Top Ad unit 728 × 90

அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கீரி சுற்றுலா கடற்கரையை காணவில்லையாம்-சுற்றுலாப்பயணிகள் முறைப்பாடு…-படங்கள்….மன்னார் மாவட்டத்தின் அழகான பல பிரதேசங்கள் அதன் அழகினை இழந்து வருகின்றது அதை யாரும் கணக்கில் கொள்வதாக தெரியவில்லை காரணமும் புரியவில்லை ஏன் இந்த நிலை தொடர்கின்றது…

மன்னார் பிரதான சுற்றுலாத்தளங்கள் 12ற்கு மேல் உள்ளது ஒவ்வொன்றும்  ஒவ்வொரு கட்டத்தில் உள்ளது கவனிப்பாரற்ற நிலையில் தான் கிடக்கின்றது  பெயர் தாங்கிய பலகைகள் விளம்பரப்பலகைகள் மட்டும் தான் உள்ளதே தவிர அந்த சுற்றுலாத்தளங்கள் அசுத்தமாகவும் அலங்கோலமாகவும் தான் காட்சியளிக்கின்றது. அங்கு நடக்கும் நாசகாரியங்களும் வேறு…
அவ்வாறனதொரு சுற்றுலாப்பயணிகள் அதிகம் வரும் அழகிய கடற்கரை கீரி கடற்கரை தான்

இக்கடற்கரையான வடமாகாண முதலமைச்சின் நிதிப்பங்களிப்பில் சுமார் 3.51மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டு மாண்புமிகு முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் 02-05-2017  சம்பிரதாய பூர்வமாக மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்து.
KEERI BEACH- இவ் கீரி சுற்றுலா கடற்கரையானது மன்னார் நகரசபையின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது ஆரம்பத்தில் சில மாதங்கள் அழகான முறையில் காவலர்கள் கண்காணிப்பில் இருந்த கடற்கரையானது இப்போது பாழடைந்த நிலையில் இருக்கின்ற ஆசனங்கள் உடைக்கப்பட்டும்  மின்விளக்குகள் உடைக்கப்பட்டும் குறித்த பகுதியை தவிர ஏனைய இடங்களில் கழிவுகளும் பொலித்தீன்களுமாய் துப்பரவற்று காணப்படுகின்றது சுற்றுலாப்பயணிகள் வந்து போகின்ற சுற்றுலாக்கடற்கரையானது இவ்வாறு இருப்பது நல்லாவா இருக்கின்றது கடற்தொழில் செய்யும் பகுதிபோல் அல்லவா இருக்கின்றது.
02வருடங்கள் கடந்தும் இன்னும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை…

மன்னார் மற்றும் ஏனைய மாவட்டங்களிலும் வெளிநாடுகளிலும் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கும்  உடைகள் மாற்றி குளிப்பதற்கும்(இருக்கும் அறை பூட்டியுள்ளது) கொஞ்சம் ஓய்வாக இருப்பதற்கும் இருந்த ஆசனங்கள் உடைக்கப்பட்டுள்ளது நிழற்குடைகள் இல்லை மின்விளக்குகளும் உடைக்கப்பட்டுள்ளது.
ஏன் இப்படி நடக்கின்றது என்று வினாவினாலும் அந்தப்பகுதி மக்களின் கருத்து  யார் என்று எங்களுக்கு தெரியவில்லை இரவில் சில தவறான செயற்பாடுகள் நடைபெறுகின்றது அவர்களின் செயற்பாடுகளுக்கு இடைஞ்சலாக இருக்கின்ற மின்விளக்குகள் உடைக்கப்பட்டுள்ளது சோலர் மின் இயந்திரப்பகுதியும் களவாடப்பட்டுள்ளது ஏன் இப்படிச்செய்கின்றார்கள் என்று தெரியவில்லை…அவர்கள் யாராக இருந்தாலும் இனிவருங்காலங்களில் ஆவது இவ்வாறன இழிவான செயல்களை நிறுத்த வேண்டும்.

பலர் பலனடையும் நல்ல திட்டங்கள் இவ்வாறன  ஒரு சிலரின் தவறான எண்ணத்தினாலும் இழிவான செயலினாலும் பல மக்கள் ஏமாற்றம் அடைகின்றார்கள் சிந்தித்துப்பாருங்கள்.

இப்படி உடைப்பதால் இதையே காரணம் காட்டி பல அபிவிருத்தி திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன அந்த திட்டங்கள் வேறு மாவட்டங்களுக்கு சென்றுவிடும் உணருங்கள் நீங்கள் யாராக இருந்தாலும் இருக்கும் இடம் நலமாக இருக்கவேண்டும். என்ற நல்லெண்ணம் உருவாகட்டும் உள்ளத்தில்.

