அண்மைய செய்திகள்

recent
-

வடக்கில் 30 வருட கால யுத்தம் காரணமாக கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் வளர்ச்சி பூச்சியத்தை விட தாழ்ந்த மட்டத்திலே-கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரன-

வடமாகாணம் தவிர்ந்து ஏனைய மாகாணங்களில் யுத்தம் இடம் பெறவில்லை. ஒரு சில காரணங்களை தவிர ஏனைய மாகாணங்களைச் சேர்ந்தவர்கள்   ஒரு முன்னேற்ற பாதையிலே சென்று கொண்டிருந்தார்கள்.

வடமாகாணத்தில் இடம் பெற்ற 30 வருட கால யுத்தம் காரணமாக தமது தொழில் வளர்ச்சி மிகவும் பூச்சியத்தை விட தாழ்ந்த  மட்டத்திலே காணப்பட்டது. இதனால் தங்களின் தொழில் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக நாம் இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கின்றோம். என கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்தார்.

மன்னார்-மற்றும் வவுனியா மாவட்டங்களில் உள்ள கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கும், கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரன விற்கும் இடையில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (18) திங்கட்கிழமை காலை 10 மணியளவில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.

இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,,

கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ள இருந்தோம்.

ஆனால் முடியவில்லை.வரவு செலவு திட்டத்திற்கு முன்பாக உங்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளுக்கு விடை  கண்டு அவற்றிற்கு தீர்வுகளை காண்பதற்காக நாங்கள் முயற்சிகளை மேற்கொண்ட போதும் ஒக்டோபர் 26 ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலை காரணமாக அந்த முயற்சி தோழ்வியில் முடிவடைந்தது.

இந்த பாரிய சேவைக்காக நாம் முன் வந்தது நமது நாட்டில் உள்ள மிகப்பெரிய அமைச்சு கைத்தொழில் அமைச்சு என்பதற்காக.நமது நாட்டில் இருக்கின்ற கூடுதலான நிறுவனங்களை கொண்ட அமைச்சுக்களை வரிசைப்படுத்தினால் அவற்றில் இரண்டாம் இடத்தை பெறுவது நமது கைத்தொழில் அமைச்சு.

நமது நாட்டில் இருக்கின்ற அனைத்து உத்தியோகஸ்தர்களும் அதிகலவானவர்கள் நமது அமைச்சின் கீழ் உள்ளவர்களாகவே இருக்கின்றனர்.
பாரிய,சிறிய,நடுத்தர கைத்தொழிலாளர்கள் இங்கே இருக்கின்றார்கள். நுர்வோர் அதிகாரசபை, சதொச போன்ற நிறுவனங்களும் இந்த கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்குகின்றது.

இந்த நிலையில் மாவட்ட ரீதியில் கைத்தொழில் முயற்சியலாளர்களின் பிரச்சினைகளை நேரடியாக நாம் கேட்டு அறிந்து வருகின்றறோம்.
எமது நோக்கம் எனில் குறுகிய கால பிரச்சினைகளுக்கு தீர்வு காணல்,இடைத்தர கால பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது.நீர்,மின்சாரம் தொடர்பான பிரச்சினைகள்,காணி தொடர்பான பிரச்சினை இவற்றுக்காக தீர்வு வழங்கும் போது ஒரு குறுகிய காலம் செல்லும்.

வடமாகாணம் தவிர்ந்து ஏனைய மாகாணங்களில் யுத்தம் இடம் பெறவில்லை.ஒரு சில காரணங்களை தவிர ஏனைய மாகாணங்களைச் சேர்ந்தவர்கள்   ஒரு முன்னேற்ற பாதையிலே சென்று கொண்டிருந்தார்கள்.எனினும் வடமாகாணத்தில் இடம் பெற்ற 30 வருட கால யுத்தம் காரணமாக தமது தொழில் வளர்ச்சி மிகவும் பூச்சியத்தை விட தாழ்ந்த  மட்டத்திலே காணப்பட்டது.

இதனால் தங்களின் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக நாம்; இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கின்றோம்.என அவர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த விசேட கலந்துரையாடலில் கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரன,அமைச்சின் மேலதிக செயலாளர் பாலசுப்பிரமணியம், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் வடமாகாண பணிப்பாளர் திருமதி தவலோஜி,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், அமைச்சர் றிஸாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீன், மன்னார் பிரதேச சபையின் தலைவர் எம்.முஜாகிர்,மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர் சந்தியோகு ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது பிரதேசச் செயலாளர்கள், திட்டமிடல் அதிகாரி, திணைக்கள அதிகாரிகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள் எதிர் நோக்குகின்ற பல்வேறு விதமான பிரச்சினைகள் தொடர்பாக தனித்தனியே விரிவாக ஆராயப்பட்டுள்ளதோடு,அமைச்சு ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டதோடு,தொழிற்பயிற்சியை நிறைவு செய்த 10 பயணாளிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





வடக்கில் 30 வருட கால யுத்தம் காரணமாக கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் வளர்ச்சி பூச்சியத்தை விட தாழ்ந்த மட்டத்திலே-கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரன- Reviewed by Author on February 19, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.