அண்மைய செய்திகள்

recent
-

கனடாவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட எச்சரிக்கை!


கனடாவில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிக்கு சிறப்பு காலநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரொரன்டோ மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் நாளை பலமான காற்று வீசும் என கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
பலத்த காற்று ரொரன்டோவை தாக்குவதுடன் பாரிய சேதங்களையும் ஏற்படுத்தும் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 90 முதல் 110 கிலோமீற்றர் வரையிலான வேகத்துடன் பலத்த காற்று வீசும்

இதன் காரணமாக கட்டடங்களின் கூரைகள், ஜன்னல்கள் என்பனவற்றுக்கு பாதிப்பு ஏற்படும். மரங்கள், கம்பங்கள் முறிந்து வீழ்வதால் மின்விநியோகம் தடைப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாளையதினம் கடுமையான பனிப்பொழிவு பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அது ஐந்து சென்ரிமீட்டர் வரையில் உயரும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எச்சரிக்கை குறித்து ரொரன்டோ மற்றும் அதனை சூழவுள்ள மக்கள் மிகுந்த அவதானமாக செயற்படுமாறு கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
கனடாவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட எச்சரிக்கை! Reviewed by Author on February 24, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.