அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தீவு வரை படம்-400 ஆண்டுகள் பழமைவாய்ந்த -படம்


மன்னார் தீவு வரைப்படம்


இங்கு இணைக்கப்பட்டிருக்கும் தீவின் வரைபடம் இன்றைக்கு ஏறக்குறைய 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஒன்று. இதனைத் தயாரித்தவர் பாதிரியார் பிலிப் பால்டெயூஸ் (Father Philip Baldaeus 1632-1672) என்ற பெயர் கொண்ட டச்சுக்காரர். இவர் சிலோன் டச்சு அரசில் சமயத்துறை அமைச்சராகவும் பதவி ஏற்றிருந்தவர். இவர் ஒரு கத்தோலிக்க கிருத்துவ சமயப் பள்ளியை யாழ்ப்பாணத்தில் நிறுவி நடத்தி வந்தார். கி.பி.17ம் நூற்றாண்டில் இலங்கைத் தீவை கைப்பற்றி வணிக ஆளுமையை நிலை நாட்ட பெரும் முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்ட டச்சு அரச படையுடன் இவரும் அங்குப் பயணித்து பின்னர் யாழ்ப்பாணப் பகுதியில் தங்கியதாகக் குறிப்புக்கள் சொல்கின்றன.

அவர் அன்றைய சிலோனில் தாம் பார்த்த, கேள்விப்பட்ட செய்திகளையும், பழகிய உள்ளூர் மக்களைப் பற்றியும், நடந்த நிகழ்வுகளையும் குறிப்பிட்டு தன் அனுபவங்களை ஆவணப்படுத்தியுள்ளார்.

மன்னார் தீவின் இன்றைய நிலவரைப்படத்தை ஏறக்குறைய ஒத்த வகையில் இந்த வரைபடம் அமைந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றே. இன்றைக்கு நமக்குக் கிடைக்கும் நில அளவைக் கருவிகள் இல்லாத போதிலும் அன்றைய வரைபட தயாரிப்பு கருதுகோள் மற்றும் நெறிமுறைகளைப் பின்பற்றி இந்த வரைபடம் வரையப்பட்டிருப்பதைக் காண்கின்றோம். தீவுக்குள் அன்றைய காலகட்டத்தில் இருந்த சில கட்டுமானங்களையும் இந்த வரைபடம் காட்டுகிறது. அதில் டச்சு கோட்டையும் சில தேவாலயங்களும் இருப்பதைக் காணலாம்.

பிரதி: தமிழ் மரபு அறக்கட்டளை
Thanks-thumi


மன்னார் தீவு வரை படம்-400 ஆண்டுகள் பழமைவாய்ந்த -படம் Reviewed by Author on February 25, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.