அண்மைய செய்திகள்

recent
-

போதைப் பொருட்கள் கடத்தலுக்கு எதிராக மன்னார் இளைஞர்கள் விழித்தெழ வேண்டும்-செல்வம் அடைக்கலநாதன் MP

மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப் பொருட்கள் எம் மாட்டத்தினூடாக வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு கேந்திர நிலையமாக மாறியுள்ளது. ஆகவே இந்த விடயத்தில் எமது இளைஞர்கள் விழிப்படைய வேண்டும். இந்த நிலையை மாற்றுவதற்கான சகல முயற்சிகளையும் இளைஞர்களாகிய நீங்கள் செயல்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழு பிரதித் தலைவரும், ரெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்
இவ்வாறு தெரிவித்தார்.

தமீழ் ஈழ இயக்கத்தின் (ரெலோ) பத்தாவது தேசிய மகாநாடு கடந்த வருடம்
செப்படம்பர் மாதம் 30,31ந் திகதிகளில் மட்டக்களப்பில் நடைபெற்றபோது இவ்
கட்சியின் யாப்பிலே திருத்தங்கள் கொண்டு வந்து இளையோர் அணி உருவாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (14.02.2019) மன்னாரில் இவ் இளையோர் அணி அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டபோது ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இங்கு தொடர்ந்து உரையாற்றும்போது

இளைஞர்களின் செயற்பாடுகள் எமது தேசத்தில் எப்படி இருந்தது எப்படி
இருக்கின்றது என்பதை இளைஞர்களாகிய உங்களுக்கு தெளிவுப்படுத்தவதே எமது முக்கிய நோக்கமாக இருக்கின்றது.

எங்களுடைய கட்சியின் முக்கிய நோக்கம் இளைஞர்கள் எதிர்காலத்தில் எமது
மக்களின் தேவைகள் எதிர்பார்ப்புகளை தீர்த்து வைப்பதில் முன்னெடுத்துச்
செல்ல வேண்டி தயார்படுத்தலே  எமது முக்கிய நோக்கமாக இருக்கின்றது.

இன்று சினிமா மோகம் கொண்டு எமது இளைஞர்கள் நடிகர்களுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்யும் அளவுக்கு எமது இளைஞர்கள் உருவாகி வருகின்றார்கள்.

எமது தேசத்திலே பலவிதமான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள், நிலங்களை மீட்டெடுப்பதற்கான போராட்டம்,
சிறையில் பல வருடங்களாக துன்பப்படும் எமது அரசியல் கைதிகளின்
விடுதலைக்கான போhராட்டம் இது இப்படியிருக்க இவ் விடயங்களில் எமது
இளைஞர்களின் பங்களிப்பு எப்படி இருக்கின்றது என்பதை சிந்திக்க
வேண்டியுள்ளது.

மன்னார் மாவட்டத்திலே விளையாட்டுத் துறையிலே உதைபந்தாட்டம் பேசப்படும் ஒரு விடயமாக இருக்கின்றது. இது எமது மன்னார் மாவட்டத்துக்கு பெருமை தேடித்தரும் இளைஞர்களின் பெருமையைக் காட்டுகின்றது.

இவ்வாறு பல விடயங்களில் மன்னார் மாவட்டத்தின் பெருமை எவ்வாறு
இருக்கின்றது என்பதை எமது இளைஞர்களுக்கு ஒரு எழுச்சியை ஏற்படுத்துவதே எமது இன்றைய இவ் கூட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கின்றது.

நாம் விளையாடியதோடு மட்டும் அல்லது தொழிலுக்கு சென்றுவந்து இருப்பதோ அல்லது படித்துவிட்டு தொழிலின்றி இருப்பதோ இவைகள் எமது இளைஞர்களை வேறு திசைகளுக்கு கொண்டு செல்லுகின்றது.

மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப் பொருட்கள் எம் மாட்டத்தினூடாக வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு கேந்திர நிலையமாக மாறியுள்ளது.

ஆகவே இந்த விடயத்தில் எமது இளைஞர்கள் விழிப்படைய வேண்டும். இந்த நிலையை மாற்றுவதற்கான சகல முயற்சிகளையும் இளைஞர்களாகிய நீங்கள் செயல்பட வேண்டும்.

அடுத்து மன்னார் மாவட்டத்தை நாம் நோக்கும்போது மனித புதைகுழிகளில் மாந்தை திருக்கேதீஸ்வர மனித புதைகுழிக்கு என்ன நடந்தது என இன்னும் தெரியிவில்லை. அத்துடன் மன்னார் சதொச மனித புதைகுழி தோண்ட தோண்ட சிறுவர்கள் பெரியோர்கள் கட்டப்பட்ட மனித எச்சங்கள் வெளி வந்து கொண்டுதான் இருக்கின்றன.

