அண்மைய செய்திகள்

recent
-

Brexit புதிய கருத்துக்கணிப்பில் திடீர் திருப்பம் -


பிரெக்ஸிற் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்த வேண்டும் என்று பெரும்பான்மை மக்கள் விருப்பம் தெரிவித்து இருப்பது பிரித்தானியாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது என பிரித்தானியா 2016 ஆம் ஆண்டு முடிவு எடுத்தது.

அப்போது நடந்த பொது வாக்கெடுப்பில், பெரும்பான்மை மக்கள் அரசின் முடிவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா முறைப்படி விலகுவதற்கான பிரெக்ஸிற் நடவடிக்கையை பிரதமர் தெரேசா மே முன்னெடுத்து வருகிறார்.
இதையொட்டி அவர் ஐரோப்பிய கூட்டமைப்புடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை பிரித்தானிய நாடாளுமன்றம் நிராகரித்து விட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் 14 ஆம் திகதி ஒரு பிரேரணை முன்னெடுக்கபட உள்ளது.

இந்தநிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதில் மக்கள் விருப்பம் எப்படி இருக்கிறது என்பதை அறிய ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
அதில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது. கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 53 சதவீதம் பேர் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதை பிரித்தானியா தாமதப்படுத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி ஒன்று, இரண்டாது பொது வாக்கெடுப்பு நடத்தலாம் அல்லது பிரசல்சில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தலாம்.

இதற்கு வழிவிட்டு பிரதமர் தெரேசா மே, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்த வேண்டும் என்று பெரும்பான்மை மக்கள் விருப்பம் தெரிவித்து இருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், 49 சதவீத மக்கள், ஒப்பந்தம் இன்றி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரித்தானிய வெளியேறினால் அது பேரழிவை ஏற்படுத்தி விடும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Brexit புதிய கருத்துக்கணிப்பில் திடீர் திருப்பம் - Reviewed by Author on February 11, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.