அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் இரணைதீவு மக்கள் குடி நீர் இல்லாமல் அவதி- படங்கள்

கடந்த வருடம் சித்திரை மாதம் கிளிநொச்சி இரணைமாத நகரில் இருந்து 200 க்கு மேற்பட்ட படகுகளில் இரணைதீவு மக்கள் தங்கள் பூர்விக கிராமமான இரணைமாத நகருக்கு சென்றனர்.

யுத்ததின் காரணாமாக இரணைதீவு மக்கள் தங்களுடைய பூர்விக கிராமமான இரணைதீவில் இருந்து கடற்படையினறால் கட்டாயத்தின் பெயரில் அப்புறப்படுத்தப்பட்டு இரணை மாதா நகரில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டனர்.

குடியமர்த்தப்பட்டு பலவருடங்கள்  யுத்தம் முடிவடைந்து பலவருடங்கள் ஆகியும் தங்கள் பூர்விக கிராமமான இரணைதீவில் தாங்கள் குடியேற்றப்படவில்லை என தெரிவித்து பல நாட்கள் போராட்டத்தை மேற்கொண்டு இறுதியில் அரச அனுமதி இன்றி 200 படகுகலில் இரணைமாத நகரில் இருந்து இரணை தீவில் சென்று குடியேறினர்.

குடியேறி ஒரு வருடம் கடக்க போகின்ற நிலையில் இன்னும் குறித்த மக்கள் அரசாங்கத்தினாலோ அரச அதிகாரிகலாலோ பார முகமாக நடத்தப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்

தாங்கள் குடியேறிய பின்னரும் இதுவரை குடிநீர் வசதியோ.. போக்குவரத்து வசதியோ... மருத்துவ வசதியோ... அரசங்கத்தினால் செய்து தரப்படவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த பிரதேசத்தில் எல்ல கிணறுகளில் உள்ள தண்ணீர் உவர் தண்ணீயாக காணப்படுவதனால் அதனை பருகமுடியாத நிலையில் தாங்கள் இருப்பதாகவும் கடற்படையினரால் மூன்று நாட்களுக்கு ஒரு முறை 5 லீற்றர் தண்ணீர் வழங்கப்படுவதகவும் அதுவும் எப்போதவது தருகின்றனர் என தெரிவிகின்றனர்.

அதே நேரத்தில் அவசர நிலமையோ எதும் திடீர்சுகயீனம் ஏற்படும் போது முதலுதவியோ அவசர சிகிச்சையோ வழங்குவதற்கான எந்த ஏற்பாடும் செய்து தரப்படாததனால் தாங்கள் அச்ச நிலையில் வாழ்வதாக தெரிவிக்கின்றனர்.

அதோ போன்று முழுமையாக மின்சார வசதி இல்லாமையால் இரவு நேரங்களில் தொழிலுக்கு செல்வதற்கும் இரவு நேரங்களில் நடமாடுவதும் ஆபத்தாக அமைவதாக கண்ணீருடன் தெரிவிக்கின்றனர் .

தங்கள் குறைகளை கேட்பதற்க்கு அரச அதிகாரிகளோ கிராம சேவகர்களோ இரணைதீவிற்குள் வருவது அரிதிலும் அரிதாக காணாப்படுவதாக குற்றம் சும்த்துகின்றனர்.

எனவு தற்காலிக கொட்டில்களில் வசிக்கும் குறித்த மக்கள் தாங்கள் பூர்விக கிராமத்தில் குடியேறிவிட்டோம் என்ற ஒரே ஒரு சந்தோஸத்தில் ஏனைய அனைத்து துன்பங்களையும் தாங்கி வாழ்கின்றனர்.எனவே சம்மந்த பட்ட அதிகாரிகள் எங்கள் வீடுகள் அமைத்துதராவிட்டாலும் தங்களின் அடிப்படை தேவைகளையாவது பூர்த்தி  செய்து தர நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும் என கோரிக்கை முன் வைக்கின்றனர்.

அதே நேரத்தில் குறித்த மக்களின் பிரச்சினை தொடர்பாக அறிந்து கொள்வதற்காக நேற்றைய தினம் மன்னார் சமூக மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பக அதன் குழு தலைவர் ஜாட்சன் தலைமையில் குழு ஒன்று விஜயம் செய்தமை குறிப்பிடதக்கது.












மன்னார் இரணைதீவு மக்கள் குடி நீர் இல்லாமல் அவதி- படங்கள் Reviewed by Author on February 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.