அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பேசாலை-உயிருக்கு அச்சுறுத்தல் என மனித ஆணைகுழுவில் புகார்


மன்னார் பேசாலை 8 வட்டாரம் பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ எட்னா டயஸ் என்பவர் தனக்கும் தன்னுடையா மூன்று பிள்ளைகளுக்கும் உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் எனவே பாதுகாப்பை உறுதி படுத்த கோரியும் மனித உரிமை ஆணைகுழுவின் மன்னார் உப காரியாலயத்தில் வாய்மொழிமூலம் முறைப்பாடு தெரிவித்துள்ளார்

கடந்த 2008 ஆம் ஆண்டு பேசாலை பாடசாலைக்கு அருகில் இலங்கை கடற்படையினரால் குறித்த பெண்னின் கணவன் கைது செய்யப்பட்டு காணமல் ஆக்கப்பட்டார் குறித்த காணாமல் ஆக்கப்பட்ட விடயம் தொடர்பான வழக்கானது மன்னார் உயர் நீதிமன்றத்திலும் தற்போது நீதவான் நீதிமன்றத்திலும் விசாரணையில் உள்ளது.

 இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணியளவில் குறித்த பெண்மனியின் வீட்டுக்குள் தங்களை புலனாய்வாலர்  என அடையாளப்படுத்திக்கொண்டு சந்தேகத்திற்கு இடமான சிலர் வீட்டுக்குள் நுழைய முற்பட்டதாகவும் தாம் கதவை திறக்க மறுத்ததாகவும் பின்னர் குறித்த நபர்கள் கதவை உடைக்க முற்பட்டபோது தாம் பயத்தில் கதவை திறந்ததாகவும் 9 பேர்  தங்கள் வீடு முழுவதும் சூழ்ந்து கொண்டு வீட்டுக்குள் ஆயுதம் புதைக்கப்பட்டுள்ளது எனவே பரிசோதனை செய்ய வேண்டும் என குறியதாகவும் உடனே தான் அச்சத்தில் சத்தம் இட்டு கத்தியதால் அக்கம் பக்கதினர்  மற்றும் அருட்தந்தை சம்பவ இடத்திற்கு வருகை தந்ததாகவும் பின்னர் குறித்த சந்தேக நபர்கள் தாங்கள் குறித்த வீட்டில் போதை பொருட்கள் உள்ளனவா என சோதனை செய்வதற்காக வந்ததாக பொது மக்களிடம் தெரிவித்துள்ளனர் எனினும் சந்தேகம் அடைந்த மக்கள் பொலிஸ்க்கு தகவல் வழங்கியுள்ளனர்

குறித்த பெண்ணின் கணவன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு வருகின்ற 15 திகதி மன்னார் உயர் நீதி மன்றத்தில் நடைபெற உள்ள நிலையில் இவ்வாறன அச்சுறுத்தலால் தனக்கும் தனது பிள்ளைகளுக்கு உயிர் ஆபத்து காணப்படுவதாகவும் எனவே தங்களுக்குரிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தி தறுமாறு மனித உரிமை ஆணைகுழுவின் மன்னார் மாவட்ட உப காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றை வாய்மொழிமூலம் மேற்கொண்டுள்ளார் அவ் வாய்மொழி முறைப்பாட்டை எழுத்து மூழமாக தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

கடந்த பல வருடங்களாக குறித்த பெண்ணின் வீட்டில் இனம் தெரியாத நபர்களால் இரவு நேரங்களி கல் வீசப்படுவது கண்ணாடிகள் உடைக்கப்படுவது கதவை தட்டுவது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம் பெற்று வந்தமை குறிப்பிடதக்கது.



மன்னார் பேசாலை-உயிருக்கு அச்சுறுத்தல் என மனித ஆணைகுழுவில் புகார் Reviewed by Author on February 14, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.