றி போது கற்ற சிங்களமும் யாழ். குருமடத்தில் கற்ற இலத்தின் பிரஞ்சும் அவரை பல மொழிகளை கற்றிட தூண்டியது.
மொழிகளுகிடையே ஒருவகை தொடர்பு இருப்பதை கண்றுனர்ந்தார் இதன் மூலமாக இவர் 72 மொழிகள் வரை கற்று புலமை பெற்றார்.

இறை அர்ப்பணிப்பு சேவையில் முதல் பங்காக ஊர்காவற்துறை எனும் ஊரில் பணியாற்றினார். முதல் முறையாக அங்கு நூல் நிலையம ஒன்றினை உருவாக்கி மக்களின் இடையே படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தினார்.
மறை நூல்களை இறவலாக கொடுத்து மீண்டம் பெற்றுக்கொள்ளும் நடைமுறையை செயற்படுத்தினார். ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை தாமே இயற்றி 30ற்கும் மேற்பட்ட நூல்களை அச்சேற்றினார்.

சொற்பிறப்பு ஒப்பியல் அகர வரிசை என்ற பெயரில் இவர் வெளியிட்ட தமிழ் ஒப்பியல் அகராதி சிறந்த நூலாகும். ஞான உணர்ச்சி எனும் நூல் வீரமாமுனிவரால் எழுதப்பட்டது அன்று. சாங்கோ வாங்க சாமிகளே அந்நூலை எழுதினார் என எடுத்துறைத்தார்.
நல்லூரில் புனித சவரியர் ஆலயத்தை கட்டியெழுப்பி பல ஆண்டுகள் பணியாற்றினார். அதனால் நல்லூர் சுவாமி ஞானபிரகாசம் என அழைக்கப்பட்டார்.

18ஆம் ஆண்டு வாழ்ந்த மயில்வாகன புலவர் என்பவரால் யாழ்ப்பாண வரவலாற்றை எடுத்துரைக்கும் பொருட்டு எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபமாலையில் தாம் கண்ட வரலாற்று முரண்பாடுகளை யாழ்ப்பாண விமர்சனம் எனும் நூலில் ஞானபிரகாசர் எடுத்து காட்டியுள்ளார்.
சுவாமி ஞானபிரகாசருக்கு மதிப்பளிக்கும் முகமாக ஸ்ரீ லங்கா அரசு அவரின் படத்துன் கூடிய அஞ்சல் முத்திரை ஒன்றையும் சிறப்பு முதல் நாள் உறை ஒன்றினையும் 1981ஆம் ஆண்டு மே 22ஆம் திகதி வெளியிட்டது.
வழமையாக நினைவு முத்திரைகள் தலைநகர் கொழும்பிலேயே வெளியிடப்படும் ஆனால் இந்த முத்திரை ஞானபிரகாசரின் ஊரான யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது.

வீரசிங்க மண்டபத்தில் சிறப்பாக நிறுவப்பட்ட அஞ்சல் அலுவலகத்தில் யாழ். ஆயர் அதிவணக்கத்திற்குரிய எஸ்.யோகபிள்ளை அண்டகை முன்னிலையில் யாழ்ப்பாண பிரதம அஞ்சல் அதிபரான தியாகராசாவிடம் இருந்து நினைவு முத்திரையுடன் கூடிய தபால் உரையை அன்றைய மாவட்ட அமைச்சர் யு.பி.விஜயகோண் பெற்று ஞானபிரகாசருக்கான கௌரவத்தை கொடுத்தார் எனவும் தெரியவந்துள்ளது.
சுவாமி சா.ஞானபிரகாசரின் வாழ்க்கை வரலாறு! - Reviewed by Author on January 24, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.