அண்மைய செய்திகள்

recent
-

இந்தியாவில் திடீர் தாக்குதல் - உயிரிழந்த படை வீரர்கள் எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு -


ஜம்மு-காஷ்மீரில் மத்திய ஆயுத பொலிஸ் படை வீரர்கள் சென்ற (Central Reserve Police Force) வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 18 வீரர்கள் உயிரிழந்துள்ளதோடு பலர் படுகாயமடைந்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மிரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர் – ஜம்மு நெடுஞ்சாலை வழியாக மத்திய ஆயுத பொலிஸ் படை வீரர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்கள்.
இதன்போது வாகனம் மீது பயங்கரவாதிகள் திடீரென வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இதில் 18 வீரர்கள் உயிரிழந்தனர்.
குறித்த வாகனத்தில் அதிகமான வீரர்கள் சென்றநிலையில் பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு
ஜம்மு காஷ்மீரில் மத்திய ஆயுத பொலிஸ் படை வீரர்கள் சென்ற வாகனத் தொடரணி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கண்டனம் வெளியிட்டுள்ளார்.
விடுமுறை முடிந்து மீண்டும் பணியில் இணைவதற்காக 2500 இற்கும் மேற்பட்ட வீரர்கள் 78 வாகனங்களில் தொடரணியாகச் சென்றுகொண்டிருந்தபோது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ” காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மிருகத்தனமான பயங்கரவாத தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.

இஹற்கு முன்னர் 1989 ல் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு என் இரங்கலை தெரிவிகின்றேன்” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமைச்சர் சாகல ரத்னாயக்கவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் திடீர் தாக்குதல் - உயிரிழந்த படை வீரர்கள் எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு - Reviewed by Author on February 15, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.