இதன் மூலம் மன்னார் மாவட்ட மக்கள் எவ்வாறு அடக்குமுறைக்கு
உள்ளாகியிருக்கின்றார்கள் என்பது வெளிச்சமாக இருக்கின்றது.

ஆகவே இளைஞர்களாகிய நீங்கள் சும்மா இருந்துவிட முடியாது. டில்லிக்குச்
சென்ற முன்னாள் ஐனாதிபதியும் தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான மகிந்த ராஐபக்ச தெரிவித்திருக்கின்றார் புலிகளே பொது மக்களை இங்கு கொன்று குவித்துள்ளனர் என்று.

இவ்வாறு பச்ச பொய்யை இனத் துவேஷத்தை அவர் காட்டி வரும் சந்தர்ப்பங்களை நாம் பார்த்து வருகின்றோம். இதை நாம் தொடர்ந்து அனுமதிக்க முடியாது.

எமது மக்கள் இந்த நாட்டிலே சுதந்திரமாக சம உரிமையோடு வாழ வேண்டும் என்று ஒவ்வொரு இளைஞனும் தங்கள் குடும்பங்களை மறந்து உற்றார் உறவினரை மறந்து தங்கள் உயிர்களை துச்சமென மறந்து போராடிய அந்த செயல்பாட்டை பிழையாக திரித்து கதைவிடுகின்றனர்.

இவர்கள் யாருக்கு சுதி சேக்கின்றார்களோ தெரியாது. இன்று ஐ.நா.சபையிலே
எமது மனித உரிமை மீறல் சம்பந்தமாக இன்றைய எதிர்கட்சித் தலைவர் அவரும் விசாரனைக்கு உட்பட்ட மனிதராக பட்டியலில் இருக்கின்றார்.

இவ்வாறு இரானுவமும் இருந்து வருகின்றது. எந்த அளவுக்கு ஐ.நா.சபை எமது வரலாற்றை படித்து இருக்கின்றது என்றால் அது எமது போராளிகளினதும் பொது மக்களின் தியாகமும்தான் ஐ.நா.சபையின் கதவை தட்டியுள்ளது. போராட்த்தில் குடும்ப ரீதியில் சில சமயம் சரி பிழை இருக்கலாம். ஆனால் அவற்றை இப்பொழுது கோடிட்டு காட்டுவது என்னை பொறுத்தட்டில் விரும்பதகாதொன்றாகும்.

இலங்கை அரசும் இராணுவமுமே எமது மக்களை கொன்று குவித்தது. எங்களுக்கும் விடுதலை புலிகளுகளுக்கும் பிரச்சனைகள் நடந்தது உங்களுக்குத் தெரியும்.

அடக்கு முறை ஒன்று உருவாகியபோது நாங்கள் கூறினோம் விடுதலை புலிகளை பலவீனப்படும் நிலைக்கு தள்ளப்படக் கூடாது என தெரிவித்திருந்தோம்.

ஏனென்றால் விடுதலைப் புலிகளும் நாங்களும்தான் ஒரே திசையில்
போராட்டங்களில் பயணித்தவர்கள். போராட்டங்களில் நாங்கள் பட்டியல் இட்டு சொல்லக்கூடாது என்பதே எங்கள் நோக்கம்.

மகிந்த துப்பாக்கிக்கு முன்பு வெள்ளைக் கொடிக்கு பூ வைத்தது போன்ற
கதையைத்தான் இப்பொழுது சொல்லுகின்றார். ஐ.நா.சபை இன்று கேள்வி கேட்டும் நிலைக்கு அவர் இருக்கின்றார். ஆகவே இளைஞர்களாகிய நாங்கள் அன்றாட எமது மக்களின் ஏழ்மையை போக்குகின்ற எமது விடுதலையை வென்றெடுக்கின்ற நிலையிலே எமது செயற்பாடு இருக்க வேண்டும்.

அது அகிம்சையாக இருக்கலாம் உண்ணாவிரதப் போராட்டமாக இருக்கலாம் அதில் எமது இளைஞர்கள் சாரி சாரியாக கலந்து கொண்டு எமது செயல்பாட்டை காட்ட வேண்டும் என்பது எமது அறிவுரையாகும்.

ஐல்லிக்கட்டு விளையாட்டில் ஒவ்வொரு இளைஞனும் தொடர்பாடல் மூலம் ஒன்றுசேர்ந்தார்கள். அவ்வாறு எமது இளைஞர்களும் எமது மக்களுக்கு என்ன செய்யவேண்டும் என்ற நோக்கமாக இருக்க வேண்டும். அதைவிடுத்து நான் அங்கத்தவனாக சேர்ந்து விட்டேன் என்று படம் காட்டிச் செல்வதல்ல.

