அண்மைய செய்திகள்

recent
-

விமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு எந்த நாட்டு குடியுரிமை?


விமான பயணம் என்பது இன்றும் பலருக்கும் ஆச்சரியமான ஒன்றாகவே உள்ளது.

மின்னல், சூறாவளி, பறவைகள் போன்றவை தாக்காதவாறு தற்போதைய விமானங்கள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் உள்ளன.
விமானத்தில் உள்ள சில ஆச்சரியமான தகவல்கள் பற்றி பார்ப்போம்,
விமானிகள் இருக்கும் அறை ‘காக்பிட்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் மற்றவர்கள் அவ்வளவு சீக்கிரம் நுழைந்து விட முடியாது. இந்த கதவை திறக்க சீக்ரெட் கோட் நம்பர் உண்டு. ஒவ்வொரு பயணத்திலுமே இந்த எண் மாற்றப்படும்.

விமானம் பறக்கும் போது யாராவது இந்த எண்ணை அழுத்தி நுழைய முயன்றால் கேமரா மூலம் பைலட் தெரிந்து கொள்வார். ஊழியர் என்றால் அனுமதிப்பார். மற்றவர்கள் என்றால் கதவை திறக்க முடியாத அளவிற்கு லாக் செய்து கொள்ளும் வசதி காக்பிட்டில் உண்டு.
அதிக உயரத்தில் பறக்கும் போது ஆக்சிஜன் மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டியதிருக்கும். அதில் சில சிரமங்கள் ஏற்படலாம் என்பதற்காகவே தாடி, மீசையுடன் பைலட்டுகளை விமானங்களை இயக்க அனுமதிப்பதில்லை.
குறிப்பிட்ட உயரத்தை அடைந்ததும் விமானம் இயக்க அதிக சக்தி தேவைப்படாது. மலைப்பகுதியில் இறங்கும் வாகனங்கள் போல குறைவான ஆற்றலே இதற்கு போதுமானது. விமானத்தில் நான்கு இஞ்சின்கள் இருக்கும். எனவே நடுவானில் பழுதாகிவிட்டால் விபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் தேவையில்லை.

நடுவானில் குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு எந்த நாட்டு குடியுரிமை வழங்கப்படும் என்று எண்ணம் பலருக்கும் ஏற்படும். இதை மூன்று வகையில் தீர்மானிக்கிறார்கள்.
பதிவு பெற்ற விமானத்தின் நாடு, எந்த நாட்டின் மேலே பறக்கிறதோ அந்த நாடு அல்லது எந்த நாட்டில் தரையிறங்குகிறதோ அந்த நாடு என்ற விதிமுறையை உருவாக்கி இருக்கிறார்கள். பெரும்பாலும் விமானம் பதிவு செய்யப்பட்ட நாடே கணக்கிடப்படுகிறது.

விபத்து ஏற்பட்டால் மிதமான வேகத்தில் பறக்கும் விமானத்தில் இருந்தே பாராசூட்டில் குதிக்க முடியும். மேலும் 16 ஆயிரம் அடிக்கு குறைவாக இருந்தால் மட்டுமே பாராசூட்டுடன் வெளியேற முடியும். விமானத்தில் கடைசி 5 இருக்கையில் இருப்பவர்களுக்கு விபத்துகளில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு 50 சதவீதம் உள்ளது.

விமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு எந்த நாட்டு குடியுரிமை? Reviewed by Author on February 14, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.