அண்மைய செய்திகள்

recent
-

உலகில் முதன்முதலாக லேசர் மூலம் செயற்கை மின்னல் உருவாக்கம்!

"உலகில் முதன்முதலாக மேகமூட்டத்தில் லேசர் அலைக்கற்றை செலுத்தி செயற்கை மின்னல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்னலிருந்து மின்சாரம் தயாரிப்பதை சாத்தியமாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

மின்சாரத்தை முதன்முதலாக கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்தவர் மைக்கல் பாரடே. காந்தமும் கம்பிச்சுருளும் ஒன்றையொன்று தழுவும் போது மின்சாரம் உண்டாகிறது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த விஞ்ஞான பரிமாணத்தில் வெப்பத்திலிருந்து மின்உற்பத்தி, காற்றிலிருந்து மின் உற்பத்தி, நீரிலிருந்து மின் உற்பத்தி என அணுமின் உற்பத்தி வரைக்கும் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது.

முன்னதாக பெஞ்சமின் பிராங்களின் என்ற பழம்பெரும் விஞ்ஞானி, மழை நேரத்தில் பட்டம் விடும் போது, மின்னல் ஏற்பட்டதில் பட்டம் நூல் வழியே மின்சாரத்தை உணர்ந்தார். அன்றிலிருந்து இன்று வரை மின்னனுக்களுக்கு எல்லாம் பேராற்றலான மின்னலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது எப்படி என்பது குறித்து காலங்காலமாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது லேசர் அலைக்கற்றையை கடும் மேகமூட்டத்தில் செலுத்தி செயற்கை மின்னலை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இரு மேகக்கூட்டம் ஒன்றையொன்று கடக்கும் போது அதிதிறன் லேசர் அலைக்கற்றை மேகத்தை நோக்கி செலுத்தப்பட்டது. மிக குறுகிய கால இடைவெளியில் லேசரை வேகமாக செலுத்தப்பட்டதால், பிளாஸ்மா மின்னூட்டம் உருவாகி மின்னல் ஏற்பட்டது. இந்த நிகழ்வு இயற்பியல் வரலாற்றில் ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.

மேலும், மின்னலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யவும் இந்த ஆய்வு ஒரு பக்கபலமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.  இதற்கான திட்ட வரையறை கடந்த 2008ம் ஆண்டே துவங்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக இதற்கான சோதனை முயற்சியும் நடைபெற்று வருகிறது.  மின்னலை பொறுத்தவரையில், உலகம் முழுவதும் பயன்படுத்தும் மின்சாரத்தை விட நாற்பது மடங்கு அதிக மின்சாரம் கொண்டிருப்பது மின்னல்."

உலகில் முதன்முதலாக லேசர் மூலம் செயற்கை மின்னல் உருவாக்கம்! Reviewed by Author on January 11, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.