நமது தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றும் சரியான பாதையிலே செல்லுகின்றது. மூன்று கட்சிகள் இன்றும் அந்த அமைப்பிலே இருந்து வருகின்றன. நாங்கள் விரும்பியிருந்தால் பேரவையுடன் இணைந்திருப்போம். நாங்கள் பேரவையுடன் இணைந்திருந்தால் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு இல்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பிரச்சனைகள் தோன்றினாலும் அவைற்றை
சீர்செய்து ஒற்றுமைக்குள் இருக்கும் கட்சியாக நாங்கள் இருக்கின்றோம்.

-மக்கள் சக்தியாக உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய சுட்டமைப்பை உடைப்பதற்கு
எவருக்கும் அனுமதி இல்லை. எமது தமிழ் மக்களின் விடிவுக்காகதான் தமிழ்
தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

ஆகவே நாம் அதனூடாகவே பயணிக்க வேண்டும். அன்று தமிழ் தேசிய
கூட்டமைப்புக்கு எத்தனை எதிரிகள். இன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சியை உருவாக்குகின்றார்கள். இவர்கள் தென்னிலங்கையை எதிர்பதில்லை. அரசை விமர்சிப்பதில்லை. மாறாக விமரிசனத்துக்கு உள்ளாகும் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பே.

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றும் மக்களை விலைபேசிபோகும் கட்சி அல்ல. இதை பலவீனப்படுத்துவதிலே நாங்கள் எங்களுக்குள் பிளவுபட்டு இருக்கின்றோம். ஆனால் நான் ஒன்றை ஏற்றுக் கொள்ளுகின்றேன். தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் ஓரிருவர் மட்டும் பேசுவதால் அவை பலவீனமாக செல்லுகின்றது.

இதனால் நாங்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் அனாவசியமான பேச்சுக்களை பேச வேண்டாம் என வலியுறுத்தி வருகின்றோம். நாம் சுதந்திரத்தை பெற்றுள்ளோம் என்ற உணர்வு எப்பொழுது எமக்கு தோன்றுகின்றதோ அப்பொழுதுதான் நாம் சுதந்திர தினத்தைக் கொண்டா முடியும்.

எமது தேசத்திலே இவ்வாறான நிலை இன்னும் உருவாகவில்லை. இதனால் இந்த விடுதலை வேட்கை இன்னும் எமக்கு தொடர்ந்து இருந்து வருகின்றது. எமது தேசத்தில் போராட்டம் இன்னும் தொடர்கிறது. இதை எவரும் கொச்சைப்படுத்தக் கூடாது.

நாங்கள் அரசை ஐனநாயக வழிக்கு கொண்டு வந்துள்ளோம் என்றால் அதற்கு நாங்கள் அடிமைசாஸ்திரம் எழுத்pக் கொண்டோம் அல்ல. இந்த தேசிய அரசாங்கம் முன்வைக்கும் எல்லா திட்டங்களுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆமா சாமி போடாது.

இந்த அரசாங்கத்துக்கு ஒரு இக்கட்டான நிலை உருவாகியபோது சர்வதேசம் ஒன்றாக இருந்து செயல்பட்டபோது சர்வதேசம் எங்களுக்கு ஒரு கோரிக்கை வைத்தது இந்த அரசியல் சாஸ்திரத்தையும் இனப்பிரச்சனையையும் தீர்க்க நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்ற அடிப்படையிலேதான் இந்த அரசை நம்பி செயல்படும் விடயம் அல்ல சர்வதேசத்தை நம்பி செயல்பட்ட விடயமாகும்.

சர்வதேசத்திடம் நாங்கள் நியாயம் கேட்கும் ஒரு சந்தர்ப்பத்தையே நாங்கள்
உருவாக்கியுள்ளோம். அதற்காகத்தான் இந்த அரசுடன் நாங்கள் ஒத்து
போகின்றோம்.

ஒன்றை நான் சொல்லுகின்றேன் அரசில் நாங்கள் தோற்றாலும் கூட
சர்வதேசத்திடம் நாங்கள் வென்று இருக்கின்றோம். அவர்கள் மூலம் நாங்கள்
விரும்புகின்ற சுதந்திரத்தை பெறுவதற்கான ஆணையை பெறக்கூடிய வாய்ப்புக்கு இடம்அளித்துள்ளோம் என்றார்.



போதைப் பொருட்கள் கடத்தலுக்கு எதிராக மன்னார் இளைஞர்கள் விழித்தெழ வேண்டும்-செல்வம் அடைக்கலநாதன் MP Reviewed by Author on February 15, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.