அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைக்கு இனியும் காலஅவகாசம் கொடுக்காதீர்கள்! சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை -


“ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தினை நிறைவேற்றுவதிலோ, போர்க்குற்ற விசாரணையை நடாத்துவதிலோ அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது.” என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு உரிய மாற்று நடவடிக்கைகளை காலம் தாமதிக்காமல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மேற்கொள்ள வேண்டும்.

மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு மீண்டும் கால அவகாசம் வழங்குவதானது மனித உரிமைகள் சபை தன்னைத்தானே ஏமாற்றுவது மாத்திரமல்லாது பாதிக்கப்பட்ட மக்களையும் ஏமாற்றுவதாகவே அமையும்.

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலயம் வடக்கு, கிழக்கில்அலுவலகங்களை திறக்க வேண்டும்.
2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை அமுல்படுத்துவதற்கு மனித உரிமைகள் பேரவையும் சர்வதேச சமூகமும் தேவைக்கு அதிகமாகவே சகல விதமான ஒத்துழைப்புக்களையும் வழங்கி நெகிழ் தன்மையைக் காட்டியுள்ளன.

எனினும், இவற்றைத் துஷ்பிரயோகம் செய்யும் விதமாகவே இலங்கை அரசங்கத்தின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
இழைக்கப்பட்ட குற்றங்களை மறந்துவிடுவதுடன், விசாரணை எதுவும் தேவை இல்லை என பிரதமர் கூறியமை மக்களின் நம்பிக்கையீனத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.” என அவர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கைக்கு இனியும் காலஅவகாசம் கொடுக்காதீர்கள்! சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை - Reviewed by Author on February 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.