மன் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் பின்னால் உள்ள குளப்பகுதியிலும் சுற்றுவட்டத்தில் அமைக்கப்ட்டுள்ள ஓய்வு ஆசனங்கள் உடைக்கப்பட்டு குளத்திற்குள் வீசப்பட்டுள்ளதுடன் கற்கள் கூழங்களாகவும் துப்பரவற்று காணப்படுகின்றது.(சிறுவர்கள் அதிகம் புழங்கும் பகுதியாகும்)
மரக்கூட்டில் முள்ளுமரங்கள் முளைத்துள்ளது அதையும் அழகு படுத்துங்கள் உடைக்கப்பட்ட ஆசனங்களை  திருத்தி மக்களின் பாவனைக்கு உகந்ததாக அமையுங்கள் பொறுப்பினை மாதர் சங்கம் மக்களிடம் கையளியுங்கள்.

கீரி கடற்கரையில்  இவற்றினை செய்யலாம்
 • உடைக்கப்பட்ட ஆசனங்களுக்கு பதிலாக புதிய ஆசனங்களை அமையுங்கள்.
 • வாகனங்கள் நிறுத்துவதற்கு தரிப்பிட வசதி அமைத்தல்
 • மலசல கூடம் மற்றும் குளியில் அறைகள் அமைக்கலாம்
 • கடற்கரையில் வளரக்கூடிய மரங்கள் வளர்த்தல் கண்டல் மரங்கள் சவுக்கு மரங்கள் இன்னும்(ஒரு சிலரின் தவறான செயல்பாட்டினால்  ஏற்கனவே இருந்த தாளை மரங்கள் அகற்றப்பட்டுள்ளது.)
 • நிழற்குடைகள் அமைக்கலாம்
 • குறிக்கபட்ட பகுதியில்….
 • சிறுவர் விளையாடுவதற்காக பூங்கா அமைக்கலாம்
 • சிறுவர் விளையாடுவதற்கு ஏற்றவாறு  நல்ல மணல் மேடை அமைக்கலாம்.
 • கடல் பொருட்கள் காட்சியகம் அமைக்கலாம்
 • உடற்பயிற்சி செய்யக்கூடிய பகுதியை உருவாக்குதல்
 • (ஏறுதல்-பாய்தல்- ஓடுதல் போன்று)

இவற்றினைப்போல் இன்னும் பல செயற்திட்டங்கள் செய்யலாம் இவற்றினை உரிய முறையில் பராமரிப்பதற்கு ஒருவரையோ இருவரையோ நியமிக்கலாம் அவருக்கான சம்பளத்தின் ஒரு பகுதியை குறைந்த கட்டணம் அறவிடுவதன் மூலம் நிவர்த்தி செய்யலாம் அல்லவா…

காரைநகர் கரிசூனா கடற்கரை போல அந்தப்பகுதி மக்களுக்கு கட்டணம் இல்லை ஏனைய மாவட்டத்தினருக்கும் வெளிநாட்டவர்களுக்கும் பணம் அறவிடப்படுகின்றது அழகாக பேணப்படுகின்றது.
மன்னார் மாவட்டம் எல்லாவற்றிலும் பின்தங்கிய மாவட்டம் என்று மற்ற மாவட்ட மக்கள் சொல்வது போல நாமும் சொல்லிக்கொண்டு இராமல் மற்ற மாவட்டங்களைவிட முன்னுதாரன மாவட்டமாக கொண்டுவரவதற்கு என்ன செய்யலாம் என்பதை சிந்திப்போம் செயலாற்றுவோம்.

மன்னார் நகர சபை உறுப்பினர்களே(பண்டிகைக்கால கடைத்தொகுதி நிதியுள்ளது) பாராளுமன்ற உறுப்பினர்களே அமைச்சர்களே இவ்வாறான சின்ன செயற்பாடுகளுக்கும் நிதியில்லை என்று சாக்குப்போக்கு சொல்லிக்கொண்டு காலம் கழிக்காமல் விரைந்து செயற்படுங்கள்….
நீங்கள் செய்ய ஆரம்பியுங்கள்….மன்னார் மாவட்டத்தில்
என்னவெல்லாம் செய்ய இருக்கின்றது என்ற பட்டியலை நாம் தருகின்றோம்…


ஏற்கனவே செய்த வேலைத்திட்டங்களை திரும்ப திரும்ப காட்டிக்கதைப்பதால் புதிதாய் செய்யப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் செய்யப்படாமலும் ஒதுக்கப்படுகின்ற நிதி மீண்டும் திறைசேரிக்கு சென்று அது இன்னுமொரு மாவட்டத்தின் அபிவிருத்தியாக எழுந்து நிற்கின்றது எமது மன்னார் விழுந்தே கிடக்கின்றது…..

சிந்திப்போம் செயலாற்றுவோம்……

-மன்னார்விழி-

மன்னார் கீரி சுற்றுலா கடற்கரையை காணவில்லையாம்-சுற்றுலாப்பயணிகள் முறைப்பாடு…-படங்கள்…. Reviewed by Author on February 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.