அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பூரண ஹர்த்தால்-படங்கள்

மீண்டும் இலங்கை அரசாங்கத்திற்கு இரண்டு வருட கால அவகாசம் கொடுக்க கூடது எனவும் காணமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் சர்வதேச சமூகம் தலையிட்டு காத்திரமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனும் கோரிக்கையின் அடிப்படையில் வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று திங்கட்கிழமை 25-02-2019 கிளிநொச்சியில் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும், வர்த்தகர்களும் போக்குவரத்து ஊழியர்களும் பூரண ஆதரவை வழங்கியுள்ளனர்.

குறிப்பாக மன்னார் பஸார் பகுதியில் உள்ள அணைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளது.தமிழ்,முஸ்ஸீம் வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர்.

மன்னாரில் இருந்து அரச மற்றும் தனியார் பேரூந்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதோடு,எவ்வித சேவைகளும் இடம் பெறவில்லை.இதன் காரணமாக வங்கிகள் மற்றும் அரச திணைக்களங்களில் பலவற்றில்பொதுமக்கள் வருகை மிகவும் குறைவாகவே இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தன.
பாடசாலைகளுக்கு குறிப்பிட்ட அளவு மாணவர்கள் சென்றுள்ள போதும்,போக்குவரத்து சேவைகள் இல்லாமையினால் அதிகாளவிலான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்குச் செல்லவில்லை.

மேலும் மன்னாரில் உள்ள அரச தனியார் அலுவலங்களுக்கும் பணியாளர்கள் சமூகமளிக்கவில்லை.இதனால் மன்னார் முழுவதும் இயல்பு நிலை பாதிப்பு அடைந்துள்ளதோடு,மன்னாரில் பூரண ஹர்த்தால் அனுஸ்ரிக்கப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் பஸார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையம் உணவகங்கள் மூடப்பட்டுள்ளது.






















மன்னாரில் பூரண ஹர்த்தால்-படங்கள் Reviewed by Author on February 25, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.